சுற்றுலா அமைச்சகம்
சுற்றுலாத் துறையில் புதுமையைப் புகுத்துவதற்கான கருத்தரங்கம்
Posted On:
27 OCT 2017 7:46PM by PIB Chennai
மத்திய சுற்றுலாத் துறையின் சார்பில் சுற்றுலாத் துறையில் புதுமையைப் புகுத்துவது தொடர்பான கருத்தரங்கம் அக்டோபர் 27-ம் தேதி டெல்லியில் நடைபெற்றது.
சுற்றுலாத் துறை இணையமைச்சர் திரு. கே.ஜே. அல்போன்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்தப் கருத்தரங்கில் சுற்றுலாத் துறையில் தொடர்புடைய ஹோட்டல்கள், டிராவல் ஏஜென்ட்கள், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், வர்த்தக சங்கங்கள், ஊடகம் ஆகியவற்றின் பிரதிநிதகள், சுற்றுலாத் துறை செயலாளர் மற்றும் மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் இந்திய சுற்றுலாவை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அத்தோடு பிரச்சினகளைப் போக்குவதற்கு புதுமையான தீர்வுகளும் கண்டறியப்பட்டன. சர்வதேச சமூகத்தை ஈர்க்கும் வகையில் இந்தியாவை ஒரு சிறந்த சுற்றுலா தலமாக மாற்றுவதற்கான முடிவுகளும் மாநாட்டில் எட்டப்பட்டன.
சுற்றுலா பயணிகள் புத்த மதம் தொடர்பான பகுதிகளுக்கு சென்று வருவதை மேம்படுத்துதல், அர்ப்பணிப்புடன் கூடிய மக்கள் தொடர்பு முகவர்களை நியமிப்பது, நெருக்கடி நிலையை சமாளிக்கும வகையில் அந்நிய மொழியை நன்கறிந்த சுற்றுலா வழிகாட்டிகளைக் கொண்ட அமைப்பை உருவாக்குவது, இந்தியா குறித்தான நேர்மறையான கருத்துகளைக் கொண்டுள்ள சமூக ஊடக மற்றும் இணைய தள பதிவுகளுடன் இணைந்து செயலாற்றுவது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் இந்தப் கருத்தரங்கில் மேற்கொள்ளப்பட்டன.
கருத்தரங்கில் பேசிய அமைச்சர் திரு. அல்போன்ஸ், இரண்டு கமிட்டிகளை அமைக்க உள்ளதாக தெரிவித்தார். அதாவது புத்தமதம் தொடர்பானவற்றை மேம்படுத்துவதற்காக ஒன்றும் சந்தை, மக்கள் தொடர்பு முகவர்களுக்கு ஆலோசனை வழங்க ஒன்றும் அமைக்கப்பட உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியா வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடனும், நீங்கா நினைவுகளுடனும் சொந்த நாட்டுக்குச் செல்லும் வண்ணம் சுற்றுலா இடங்களை மேம்படுத்தும் வகையில் மேற்கண்ட இரண்டு கமிட்டிகளும் மத்திய அமைச்சகங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து போதுமான வசதிகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் திரு. அல்போன்ஸ்.
*****
(Release ID: 1508938)