பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

2022-ல் புதிய இந்தியா என்ற தலைப்பில் நிதி ஆயோக் துணைத் தலைவர் டாக்டர். ராஜீவ் குமார் ஆற்றிய விரிவுரை

Posted On: 27 OCT 2017 2:35PM by PIB Chennai

மத்திய புலனாய்வுக் கமிஷன் புதுடெல்லியில் ஏற்பாடு செய்திருந்த, தொடர் விரிவுரையின் 24-வது விரிவுரையில், அக்டோபர் 27-ம் தேதி நடைபெற்றமாற்றாத்துக்கான இந்தியாவின் தேசிய நிறுவன (NATIONAL INSTITUTE OF TRANFORMATION INDIA-நிதி ஆயோக்) துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார் 2022-ல் புதிய இந்தியா என்ற தலைப்பில் விரிவுரையாற்றினார்.

 

இந்தியா வளர்ந்து வந்த பாதையின் பல்வேறு நிகழ்பாடுகள் குறித்து வரலாற்று ரீதியாக அவர் உரையாற்றினார். அதாவது இந்தியாவில் ஏற்பட்ட சமூக, பொருளாதார, அரசியல் மாற்றாங்கள் குறித்து விரிவான வரலாற்று அடிப்படையில் அவர் விவரித்தார்.

 

.1857 முதல் 1942 வரை இந்தியா சுதந்திரத்துக்காக போராடியது.இதையடுத்து 1947-ல் சுந்திரம் பெற்றது. சுதந்திரத்துக்குப் பின் அதாவது 1947 முதல் 2017 வரை அரசியல் சமூக, பொருளாதார ரீதியாக ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து விளக்கினார்.

 

இதையடுத்து பெருந்திராள மக்களின் பங்களிப்போடு 2017-ல் சங்கல்ப் சே சித்தி, 2022-ல் புதிய இந்தியா,  2047-ல் சர்வஸ்ரேஷ்தா பாரத் என்ற இலக்கை ட்டவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது குறித்து விரிவாக பேசினார்.

 

எதிர்காலத்தில் வறுமை, ஊழல், மதவாதம், தீவிரவாதம் இல்லாத ஓர் இந்தியாவை உருவாக்கி புதியோதோர் பாரதம் படைப்பதற்கான பாதைகள் குறித்தும் விரிவாக விளக்க உரையாற்றினார்.

 

 

விரிவுரைக்குப் பின் சம காலப் பிரச்சினைகள் குறித்து  கூடியிருந்தவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்தார் ராஜீவ் குமார்.

 

இந்த நிகழ்ச்சியில் பகுதி நேர, முழு நேர முதன்மை கண்காணிப்பு அதிகாரிகள், இயக்குநர்கள், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்கள் மத்திய அமைச்சகம் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விரிவுரையை மத்திய புலனாய்வுக் கமிஷனின் www.cvc.nic.in என்ற இணைய தளத்திலும் பார்த்து, கேட்டறியலாம்.

 


(Release ID: 1508939) Visitor Counter : 183


Read this release in: English