சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
சுற்றுச் சூழல் மாசில் இருந்து பாதுகாக்க பொதுமக்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆலோசனை
Posted On:
08 NOV 2017 8:13PM by PIB Chennai
புது தில்லியில் அதிக காற்று மாசு இருப்பதையொட்டி மத்திய சுகாதார அமைச்சகம் மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சில முக்கிய ஆலோசனைகள் வெளியிட்டுள்ளது. அவை :-
- சுவாச சிரமம் உடையவர்கள் வீட்டிலே இருங்கள் மற்றும் முடிந்தவரை குழந்தைகளை வீட்டில் இருந்து வெளியே வராதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
- சுவாச விகிதத்தை அதிகப்படுத்தகூடிய காலை நடை பயிற்சி அல்லது கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளை தவிர்த்துவிடுங்கள்
- தண்ணீர் மற்றும் திரவ பானங்கள் நிறைய குடிக்கவும்
- புகை பிடித்தலை தவிர்க்கவும்.
- முடிந்தவரை வாசனை திரவியப் மற்றும் அறை சுத்தப்படுத்திகளை தவிருங்கள்
- புகை அல்லது அதிகமான தூசி உள்ள பகுதிகளை தவிர்க்கவும்.
- இதய நோய்கள் அல்லது நாள்பட்ட சுவாச நோய் அல்லது ஆஸ்துமா பிரச்சனைகள் உள்ளவர்கள் மருத்துவர்கள் அறிவுறித்திய மருந்துகளை கட்டாயமாக பின்பற்றுங்கள்
- சுவாச சிரமம், சுவாச விகிதம் அதிகரித்தல், படபடப்பு அல்லது கடுமையான இருமல் மற்றும்/அல்லது அதிக தும்மல் பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை அணுகவும்.
***
(Release ID: 1509183)
Visitor Counter : 147