மத்திய அமைச்சரவை

உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்த தேசிய சோதனை முகமையை (NTA)

உருவாக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

Posted On: 10 NOV 2017 5:57PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேசிய சோதனை முகமை (NTA) உருவாக்குவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முகமை இந்திய சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் (1860) கீழ் அமைக்கப்படும் தன்னாட்சி கொண்ட அமைப்பாக இயங்கும். இந்த முகமை உயர்கல்வி நிறுவனங்களின் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்காக தன்னிறைவு பெற்றதாக செயல்படும்.

 

முக்கிய அம்சங்கள்:

  • தற்போது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) நடத்தி வரும் நுழைவுத் தேர்வுகளை நடத்தும் பணியை தொடக்கத்தில் இந்த முகமை மேற்கொள்ளும்.
  • தேசிய சோதனை முகமை முழு அளவில் செயல்படும்போது, படிப்படியாக இதர தேர்வுகளும் நடத்தப்படும்.
  • நுழைவுத் தேர்வுகள் குறைந்தபட்சம் இரு ஆண்டுகளுக்கு இணையம் (ஆன்லைன்) மூலம் நடத்தப்படும். இதன் மூலம் தாங்கள் சிறந்ததாகக் கருதும் படிப்புகளைத் தேர்ந்தெடுக்க மாணவர்களுக்குப் போதிய அளவு அவகாசம் கிடைக்கும்.
  • கிராமப்புற மாணவர்களுக்கு உதவும் வகையில், தேர்வு மையங்கள் மாவட்ட மற்றும் துணை மாவட்ட அளவில் அமைக்கப்படும். மேலும், மாணவர்களுக்கு இயன்றவரை நேரடிப் பயிற்சி தருவதற்கும் ஏற்பாடு செய்யப்படும்.

 

அமைப்பு:

 

  • தேசிய சோதனை முகமைக்கு மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகம் நியமிக்கும் சிறந்த கல்வியாளரின் தலைமை வகிப்பார்.
  • மத்திய அரசு நியமிக்கும் தலைமைச் செயல் அலுவலராக தலைமை இயக்குநர் ஒருவர் நியமிக்கப்படுவார்.
  • இந்த முகமையின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளும் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோரை நிர்வாகிகளாகக் கொண்ட வாரியம் அமைக்கப்படும்.
  • தலைமை இயக்குநருக்கு கல்வியாளர்கள், கல்வி வல்லுநர்கள் 9 பேர் துணைபுரிவர்.

 

நிதிகள்:

தேசிய சோதனை முகமை பணியைத் தொடங்கி ஓராண்டுக்கு ஒரு முறை ரூ. 25 கோடியை இந்திய அரசு மானியமாக அளிக்கும். அதன் பின்னர், தேவையான நிதியை முகமையே திரட்டிக் கொள்ளும்.

 

விளைவு:

தேசிய சோதனை முகமை நிறுவுவதன் மூலம் நாடு முழுவதும் பல்வேறு நுழைவுத் தேர்வுகளை எழுதும் 40 லட்சம் மாணவர்கள் பலனடைவர். மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில்  (AICTE) உள்ளிட்ட பல்வேறு கல்வி அமைப்புகள் நுழைவுத் தேர்வுகளை நடத்தும் சுமையைக் குறைக்கும். மாணவர்களின் திறன், புத்திசாலித்தனம், சிக்கலைத் தீர்க்கும் நுட்பம் ஆகியவற்றை மதிப்பிடுவதற்கு உயர் நம்பிகத்தன்மை, நிலைப்படுத்தப்பட்ட கடின அளவு முறை கொண்டுவரப்படும்.

 

பின்னணி:

பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் இருப்பதைப் போல், தேவை சார்ந்த தனியான அமைப்பு தேவை என்பதைக் கருத்தில் கொண்டு, நிதி அமைச்சர் தனது 2017-18ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில்  “உயர்கல்விப் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்காக தன்னாட்சியும் தன்னிறைவும் கொண்ட அமைப்பு உருவாக்கப்படும்” என்று அறிவித்திருந்தார்.

 

********



(Release ID: 1509202) Visitor Counter : 139


Read this release in: English