குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

சமூக உட்கட்டமைப்பை உருவாக்குவதில் கல்விக்கு முக்கிய பங்கு: குடியரசுத் துணை தலைவர்

கிழக்கு மேற்கு கலாச்சார விழா உரையாற்றினார்.

Posted On: 12 NOV 2017 7:46PM by PIB Chennai

வறுமை மற்றும் வளர்ச்சியின்மையை உடைத்தெறியும் தன்மை கொண்ட கல்வியே சமூக உட்கட்டமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு தெரிவித்திருக்கிறார். இஸ்கான் நிறுவனர் மற்றும் ஆச்சார்யா, ஸ்ரீல பக்திவேதாண்ட ஸ்வாமி பிரபுபாதரின் 121 பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிழக்கு மேற்கு கலாச்சார விழாவில் உரையாற்றியபோது அவர் இதனை கூறினார்.

     ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வேறுன்றி மற்றும் வளமான கலாச்சாரம்  கொண்டு அறிவின் உறைவிடமாக இந்தியா இருந்து வருகிறது. மேலும், எண்ணற்ற மக்களுக்கு அது வாழ்வின் சரியான பாதையை கற்றுக்கொடுத்துள்ளது. மேலும், மனித இனத்திற்காக தன் வாழ்வை அர்பணித்த பல மகா-புருஷர்களை கொண்ட நாடு இந்தியா என்று கூறினார்.

      உலகமயமாக்கல் மற்றும் தொழில்நுட்பத்தினால் உலகம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது. இதில், பன்முக கலாச்சாரம் மிகவும் சாதாரமாக உள்ளது என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்.  இவை அனைத்தும் தொடங்குவதற்கு முன்பே ஸ்வாமி பிரபுபாதர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கு தொடர்பை  அமைத்துள்ளார். அது கலாச்சார தொடர்பு. அது இந்தியாவின் வளமையான பாரம்பரியத்தை மேற்கு நாடுகள் அறிந்து கொள்ள வழிவகுத்துள்ளது என்பதை அவர் எடுத்து கூறினார்.

     நாம் மிகவும் மிக விசித்திரமான நேரத்தில் சந்திக்கிறோம். ஒருபுறம் உலகம் பல்வேறு துறைகளில் விரைவான முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. மறுபுறம், தீவிரவாதம், சுற்றுச்சூழல் சீரழிவு, போதைப் பழக்கம், வெறுப்பு, பசி மற்றும் வறுமை போன்ற அச்சுறுத்தல்கள் நமக்கு சவாலாக உள்ளது. வேறோருபுரம், கலாச்சாரம் சமூக உட்கட்டமைப்பின் உயரி ஓட்டமாக இருந்து வருகிறது என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்.  அது நம் நவீன வாழ்க்கை முறையில் அழிந்துவரும் நெறிமுறை மற்றும் ஒழுக்கத்திற்கு புத்துயிர் அளிக்கிறது என்று அவர் கூறினார்.

*****



(Release ID: 1509409) Visitor Counter : 236


Read this release in: English