இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
இந்தியா இளைஞர்கள் மேம்பாட்டுக் குறியீட்டு எண் மற்றும் அறிக்கை 2017 –ஐ கர்னல் ராஜ்யவர்தன் ரத்தோர் வெளியிட்டார்.
Posted On:
13 NOV 2017 2:30PM by PIB Chennai
இந்தியா இளைஞர்கள் மேம்பாட்டு குறியீட்டு எண் மற்றும் அறிக்கை 2017 –ஐ இன்று புதுதில்லியில் மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுகள் துறை (தனிபொறுப்பு) இணை அமைச்சர் கர்னல் ராஜ்யவர்தன் ரத்தோர் வெளியிட்டார். அனைத்து மாநிலங்களிலும் இளைஞர் மேம்பாட்டு நிலவரத்தை அறிந்துகொள்வதற்காகவே இந்தியா இளைஞர் மேம்பாட்டுக் குறியீடு (YDI) 2017 வெளியிடப்பட்டது. இந்த குறியீட்டு எண் மூலமாக மிகச் சிறப்பாகவும், மிக குறைவாகவும் செயல்படும் மாநிலங்கள் அறிந்து கொள்ளப்படுகின்றன: வலுக்குறைந்த பகுதிகள் கண்டறியப்பட்டு கொள்கைவரைவோருக்கு தெரிவித்து மாநிலங்களில் இளைஞர் மேம்பாட்டுத் திட்டத்தில் எந்த பிரிவிற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை அறிவிக்கிறது.
தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமான ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம், இளைஞர் மேம்பாட்டுக் குறியீடு மற்றும் அறிக்கை 2017 –ஐ தயாரித்தது. இந்த நிறுவனம் 2010 –ம் ஆண்டு இந்த முன் உதாரணமான முயற்சியை மேற்கொண்டதை அடுத்து தொடர் நடவடிக்கையாக இந்தியா இளைஞர் மேம்பாட்டு குறியீடு, 2017 –ம் ஆண்டு வெளிவந்துள்ளது.
தேசிய இளைஞர் கொள்கை - 2017 (இந்தியா), காமன் வெல்த் உலக இளைஞர் மேம்பாட்டு அறிக்கை (15-29 வயது வரை) மற்றும் இதர காமன்வெல்த் குறியீடுகளில் காணப்படும் இளைஞர் என்பதற்கான வரையரையைப் பயன்படுத்தி 2017 –ம் ஆண்டிற்கான இளைஞர் மேம்பாட்டு குறயீடு உருவாக்கப்பட்டது. இதனால் உலக அளவில் ஒப்பீடு செய்து பார்த்துக்கொள்வது எளிதாகிறது.
இந்தியா இளைஞர் மேம்பாட்டு குறியீடு 2017 –ல் முதல் 5 பரிமாணங்கள் உலக YDI –ன் அதே அடிப்படையில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. நாட்டின் மண்டல நிலையில் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் குறியீடுகளும் எடைகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மண்டலங்களில் இளைஞர் மேம்பாடு வளர்ச்சியைக் குறிக்கும் பல பரிமாணப் பண்புளை அளவிடும் நோக்கத்துடன் இளைஞர் மேம்பாட்டை விளக்கும் குறியீடுகளின் முக்கியத்துவத்தின் அடிப்படையிலும் குறியீடுகளும் எடைகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. உலக YDI இந்தியாவுக்கு உருவாக்கப்பட்ட YDI –லிருந்து ஒரு முக்கியமான விஷயத்தில் மாறுப்பட்டது: இந்தியாவுக்கான YDI –ல் சமூக உள்ளடக்கிய நிலை புதிய பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்திய சமூதாயத்தில் அமைப்புச் சமச்சீரின்மை இருப்பதால் சமூக வளர்ச்சியில் உள்ளடக்கிய தன்மையை மதிப்பிடுவதற்காக இப்பகுதி சேர்க்கப்பட்டது. கொள்கைகள் மூலம் தீவிரமாக கையாளப்படவேண்டிய இடைவெளிகளை அடையாளம் காண இந்த அமைப்பு உதவுகிறது.
மனித மேம்பாட்டு குறியீடானது மண்டலங்கள், நாடுகள், உள்ளூர் இருப்பிடங்கள் ஆகியவற்றிடையே மேம்பாட்டை ஒப்புமைப்படுத்தியதைப் போல, இந்த குறியீடு அறிக்கை புவியியல் பகுதிகள், இனங்கள் ஆகியவற்றிடையே ஒப்பீட்டை மேற்கொள்ள மிகவும் உதவியாக உள்ளது. இந்த குறியீடு அடைந்த சாதனைகளை அளவிட உதவுகிறது. இளைஞர் மேம்பாட்டுக்கான ஆதரவு சேர்க்கும் கருவியாகவும் பயன்படுகிறது. கொள்கைகள் மற்றும் திட்டங்கள் மூலம் மேம்பாட்டுக்கான முன்னுரிமைகளை அடையாளம் காணுவதற்கும் இந்த அறிக்கை வசதி ஏற்படுத்துகிறது.
முடிவெடுத்தல் – ஆதரவளித்தல் ஆகியவற்றிற்கான சிறந்த கருவி என்ற வகையில் YDI 2017, தேசிய மற்றும் மண்டல வளர்ச்சியை கொள்கை வரைவோர் அறிந்துகொள்ள உதவுகிறது. அத்துடன் இளைஞர் மேம்பாட்டு கொள்கைள், திட்டமிடல், முன்னுரிமை அடையாளம் காணுதல், அமலாக்க அணுகுமுறைகள் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளை அறிந்து கொள்ளவும் உதவுகிறது. மேலும் மாற்று வழிகள் குறித்த கருத்துகளையும் அது வழங்குகிறது; ஆதாரங்களை நியாயமான முறையில் ஒதுக்கீடு செய்யவும் இது உதவுகிறது.
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுகள் துறை இணை அமைச்சர் கர்னல் ரத்தோர், இளைஞர் விவகாரங்கள் துறை செயலாளர் டாக்டர் ஏ கே துபே ஆகியோரிடம் அளித்தார். இந்தக் குறியீடு மற்றும் அறிக்கை குறித்த விளக்கத்தினை ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் (டாக்டர்) மதன் மோகன் கோயல்
*****
(Release ID: 1509289)
Visitor Counter : 99