பாதுகாப்பு அமைச்சகம்

வழிநடத்தி செலுத்தப்படக் கூடிய குண்டுகள் சோதனை வெற்றி

Posted On: 03 NOV 2017 3:03PM by PIB Chennai

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமான எதிர்ப்பு இலகுரக வெடிகுண்டு (SAAW-ஸாவ்) வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்த சோதனை ஓடிஸா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஐ.டி.ஆர்-ன் சோதனை சரக்கு இந்திய விமானப்படை விமானம் மூலம் நடத்தப்பட்டது. போர்விமானம் மூலம் செலுத்தப்பட்ட இந்த வெடிகுண்டு துல்லியமான வழிசெலுத்தல் முறை மூலம் வழிநடத்தி செலுத்தப்பட்டு, 70 கிமீ தூரத்திலுள்ள இலக்குகளை மிக துல்லியமாக அடைந்தது. மொத்தமாக மூன்று சோதனைகள் நடத்தப்பட்ட.

அவை வெவ்வேறு சூழ் நிலைகள் மற்றும் இலக்கு எல்லைகளைக் கொண்டு நடத்தப்பட்ட. இவை அத்தனையும் வெற்றிகரமாக நடந்த. பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு வளம் DRDO – வின் இம்ரத் ஆராய்ச்சி மையம் டிஆர்டிஒ-வின் மற்ற ஆய்வு கூடங்கள், இந்திய விமான படையுடன் இணைந்து இந்த வழிகாட்டிச் செல்லக்கூடிய வெடிகுண்டினை தயாரித்துள்ளது.

     இந்த வெற்றிகரமான சோதனைக்காக டிஆர்டிஒ விஞ்ஞானிகள் மற்றும் இந்திய விமான படையினருக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு துறை செயலரும் டிஆர்டிஒ-வின் தலைவருமான திரு. எஸ். கிறிஸ்டோபர் குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் இந்த ஸாவ் குண்டுகள்  விரைவில் ஆயுதப்படைகளில் சேர்க்கப்படும் என்றார். ஏவுகணைகள் மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவத் திட்ட அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் ஜி. சத்தீஸ் ரெட்டி இந்த வெடிகுண்டினை தயாரித்தல் உள்நாட்டு உற்பத்தி திறனில் முக்கிய மைல் கல்லாக அமையும் என்று கூறினார்.

******


(Release ID: 1509191)
Read this release in: English