உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

விமானப் போக்குவரத்துத் துறையில் ஜி.எஸ்.டியின் தாக்கம்

Posted On: 25 JUL 2017 6:25PM by PIB Chennai

ஜி.எஸ்.டி விரிமுறையின்படி சிக்கன வகுப்பு  பயணிகளின் பயணக் கட்டணம் வரி 6% லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. (சரக்குகளுக்கு அல்லாதது). வணிக உயர் வகுப்புக் கட்டணத்துக்கு வரி 9% லிருந்து 12% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விமான நிறுவனங்கள் தரும் சேவைகள் மற்றும் சரக்குகளுக்கும் இது பொருந்தும். பெட்ரோலிய பொருட்களும் அத்துடன் விமானப் பெட்ரோலும் தற்போது ஜி.எஸ்.டி வரிக்கு உட்படவில்லை.

நுகர்வோருக்கு வரிச்சுமை குறைவதற்காக, பல மத்திய மாநில வரிகளை ஒன்றாக அடக்கி ஜி.எஸ்.டி வரிமுறை வந்துள்ளது. பல நிலை வரிகளை அகற்றி விமானப் போக்குவரத்து மற்றும் எல்லாத்துறைகளிலும் வரி உயர்வால் விலைவாசி உயர்வதைத் தளர்த்தி ஆறுதல் அளிக்கிறது.

விமானப்போக்குவரத்து மத்திய இணை அமைச்சர் திரு. ஜயந்த் சின்ஹா இராஜ்ய சபாவில் எழுத்து மூலமான கேள்விக்குப் பதில் அளிக்கையில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

 

 


(Release ID: 1508977) Visitor Counter : 105


Read this release in: English