நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
புதிய BIS சட்டத்தின் கீழ் ஹால்மார்க் ஒழுங்குமுறைகளை கொண்டுவருவதற்கு நுகர்வோர் நலன் துறை முயற்சி செய்கிறது
BIS ஏற்பாடு செய்த “Standards Make Cities Smarter” என்ற கருத்தரங்கை திரு ராம் விலாஸ் பஸ்வான் தொடங்கி வைத்தார்.
இந்திய தர நிலை கழகம், 48ஆவது உலக தர நிலை தினத்தை கொண்டாடுகிறது.
Posted On:
03 NOV 2017 4:17PM by PIB Chennai
புதிய இந்திய தர நிர்ணய (BIS) சட்டம்-2016ன் கீழ் ஹால்மார்க் ஒழுங்குமுறைகளை கொண்டுவருவதற்கு நுகர்வோர் நலன் துறை செயல்பட்டு வருவதாக மத்திய
நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் அமைச்சர், திரு ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார். ஹால்மார்க் ஒழுங்குமுறைகள் அடிப்படையில் தங்க நகைகளின் தர நிலைகள் மூன்று விதமாக மட்டுமே அதாவது, 14, 18 மற்றும் 22 காரட்கள் என்று வகைப்படுத்தப்படும். 48ஆவது உலக தரநிர்ணய தினத்தையொட்டி, இந்திய தர நிலை கழகம் இன்று புது தில்லியில் ஏற்பாடு செய்திருந்த, “Standards Make Cities Smarter” என்ற கருத்தரங்கை தொடங்கி வைத்த திரு ராம் விலாஸ் பாஸ்வான் இதனைத் தெரிவித்தார். நுகர்வோர் பாதுகாப்பிற்கு மிகுந்த முக்கியத்துவம் தந்த திரு பஸ்வான், புதிய நுகர்வோர் பாதுகாப்பு முறைகள் மற்றும் BIS சட்டம் மூலம் இது மேம்படுத்தப்படும் என்றார்.
ஸ்மார்ட் நகரங்களுக்கான ஒருங்கிணைந்த, பாதுகாப்பான, நெகிழ்வுதிறன் கொண்ட தகவல் தொழில்நுட்ப பின்புலத்திற்கான முன் - தரநிலை அறிக்கையை திரு ராம் விலாஸ் பாஸ்வான் வெளியிட்டார். ஸ்மார்ட் நகரம் ஒன்றை கட்டியெழுப்புவது மிகவும் சிக்கலான பணியாகும் என்றார் திரு பாஸ்வான். அவை தனித்த சவால்களை அளிப்பதாகவும் இந்தப் பணியை எளிதாக்க தர நிர்ணயங்களே பொதுவான காரணியாக அமைகின்றன. தேசிய தர நிலைகள் ஸ்மார்ட் நகரங்களை பாதுகாப்பானதாகவும் சுமூகமாக செயல்படவும் உதவுகின்றன. அதுமட்டுமின்றி இது எரிசக்தியை திறனுடன் பயன்படுத்தும் கட்டிடங்கள், அறிவுபூர்வமான போக்குவரத்து, மேம்பட்ட கழிவு மேலாண்மை ஆகியவை உள்ளடங்கிய நகர வாழ்க்கையின் அனைத்து அம்சங்களுக்கும் முக்கியமான வழிகாட்டலை வழங்குகிறது. இதன் மூலம் நீடித்திருக்கும் சமூகங்களை உருவாக்குகிறது என்றார் அவர்.
நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் மத்திய இணை அமைச்சர் சி.ஆர்.சௌத்ரி, சர்வதேச ஒத்துழைப்பை பெறுவதற்கு தரநிலைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். வளஆதாரங்களை நிர்வகிப்பதில் தொடங்கி வாழ்க்கைப் பாதுகாப்பு மற்றும் அதன் தரத்தை உயர்த்துவது வரையிலான இன்றைய தினம் உலகம் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கான நடைமுறைக் கருவிகளை தரநிலைகள் வழங்குவதாக அவர் குறிப்பிட்டார். வர்த்தக நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் பொதுவான தர நிலைகளை உருவாக்குதில் பிரதேச அளவிலான தர நிர்ணய பணியில் BIS இன் தீவிரமான பங்களிப்பை திரு சௌத்ரி பாரட்டிப் பேசினார்.
முன்னதாக, நுகர்வோர் நலன் துறையின் செயலர் திரு அவினாஷ் கே. ஸ்ரீவஸ்தவா, தனது முக்கிய உரையில், மாறிக்கொண்டிருக்கும் சூழல்கள் குறித்தும், அதனைச் சார்ந்து உள்நாட்டிலும் உலக அரங்கிலும் BIS ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
இந்த ஆண்டின் உலக தரநிர்ணய தினத்திற்கான கருப்பொருள் “Standards Make Cities Smarter” என்பதை, தரநிர்ணயத்திறகான சர்வதேச அமைப்பு (ISO), சர்வதேச மின் - தொழில்நுட்ப கமிஷன் (IEC), சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) ஆகியவை இணைந்து தேர்ந்தெடுத்தன.
*****
(Release ID: 1509425)
Visitor Counter : 201