சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் உலக மக்கள் தொகை நாளில் திரு.ஜே.பி.நட்டா புதிய குடும்ப திட்டமிடல் பற்றிய புதுமுயற்சிகளைத் தொடங்கி வைத்தார்.
மொத்த பிறப்பு விகிதம் அதிகமுள்ள 7 மாநிலங்களின் 146 மாவட்டங்களில் மிஷன் பரிவார் விகாஸ் தீவிர கவனம்
புதிய தீவிர அறிவிப்பு இயக்கம் தொடங்கப்பட்டது.
Posted On:
11 JUL 2017 5:28PM by PIB Chennai
மொத்த பிறப்பு விகிதம் அதிகமுள்ள 7 மாநிலங்களின் 146 மாவட்டங்களில் மிஷன் பரிவார் விகாஸ் தீவிர கவனம் செலுத்தும். இதன்கீழ் மக்கள் தொகையை நிலைப்படுத்த குறித்த இலக்குகளுக்கான முன் முயற்சிகள் தக்க சேவைகளை வழங்குவதன் மூலம் நடத்தப்படும். ஜனசங்கிய ஸ்திரித கோஷ் (ஜே.எஸ்.கே) ஏற்பாடு செய்த உலக மக்கள் தொகை நாள் விழாவில் மத்திய சுகாதாரம் குடும்ப நல அமைச்சரான திரு.ஜே.பி.நட்டா இதனை தெரிவித்தார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல இணை அமைச்சர் திருமதி.அனுப்பிரியா படேல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
“மிஷன் பரிவார் விகாஸ்” என்பது அமைச்சகத்தால் திட்டமிடப்பட்ட ஒரு புது முன்முயற்சி. சேவைகள் வழங்குதல், மேம்பாட்டுத் திட்டங்கள், பொருட்பாதுகாப்பு திறமை வளர்ப்பு, பயன்மிகு சுற்றுச்சூழல் மற்றும் தீவிரக் கவனிப்பு மூலம் அணுகுமுறையை முன்னேற்றிடும் கவனமிக்க திட்டம் இது என்று திரு.நட்டா தெரிவித்தார். இந்த மாவட்டங்களுக்காக நுண்ணிய அளவு திட்டமிடல் மற்றும் தொத்த பிறப்பு விகிதத்தைச் சரி செய்ய தேவையான திட்டங்கள் ஆகியவற்றை செயல்படுத்திய குழுவினரைத் திரு.நட்டா பாராட்டினார். அமைச்சர் இத்திட்டத்தின் அரையாண்டு மறுமதிப்பீடு செய்யுமாறும் காலஅளவுக்கேற்ப சாதனைகள் கூடுகிறதா என்று கண்காணிக்குமாறும் திட்டம் சரியான திசையில் செல்கிறதா இல்லையா என்று கவனிக்குமாறும் அறிவுரை கூறினார்.
“கருத்தடை சாதனங்களின் வகைகளை விரிவுபடுத்தியிருக்கிறோம். மாறிவரும் தேவைகளை நிறைவு செய்கிறோம். தகுதியான சேவைகளும் பொருள்களும் கடைசித் தொலைவிலுள்ள வாடிக்கையாளரையும் சென்றடைய நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்று அவர் கூறினார்.
நிகழ்வின்போது திரு.ஜே.பி.நட்டா, ‘அந்தரா’ திட்டத்தின்கீழ் ஒரு புதிய ஊசி மூலம் செலுத்தும் மருந்தையும் புதிய மென்பொருளான, (FB-LMIS) குடும்பத் திட்டமிடல் வழிவசதி கையாளும் செய்தித்தொகுப்பு என்பதனையும் அறிமுகப்படுத்தினார். இவை கருத்தடைச் சாதனங்களின் தேவை, வழங்கும் நிலை, மருத்துவ நிலைகள் மற்றும் ஆஷா அலுவலர்கள் மூலம் வழங்குகிற தொடர்பு முறையில் நேர் செய்து தகவல்களை வழங்கும்.
இந்தப் புதிய செய்தித்தொடர்பு இயக்கத்துடன் இணைந்த புதுத்திட்டங்களாக சுகாதார அமைச்சர் குடும்பத்திட்டமிடலுக்கான நுகர்வோருக்கு எளிதான வலைத்தளத்தையும் தம்பதிகள் திருமணம் மற்றும் குடும்ப நலம் பற்றி விவாதிக்க 52 வார வானொலி சேவையையும் இயக்கி வைத்தார். இது நாடு முழுவதும் ஒலிபரப்பாகும். சுகாதார அமைச்சர் மேலும் கூறுகையில் வாழ்வின் முழுச்சுற்று அணுகுமுறையை விளக்கினார். கருவுறுதல், தாய்மை, பிறந்த புதிய நிலை, குழந்தை, மற்றும் வளர்ந்த வயது (RMNCH +A) என எல்லா வாழ்க்கை நிலைகளிலும் தொடர்ந்த நல அக்கறையை அமைச்சகம் ஏற்று உருவாக்கியுள்ளது என்றார்.
திருமதி அனுப்பிரியா படேல், மத்திய இணை அமைச்சர் தொடர்ந்து நிற்கும் வளர்ச்சியில் மக்கள் தொகை வளர்ச்சி முறை முக்கிய தாக்கம் ஏற்படுத்துகிறது. மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் மற்றும் வயது நிலைகளில் மாற்றங்கள் தேசிய மற்றும் உலக வளர்ச்சி சிக்கல்களுக்கும் தீர்வுகளுக்கும் நெருங்கிய தொடர்புடையவை.
அவர் மேலும் கூறுகையில் மக்கள்தொகையை சரிநிலைப்படுத்துவது கட்டுக்கடங்காத பெரும் பணி என்றும் அரசு தனியாக எதிர்கொள்ள முடியாதது என்றும் தனியார் துறை, அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பெரும் நிறுவனங்களும் முதன்மையான பங்காற்ற வேண்டுமென்றும் கூறினார்.
இளம் சிறுவர்களிடம் குடும்ப நிலைநிறுத்தல் பற்றிய விழிப்புணர்வை உருவாக்க ஜனசங்கிய ஸ்திரித கோஷ் நடத்திய ஓவியப் போட்டிகளின் வெற்றியாளர்களுக்கு திரு.ஜே.பி.நட்டா பரிசுகள் வழங்கினார்.
கூடுதல் செயலர் மற்றும் பொது இயக்குநர் ஆர். கே. வாட்ஸ், குழந்தை பிறப்பு நலவாழ்வு இணைச் செயலர் திருமதி வந்தனா குர்னானி, ஜனசந்கிய ஸ்தரிதகோஷ் செயல் இயக்குநர் திருமதி பிரீதிநாத் ஆகியோருடன், அமைச்சகத்தின் மூத்த அலுவலர்கள், வளர்ச்சிக் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
(Release ID: 1508980)