நிதி அமைச்சகம்
இந்தியா மற்றும் கிர்கிஸ் இடையே இரட்டை வரி விதிப்பை தவிர்த்தல் மற்றும் வருமானத்தின் மீதான வரி ஏய்ப்பை தடுத்தல் தொடர்பான ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யும் நடைமுறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
प्रविष्टि तिथि:
10 NOV 2017 6:06PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, இந்தியா மற்றும் கிர்கிஸ் இடையே இரட்டை வரி விதிப்பை தவிர்த்தல் மற்றும் வருமான வரி தொடர்பான நிதி ஏய்ப்பை தடுத்தல் தொடர்பான ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யும் நடைமுறைக்கு தனது ஒப்புதலை அளித்தது.
இரட்டை வரி விதிப்பு தவிர்த்தல் ஒப்பந்தம் (டீ.டி.ஏ.ஏ) திருத்தத்திற்கான நடைமுறை, சர்வதேச தரத்திற்கேற்ப டீ.டி.ஏ.ஏ.-வின் பிரிவு 26 (தகவல் பரிமாற்றம்)-ஐ மேம்படுத்துதலை குறிக்கோளாக கொண்டது. இந்த மேம்படுத்தப்பட்ட பிரிவு பெருமளவில் தகவல் பரிமாற்றத்திற்கு வழி வகுக்கும். டீ.டி.ஏ.ஏ.வில் தற்போதுள்ள பிரிவு 26-ல் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 4 மற்றும் 5 பத்திகளின்படி, எந்த நாட்டிலிருந்து தகவல் கோரப்படுகிறதா, அத்தகவலில் எவ்வித உள்ளூர் வரி இல்லை அல்லது கோரப்படும் தகவல் வங்கி அல்லது நிதி நிறுவனம் போன்றவற்றில் உள்ளது எனக் கூற இயலாது. டீ.டி.ஏ.ஏ.வின் கீழ் பெறப்படும் தகவலை, பிற சட்ட அமலாக்க பயன்பாடுகளுக்காக பயன்படுத்திக் கொள்ள தகவல் வழங்கும் மாநிலங்களின் அனுமதியை இந்தியா பெற்றுக் கொள்வதற்கு வழிவகுத்துள்ளது.
பின்னணி:
இந்தியா மற்றும் கிர்கிஸ் இடையேயான டீ.டி.ஏ.ஏ. 07/02/2001 அன்று வெளியிடப்பட்டு, 10/01/2001 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்தியா மற்றும் கிர்கிஸ் இடையே இரட்டை வரி விதிப்பை தவிர்த்தல் மற்றும் வருமான வரி தொடர்பான நிதி ஏய்ப்பை தடுத்தல் தொடர்பான ஒப்பந்தத்தில் திருத்தம் செய்யும் நடைமுறையை இரு நாடுகளும் ஏற்றுக்கொண்டு கையெழுத்திட ஒப்புக்கொண்டுள்ளது.
*****
(रिलीज़ आईडी: 1509216)
आगंतुक पटल : 112
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English