மத்திய அமைச்சரவை

தேசிய ஊரக குடிநீர் திட்ட நீட்டிப்பு மற்றும் மீள்கட்டமைப்பிற்கு அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 10 NOV 2017 6:00PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையின் கீழ் கூடிய மத்திய அமைச்சரவை, ஊரக மக்களுக்கு தரமான சிறந்த சேவை அளிப்பதை உறுதி செய்யும் வண்ணம், முடிவு வெளிவரும், போட்டி மற்றும் திட்ட (செயல்பாடு) நிலைபெறுதலுக்கு அதிக கவனத்துடன் கூடிய சிறந்த கண்காணிக்கும் வகையிலும், தேசிய ஊரக குடிநீர் திட்ட (என்.ஆர்.டீ.டபிள்யு.பி.) நீட்டிப்பு மற்றும் மீள்கட்டமைப்பிற்கான தனது ஒப்புதலை அளித்தது

 

2017-18 முதல் 2019-20 வரையிலான பதினான்காவது நிதிக் குழு (எப்.எப்.சி.) காலத்தில் இத்திட்டத்திற்காக ரூ.23,050 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் நாடு முழுவதும் உள்ள ஊரக மக்களுக்கானதாகும். இந்த மீள்கட்டமைப்பு, நெகிழச் செய்யும் வகையிலும், விளைவு சார்ந்ததாகவும், போட்டித் தன்மையுடனும்   இத்திட்டத்தினை உருவாக்கி, அமைச்சகத்தின் நிலையான குழாய் மூலமான குடிநீர் வழங்கும் அதிகரிக்கச் செய்யும் இலக்கினை அடைய உதவும்.

 

இம்முடிவின் விபரங்கள் கீழ்க்கண்டவாறு:

 

1. தேசிய ஊரக குடிநீர் திட்டம் (என்.ஆர்.டீ.டபிள்யு.பி.), 14வது நிதிக் குழுவின் காலமான 2020, மார்ச்சுடன் கூட்டாக முடிவடையும்.

 

2.  தேசிய ஊரக குடிநீர் திட்ட மீள்கட்டமைப்பின் மூலம், ஜப்பானிய என்செப்பாலிடிஸ் (ஜெ.இ.)/தீவிர என்செப்பாலிடிஸ் (ஏ.இ.எஸ்.) பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக 2% நிதி ஒதுக்கப்படும்.

 

3. தேசிய ஊரக குடிநீர் திட்டத்தின் (என்.ஆர்.டீ.டபிள்யு.பி.) கீழ் 2107, பிப்ரவரி அன்று குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தால் துவங்கப்பட்ட தேசிய நீர் தர துணை இயக்கம் (என்.டபிள்யு.க்யு.எஸ்.எம்.) என்ற புதிய துணைத் திட்டம், (ஏற்கனவே கண்டறியப்பட்ட) 2800 ஆர்செனிக் & ஃப்ளோரைட் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உடனடி தேவையான தூய்மையான குடிநீர் வழங்குதலை பூர்த்தி செய்யும். மதிப்பீடுகளின்படி, 2021, மார்ச் வரை, 4 ஆண்டுகளுக்கும், மத்திய அரசின் பங்காக ரூ.12,500 கோடி தேவைப்படும்.

 

4.  ஒப்புக்கொள்ளப்பட்ட திட்டத்திற்கான முன்-நிதியில், இரண்டாவது தவணைத் தொகையின் பாதியளவு வரை, மாநில அரசுகளால் வழங்கப்பட்டு, பின்னர் மத்திய நிதியிலிருந்து திருப்பி அளிக்கப்படும். மாநிலம்(ங்கள்), நிதியாண்டில் நவம்பர் 30-க்குள் இத்தொகையை பெறத் தவறினால், பின்னர், அத்தொகை பொது நிதியின் பகுதியாக மாறி, முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில், மத்திய அரசிற்கு தேவையான முன்-நிதியை அளித்த, சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு விடுவிக்கப்படும்.

 

5.  மூன்றாவது தரப்பினர் மூலம் குழாய் மூலம் நீர் வழங்கல் திட்டங்களின்  செயல்பாட்டை  மதிப்பீடு செய்யப்பட்டு, இரண்டாவது தவணையின் மற்ற பாதித் தொகை மாநிலங்களுக்கு விடுவிக்கப்படும்.

