எரிசக்தி அமைச்சகம்

என்டிபிசி நிறுவனத்தில் விபத்து – (மாலை 7.30 க்கு மேம்படுத்தப்பட்ட செய்தி)

Posted On: 01 NOV 2017 8:06PM by PIB Chennai

தேசிய வெப்பசக்திப் பெருநிறுவனக் ( என்டிபிசி ) கோபுரம்,              அலகு எண் 6 இல் 01. 11. 2017 அன்று பிற்பகல் 3.30 மணி அளவில்          20 மீட்டர் உயரத்தில் திடீரென்று அசாதாரணமான சத்தம் கேட்டது.   அதனைத் தொடர்ந்து இரண்டாவது எண்  மூலையில் பிளவு ஏற்பட்டு, அதிலிருந்து புகையுடன் கூடிய சூடான வாயுவும் நீராவியும் வெளியேறியது. அதனால் அந்த இடத்தைச் சுற்றிலும் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.    

ஏறத்தாழ 80 பேர் என்டிபிசி மருத்துவமனைக்கு அவசரமாக அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள்         முதலுதவி பெற்றுத் திரும்பினர். இந்த விபத்தில் சிக்கி 8 பேர் காயமடைந்து பலியானார்கள். படுகாயமடைந்த 10 பேர் துரித சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கும் லக்னோவுக்கும் கொண்டுசெல்லப்பட்டனர்.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய என்டிபிசி நிர்வாகம் ஒரு விசாரணைக்கு ஏற்பாடு செய்துள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உடனடியான நிவாரணம் அளிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செய்யப்பட்டு வருகின்றன.

********



(Release ID: 1509406) Visitor Counter : 58


Read this release in: English