இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
விளையாட்டு, குடிசைப்பகுதி தத்தெடுப்பு மற்றும் பாரம்பரியப் பாதுகாப்பில் மாணவர்களை ஊக்குவிக்க பள்ளிகளுக்கு விஜய் கோயல் வற்புறுத்தல்
Posted On:
22 JUL 2017 6:31PM by PIB Chennai
நாடு முழுவதுமுள்ள சி.பி.எஸ்.சி.,யுடன் இணைக்கப்பட்டுள்ள பள்ளி களுக்கும், கேந்திரிய வித்யாலயா சங்கேதன் மற்றும் நவோதயா வித்யாலயா உள்ளிட்ட பள்ளிகளுக்கும் தனது அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில், அந்தந்தப் பள்ளிகளில் சாரணர் இயக்கம், நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை ஆகியவற்றின் ஒரு பிரிவையாவது கட்டாயம் தொடங்கியாக வேண்டும் என்று ஒரு கடிதத்தை தனது அமைச்சகம் எழுதியுள்ளதாக இளைஞர் விவகாரம், மற்றும் விளையாட்டுத்துறை இணையமைச்சர் (பொறுப்பு) திரு. விஜய் கோயல் தெரிவித்தார். இதன் மூலம் இளைஞர்களின் ஆளுமை வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்த மற்றும் முழுமையானதாக பள்ளிப் பாடத்திட்டத்தை உருவாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இன்று இங்கு இளைஞர்களுக்கான விழிப்புணர்வு அமர்வைத் தொடங்கி வைத்துப்பேசியபோது அனைத்துப் பிரிவு மக்களுக்கும் ஏற்புடையதாகும் வகையில் தங்கள் கட்டண விகிதத்தை மாற்றியமைக்குமாறும் சாரணர் இயக்கம் போன்ற அமைப்புகள் கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அவர்கள் தனிநபர் கட்டணமாக இல்லாமல் நிறுவன அமைப்புகளுக்கான கட்டணமாக அவற்றை மாற்றியமைக்கலாம் என்றார்.
திரு. நரேந்திர மோடியின் ஆற்றல் மிக்க தலைமையில் இயங்கும் இந்திய அரசானது, ஒன்றுபட்ட, வலிமையான, நவீன இந்தியாவை “அனைவரோடு அனைவரின் மேம்பாடு” என்னும் உயரிய கோட்பாட்டில் “ஒரே பாரதம்…… உன்னத பாரதம்” எனக் கட்டமைக்கும் இயக்கத்தைத் தொடங்கியுள்ளது
“பெண் குழந்தையைப் பாதுகாப்போம்……. பெண் குழந்தையை வளர்த்தெடுப்போம்” ஜன்தன் யோஜனா, தூய்மை இந்தியா போன்ற ஏராளமான புதிய திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இந்தியப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் குடிசைப்பகுதிகளை மேம்படுத்தவும் சிறப்புக்கவனம் செலுத்தப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இளைஞர;களிடையே ஆளுமை மற்றும் தலைமைப்பண்புகளை வளரத்தெடுக்கும் வகையில் அவர்களுக்கு சமுதாயப்பணி; மற்றும் பிற தேசக்கட்டமைப்புப் பணிகள் போன்றவற்றை வழங்கும் புனிதப்பணியில் தமது அமைச்சகம் ஈடுபட்டுவருவதாக அமைச்சர; திரு. கோயல் தெரிவித்தார;. இத்திட்டமானது நாட்டு நலப்பணித் திட்டம் (NSS நேரு யுவ கேந்திரா சங்காதன் (NYKS) ஆகிய இரு இளைஞர் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து செயல்படுத்தப் படவுள்ளதாகவும் அமைச்சர தெரிவித்தார.
இளைஞர்களுக்கான இந்த விழிப்புணரவு முகாமில் பங்கேற்றுள்ளவர்களிடம் இளைஞர்கள் தங்கள் பாரம்பரிய மேம்பாடு நினைவுச் சின்னங்கள் மேம்பாடு குடிசைப்பகுதிகள் தத்தெடுப்பு போன்றவற்றில் தீவிரமாக ஈடுபட ஊக்குவிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
குடிசைப்பகுதி குழந்தைகளை ஊக்குவிக்க அவர்கள் விளையாட்டுகளில் தீவிரமாகப் பஙகேற்க, டெல்லி முழுவதிலும் 14 குடிசைப்பகுதிவாழ் இளைஞர் ஓட்டங்களை தமது அமைச்சகம் நடத்திவருவதாக அமைச்சர் தெரிவித்தார். டெல்லியில் உள்ள விளையாட்டு மைதானங்களை பள்ளிகளுக்கிடையிலான பந்தயங்கள், மற்றும் பள்ளி மாணவர்களின் பல்வேறு விளையாட்டுச் செயல்பாடுகளுக்காகப் பயன்படுத்த அனுமதியளிக்க அமைச்சகம் திட்டமிட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.
இவ்வாண்டு அக்டோபரில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை FIFA U-17 ஐச் சுட்டிக் காட்டிய திரு. விஜய் கோயல் கால்;பந்தாட்டம் மற்றும் விளையாட்டுக் கலாச்சாரத்தை மேம்படுத்தும் நோக்கில் டெல்லியில் உள்ள பள்ளி மாணவர்கள் டெல்லியில் நடைபெறும் போட்டிகளை இலவசமாகப் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறினார். முதலில் வருவோர்க்கு முன்னுரிமை என்னும் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட்டு இலவசமாக அனுமதி வழங்கப்படும் என்றார் அவர். வசதியற்ற குழந்தைகளுக்கு பொம்மைகளைத் தானமாக வழங்குவதை அனுமதிக்க வேண்டும் என்று பப்ளிக் பள்ளிகளை திரு. கோயல் கேட்டுக்கொண்டார்.
இளைஞர்களை சாரணர் இயக்கம், நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை, சமூகப்பணி, விளையாட்டு மேம்பாடு ஆகியவற்றில் ஈடுபடுத்தும் வழிகளைக் கண்டறியும் இந்த விவாத அமர்வில் பப்ளிக் பள்ளிகள், இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம், உள்ளாட்சி அமைப்புகள், ஆகியவற்றிலிருந்து ஏறத்தாழ 1000 பிரதிநிதிகளும், மற்றும் இளைஞர் விவகார அமைச்சகச் செயலாளர் டாக்டர் ஏ.கே. துபே மற்றும் அமைச்சக மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
(Release ID: 1508973)
Visitor Counter : 93