நிதி அமைச்சகம்

இந்தியா கொலம்பியா நாடுகளுக்கு இடையில் முதலீட்டு அதிகரிப்பு, பாதுகாப்பு தொடர்பான உடன்பாட்டின் விளக்கமான கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

Posted On: 10 NOV 2017 6:05PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தியாவுக்கும் கொலம்பியா நாட்டுக்கும் இடையில் முதலீட்டு  அதிகரிப்பு, முதலீட்டுப் பாதுகாப்பு குறித்த உடன்பாட்டின் விளக்கமான கூட்டுப் பிரகடனத்தில் (JID) கையெழுத்திடுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஒப்புதல் 2017, நவம்பர் 10ஆம் தேதி கையெழுத்தானது.

பல்வேறு அம்சங்களுக்கு விளக்கக் குறிப்புகளும் உடன்பாட்டில் இடம்பெறுவதால், இந்தக் கூட்டுப் பிரகடனம் தற்போதைய உடன்பாட்டுக்குத் தெளிவான விளக்கம் அளிக்கும் வகையில் அமைந்திருக்கும். முதலீட்டாளர் என்றால் யார், முதலீடு என்றால் என்ன, சீரான, நேர்மையாக நடத்துதல் (Fair and Equitable Treatment - FET), தேசிய அளவிலான செயல்பாடு (NT), மிகவும் சாதகமான நாடு (MFN), கையகப்படுத்துவதற்கான நடவடிக்கை, முதலீட்டாளருக்கும் அரசுக்கும் இடையிலான சிக்கலைத் தீர்க்கும் வழிமுறை ஆகியவையும் இதில் இடம்பெற்றிருக்கும்.

முதலீடு குறித்த உடன்பாட்டை வலுப்படுத்துவதில், விளக்கக் கூட்டுப் பிரகடனங்களு் அறிக்கைகளும் முக்கிய பங்கினை வகிக்கின்றன. இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் (BIT) சிக்கல்கள் அதிகரித்து வரும் தருணத்தில், இத்தகைய உடன்பாடுகள் அறிக்கைகளைப் பிறப்பிப்பது நடுவர் தீர்ப்பாயங்களின் கவனத்தை ஈர்ப்பதாக அமையும். பங்குதாரர்களின் இத்தகைய சார்பான அணுகுமுறையால் உடன்பாட்டின் நிபந்தனைகளை எதிர்பார்க்கும் வகையிலும் ஒத்திசைவாகவும் புரிந்துகொள்ள தீர்ப்பாயங்களுக்கு உதவும்.

*****

 

 

 



(Release ID: 1509209) Visitor Counter : 95


Read this release in: English