பிரதமர் அலுவலகம்
சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம், மகாவீர் பிலிப்பைன்ஸ் அறக்கட்டளைக்கு பிரதமர் விஜயம்
Posted On:
13 NOV 2017 7:01PM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் இன்று பிலிப்பைன்ஸ் நாட்டில் லாஸ் பானோஸில் உள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சென்றார். சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம், அரிசி அறிவியல் மூலம் வறுமையை குறைத்தல்; அரிசி விவசாயிகள் மற்றும் நுகர்வோர் உடல்நலம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துதல்; மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக அரிசி விளைவிக்கும் சுற்றுச்சூழலை பாதுகாத்தல் போன்றவற்றிற்கு அர்ப்பணித்துள்ள முதன்மையான நிறுவனமாகும்.
வெள்ளத்தை தாங்கும் அரிசி வகைகள்; வறட்சியை தாங்கும் அரிசி வகைகள்; உப்புத்தண்ணீரை தாங்கும் அரிசி வகைகளின் புகைப்பட கண்காட்சியையும்; மற்றும் மகளிர் விவசாய கூட்டுறவுகளில் ஐ.ஆர்.ஆர்.ஐ.-ன் பணிகள் குறித்தும் பிரதமர் பார்வையிட்டார்.
நீரில் மூழ்குவதை தாங்கும் அரிசி வகைகளுக்கான புதிய ஆராய்ச்சிக் கூடத்திற்கான அடையாள மண் தோண்டுதலை பிரதமர் மேற்கொண்டார். திரு. நரேந்திர மோடி அரிசி கள ஆராய்ச்சிக்கூடத்தின் பெயர்ப் பலகையையும் அவர் திறந்து வைத்தார். ஐ.ஆர்.ஆர்.ஐ. மரபு வங்கிக்கு இந்தியாவின் இரு வகை அரசி விதைகளை பிரதமர் அளிப்பாக அளித்தார். விஜயத்தின்போது, ஐ.ஆர்.ஆர்.ஐ.-ல் பணியாற்றும் பல்வேறு இந்திய அறிவியலாளர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.
மேலும் பிரதமர், மணிலாவில் உள்ள மகாவீர் பிலிப்பைன் அறக்கட்டளைக்கு சென்றார். இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே நெடுங்காலமான மனிதாபிமான கூட்டுறவுத் திட்டமான இந்த அறக்கட்டளை இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மணிலா மேயர் டாக்டர். ராமன் பகத்சிங் அவர்களால் ஏற்படுத்தப்பட்டதாகும். மகாவீர் ஊனமுற்றோர் உதவி மன்றத்துடன் இணைந்து இந்த அறக்கட்டளை, கால் இழந்தவர்களுக்கு ஜெய்ப்பூர் கால்களை பொருத்துவதற்கு முக்கிய பங்காற்றுகிறது. ஜெய்ப்பூர் கால்களால் பயன்பெற்றவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.
(Release ID: 1509410)
Visitor Counter : 177