குடியரசுத் தலைவர் செயலகம்

இந்திரா காந்தி தேசிய பழங்குடி பல்கலைக்கழகத்தின் 2 வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் உரை

Posted On: 11 NOV 2017 4:58PM by PIB Chennai

மத்திய பிரதேச மாநிலம் அமர்கந்தக்கில் உள்ள இந்திரா காந்தி தேசிய பழங்குடி பல்கலைக்கழகத்தின் 2 வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் உரையாற்றினார்.

இந்த விழாவில் பேசிய குடியரசுத் தலைவர், 15 மில்லியன் பழங்குடி மக்கள் உள்ள மத்திய பிரதேச மாநிலத்தில் தேசிய பழங்குடி பல்கலைக்கழகம் அமைத்துள்ளதே சரியானது என்று கூறனார். கல்வி துறையில் முடிந்தவரையான சிறந்த வாய்ப்பை அளித்து நவீன இந்தியாவை உருவாக்குவதில் பழங்குடியின இளைஞர்கள் அதிக உத்வேகத்துடன் செயல்பட துணை புரிவதே இந்த பல்கலைக்கழகத்தின் முக்கிய கொள்கையாகும்.

பட்டப்படிப்பை முடித்தவர்களை கௌரவிப்பது மட்டும் அல்ல, கல்வி அறிவு பெற்று, திறன் மிகுந்த ஒழுங்குபடுத்தப்பட்ட இளைஞர் பட்டாளத்தை நாட்டின் சேவைக்கு அர்பணிப்பதே பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா என்று குடியரசுத் தலைவர் கூறினார். பட்டமளிப்பு விழா முடிவல்ல இது, பொறுப்பான வாழ்க்கையின் துவக்கம்,

ஒட்டுமொத்த தேசத்திற்கும் இந்த பல்கலைக்கழகம் ஒரு முன் மாதிரியாக விளங்குவது போலான தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்துமாறு குடியரசுத் தலைவர் மாணவர்களை கேட்டுக்கொண்டார்.  பட்டம் பெறுபவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவது கற்பார்கள் என்று நமது சமூகத்தில் உள்ள பின் தங்கி உள்ளவர்களை முன்னேற்றுவதிலும் தேசத்தின் வளர்ச்சியிலும் பங்கு வகிப்பர் என்றும் குடியரசுத் தலைவர் நம்பிக்கை தெரிவித்தார்.

*****

 

 



(Release ID: 1509412) Visitor Counter : 121


Read this release in: English