மத்திய அமைச்சரவை
இந்தியா மற்றும் சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாக பகுதி இடையே இரட்டை வரி விதிப்பை தவிர்த்தல் மற்றும் வருமான வரி தொடர்பான நிதி ஏய்ப்பை தடுத்தல் ஆகியவற்றுக்கான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
10 NOV 2017 6:06PM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, இந்தியா மற்றும் சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாக பகுதி (எச்.கே.எஸ்.எ.ஆர்.) இடையே இரட்டை வரி விதிப்பை தவிர்த்தல் மற்றும் வருமான வரி தொடர்பான நிதி ஏய்ப்பை தடுத்தல் ஆகியவற்றுக்கான ஒப்பந்தத்திற்கு தனது ஒப்புதலை அளித்தது.
இந்த ஒப்பந்தம் இந்தியாவிலிருந்து எச்.கே.எஸ்.ஏ.ஆர்.-க்கு முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் பணியாளர் வருகை & அதே போன்று நேர்மாறாக, அதிகரிக்கச் செய்வதுடனும், இரட்டை வரி விதிப்பை தடுப்பதுடனும், இரு ஒப்பந்த தரப்பினரிடையே தகவல் பரிமாறிக் கொள்வதற்கு வழிவகுக்கும். இது, வரி விவகாரங்களில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கச் செய்வதுடன், வரி ஏய்ப்பு மற்றும் வரி தவிர்ப்பை கட்டுப்படுத்தும்.
பின்னணி:
இந்தியாவை பொறுத்தமட்டில், வருமான வரிச் சட்டம், 1961, பிரிவு 20-ன் கீழ், வருமானத்தின் மீதான இரட்டை வரி விதிப்பை தவிர்த்தலுக்காகவும், வருமான வரிச் சட்டம், 1961-ன் கீழ் வரி செலுத்துதலுக்கு உட்பட்ட வருமானத்தின் மீதான வரி ஏய்ப்பை தடுத்தல் மற்றும் வருமான வரியை தவிர்த்தலுக்காகவும், எந்த அந்நிய நாட்டுடனும் அல்லது குறிப்பிட்ட எல்லைப்பகுதியுடனும் மத்திய அரசு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், பிற நாடுகளுடன் இந்தியா புரிந்துள்ள ஒப்பந்தம் போன்றே அமைந்ததாகும்.
*****
(Release ID: 1509213)
Visitor Counter : 125