 

6. 2017-18 முதல் 2019-20 வரையிலான பதினான்காவது நிதிக் குழு (எப்.எப்.சி.) காலத்திற்கு இத்திட்டத்திற்காக ரூ.23,050 கோடி வழங்கிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

            2021, மார்ச் மாதத்திற்குள் ஆர்செனிக் & ஃப்ளோரைட் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ஊரக மக்களுக்கு நிலையான வகையில் தூய்மையான குடிநீர் வழங்குவதை தேசிய நீர் தர துணை இயக்கம் (என்.ட்பிள்யு.க்யு.எஸ்.எம்.) இலக்காக கொண்டுள்ளது.  மாநிலங்கள் தேசிய ஊரக குடிநீர் திட்ட (என்.ஆர்.டீ.டபிள்யு.பி.) நிதிகளை பயன்படுத்திட அதிக நெகிழ்வுத்தன்மை அளிக்கும் வகையில் இத்திட்டத்தின் கீழான கூறுகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளன.

 

     குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த மேலாண்மை தகவல் அமைப்பின் (ஐ.எம்.ஐ.எஸ்.)படி,  இந்தியாவில் உள்ள 77% ஊரகப் பகுதிகள் முழுமையான (எப்.சி.) நிலையையும் (நாளொன்றுக்கு 40 லிட்டர்கள்)     மற்றும் 56% ஊரக மக்கள் பொது குழாய் மூலம் நீர் பெறுகிறார்கள், அவற்றில் 16.7% வீடுகளுக்கான இணைப்பை பெற்றுள்ளனர்.

 

பின்னணி:

 

     குடிப்பதற்கேற்ற, போதுமான, வசதியான, கிடைக்கக்கூடிய மற்றும் சமமான தண்ணீர் (ஆதாரம்) நிலையாக கிடைப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தேசிய ஊரக குடிநீர் திட்டம் 2009-ம் ஆண்டு துவங்கப்பட்டது. மத்திய அரசின் திட்டமான தேசிய ஊரக குடிநீர் திட்டம், மத்திய மற்றும் மாநில அரசுகள் 50.50 அளவில் நிதி பங்கீட்டுடன் கூடியது. பல்லாண்டுகளாக, தேசிய ஊரக குடிநீர் திட்டச் செயல்பாட்டின் சாதனைகள் மற்றும் குறைபாடுகள் படிப்பினையாக கொண்டு, இத்திட்டம் மேலும் முடிவுகளை விளைவிக்கக்கூடியதாகவும், போட்டித்தன்மைகூடியதாகவும் உருவாக்கிட, தற்போதைய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் மாநிலங்களுக்கு நிதி விடுவிப்பதற்கான வழிமுறைகளில் சில மாற்றங்கள் தேவைப்பட்டன.

 

     தேசிய ஊரக குடிநீர் திட்டத்தினை, மேலும் முடிவுகள் சார்ந்ததாகவும்,  மாநிலங்களுக்கு இடையே ஊக்கத்தொகை பெறுவதற்கான போட்டித்தன்மையுடனும்  உருவாக்குவதன் தேவையை கருத்தில் கொண்டு, மாநிலங்கள், பல்வேறு பங்கேற்பார்கள்/ இணையதள வல்லுநர்கள் / பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் நிதி ஆயோக் ஆகியவற்றுடன் தொடர் கலந்தாய்வுகள் நடத்தப்பட்டு, திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் சில திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவை, மாநிலங்கள் தேசிய ஊரக குடிநீர் திட்ட நிதிகளை பயன்படுத்திட அதிக நெகிழ்வுத்தன்மை அளிக்கும் வகையில் இத்திட்டத்தின் கீழான கூறுகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளன. குழாய் மூலம் குடிநீர் வழங்கல் மீதான கவனம், சேவை அளிக்கும் நிலையை உயர்த்தல், நீரின் தரம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முக்கியத்துவம் (ஆர்செனிக் ஃப்ளோரைட் பாதிக்கப்பட்ட பகுதிகள், ஜெ.இ./ஏ.இ.எஸ். பகுதிகளுக்கு தீர்வாக தேசிய நீர் தர துணை-இயக்கம்), திறந்தவெளி மலம் கழித்தல் அற்றது (ஓ.டீ.எப்.) என அறிவிக்கப்பட்ட கிராமங்கள், எஸ்.ஏ.ஜி.ஒய். ஜி.பி.கள், கங்கா ஜி.பி.கள், ஒருங்கிணைந்த செயல் திட்ட (ஐ.ஏ.பி.) மாவட்டங்கள், எல்லைப்புறச் சாவடிகள் (பீ.ஓ.பி.) ஆகியவற்றுக்கு  குழாய் மூலம் நீர் வழங்கல் மற்றும் நீர் வழங்கல் சொத்துகளின் உரிய செயல்பாடு மற்றும் பராமரிப்பிற்கான நிறுவனத்தை ஏற்படுத்துதல், போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

 

******

 


(Release ID: 1509204) Visitor Counter : 1313


Read this release in: English