கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

கப்பல் கட்டுமான நிதி உதவிக் கொள்கை

புதுப்பிக்கப்பட்ட மென்பொருளையும் நடைமுறைப்படுத்தலை எளிதாக்கும் மேம்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களையும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது

Posted On: 01 NOV 2017 7:32PM by PIB Chennai

மத்திய அரசின் முழுமுனைப்பானஇந்தியாவில் செய்யுங்கள் ‘ ( மேக் இன் இந்தியா ) திட்டத்தை முன்னேற்றவும், வெளிநாட்டுக் கப்பல் துறைகளுக்கு இணையான நிலைத்தளத்தை அளிப்பதன் மூலம் உள்நாட்டுக் கப்பல் கட்டுமானத்தை ஊக்குவிக்கவும் டிசம்பர்  2015 இல் இந்தியக் கப்பல் போக்குவரத்துத் துறைகளுக்கான கப்பல் கட்டுமான நிதி உதவிக் கொள்கைக்கு இந்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இந்தக் கொள்கையானது, 01. 04. 2016 முதல் 31. 03. 2026 வரையில் ( இந்த இரு நாட்களும் உட்பட ) பெறப்பட்ட ஒப்பந்தங்களுக்கு    10 ஆண்டுகளுக்கான நிதி உதவியாக ரூ. 4,000 கோடியைக் கப்பல் கட்டும் துறைகளுக்கு வழங்குகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்காக விண்ணப்பங்களைச் செயல்படுத்த ஜூன் 2016 இல் தொடங்கப்பட்ட முந்தைய இணைய விண்ணப்பங்கள் தொடர்பாகச் சில பிரச்சினைகளை ஷிப்யார்ட்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியாஎழுப்பியுள்ளது. பங்குதாரர்களுடன் தொடர் கலந்துரையாடல்களை நிகழ்த்தியதன் விளைவாக இப்போது, மேம்படுத்தப்பட்ட இணைய விண்ணப்பம் ஒன்றினைத் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களுடன் இணைத்து, இந்தக் கொள்கையின் கீழ் விண்ணப்பிப்பதற்காகக் . கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, இந்தக் கொள்கையின் கீழ் விண்ணப்பிப்பதற்காகக் கப்பல் கட்டும் துறைகளுக்கு நிறைந்த எண்ணிக்கையிலான நாட்கள் இப்போது கிடைத்துள்ளன. அதுபோலவே, மதிப்பீட்டு அறிக்கைகளைப் பெறவும் ஒப்படைக்கவும் காலஅவகாசம் கிடைத்துள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட இணைய விண்ணப்பமானது, கப்பல் ஒன்றினை மதிப்பீடு செய்வதற்காகச் சர்வதேச மதிப்பீட்டாளர்களுக்கு ஒரு பரந்த வாய்ப்பினையும் உருவாக்கியுள்ளது.

மேம்படுத்தப்பட்டுள்ள இந்த இணைய விண்ணப்பம், மும்பையிலுள்ள கப்பல்துறை இயக்குனரகத் தலைவரால் நிர்வகிக்கவும் கண்காணிக்கவும்படவுள்ளது.

*****



(Release ID: 1509423) Visitor Counter : 85


Read this release in: English