நிதி அமைச்சகம்

வேளாண் விளைபொருட்களின் ரொக்க விற்பனை குறித்த விளக்க குறிப்பு

Posted On: 03 NOV 2017 8:00PM by PIB Chennai

விவசாயிகள் வேளாண் விளைபொருட்களை  ரொக்க விற்பனை செய்யும்போது வருமான வரி சட்டம், 1961 விதிகள் பொருந்துமா என்பது குறித்து அக்கறை உள்ள தரப்பினரிடமிருந்து மத்திய நேரடி வரிகள் வாரியத்திற்கு மனுக்கள் வந்துள்ளன..

இந்த பிரச்சினையை ஆய்வு செய் மத்திய நேரடி வரிகள் வாரியம் 2017 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி சுற்றறிக்கை எண் 27/2017 மூலம் விளக்கம் அளித்துள்ளது. அதன் படி  விவசாயிகள் ரூ. 2 லட்சத்துக்கு குறைவான மதிப்புள்ள வேளாண் விளைபொருட்களை வர்த்தகருக்கு ரொக்க விற்பனையாக செய்யும் போது:-

  1. வர்த்தகரை பொறுத்தவரை வருமான வரி சட்டத்தின் பிரிவு 40a (3) ன் கீழ் செலவினத்தை ஏற்காத நிலையை ஏற்படுத்தாது.
  2. விவசாயிகள் பொறுத்தவரை வருமான வரி சட்டத்தின் பிரிவு 269st – ன் கீழ் தடை செய்யப்படாது
  3. விவசாயிகள் பான் எண்ணையோ படிவம் எண் 60-ஐயோ சமர்பிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தாது.

***********



(Release ID: 1509190) Visitor Counter : 89


Read this release in: English