இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

உலகக் கோப்பை போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வெளிப்படுத்திய மிக அற்புதமான திறமை, இளைஞர்கள் விளையாட்டை தங்களது பணியாக மேற்கொள்வதற்கு ஊக்கமளிக்கும்: விஜய் கோயல்

Posted On: 27 JUL 2017 2:23PM by PIB Chennai
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மத்திய இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) விஜய் கோயல் அவர்கள், அவரது அதிகாரபூர்வமான இல்லத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கும் மற்றும் அணி உதவியாளர்களுக்கும் இன்று தனது பாராட்டுகளை தெரிவித்தார். சமீபத்தில் நடந்து  முடிந்த மகளிர் உலகக் கோப்பை போட்டியில் அற்புதமாக திறமையை வெளிப்படுத்திய அவர்கள்  லண்டனிலிருந்து இந்தியா திரும்பியிருந்தனர்.
       குழுவினரை வரவேற்ற திரு கோயல் உலகக் கோப்பை போட்டியில் இந்திய மகளிர் மிக அற்புதமாக தங்கள் திறமையை வெளிப்படுத்தி, இளைஞர்களை, குறிப்பாக இலட்சக்கணக்கான இளம் பெண்களை, விளையாட்டை தங்களது பணியாக மேற்கொள்வதற்கு எழுச்சியூட்டியுள்ளனர் என்று  கூறினார்.  ரியோ ஒலிம்பிக்ஸ்,  பாராலிம்பிக்ஸ் மட்டுமின்றி, ஹாக்கி, மல்யுத்தம், பேட்மின்டன் விளையாட்டுகளுடன் இப்போது இந்த மகளிர் உலகக் கோப்பை போட்டியில் அற்புதமாக விளையாடியதன் மூலம், இந்தியப் பெண்கள் சர்வதேச விளையாட்டு அரங்கில் வழிநடத்துபவர்களாக முன்னணியில் உள்ளனர். செய்தி தெளிவாக உள்ளது என்ற அவர், ”Beti Bachao, Beti Padhao”  இப்போது “Beti Khilao”. என்று கூறினார்.
       இந்திய இளைஞர்களை விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டும் என்ற பிரதம மந்திரி திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை வலியுறுத்திய திரு கோயல், ”விளையாடுபவர்கள் பிரகாசிப்பார்கள்” என்பதே இந்திய இளைஞர்களின் ஆளுமையை ஒட்டுமொத்தமாக மேம்படுத்துவதற்கான சிந்தனையாக இருக்கும் என்றார்.

 

 

       அணியின் பின்னிருந்து அவர்கள் ஆற்றிய பணிக்கும், இந்திய மகளிர் கிரிக்கெட் மகிழ்ச்சி அடைவதற்கும் கொண்டாடுவதற்கும் காரணமாக அமைந்த,  அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் உதவிப் பணியாளர்களின் முயற்சிகளுக்கும் திரு கோயல் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.   இந்த வெற்றி எதிர்வரும் FIFA U-17 உலகக் கோப்பையில் (அக்டோபர் மாதம்) இந்திய கால்பந்து அணிக்கு ஊக்கமளிப்பதாக அமையும் என்று  அவர் தெரிவித்தார். விளையாட்டு அமைச்சகத்தின் கதவுகள் எந்நாளும் இருபத்தி நாலு மணி நேரமும் திறந்திருக்கும் என்று கூறிய திரு கோயல், விளையாட்டு விரர்களுக்கு சிறந்த வசதிகள் செய்து தரப்படும் என்றார்; இதன் மூலம் அவர்களுக்கு ஆர்வம் உள்ள விளையாட்டில், வீரர்கள்  சிறக்க முடியும், இந்தியாவை சக்தி மிக்க விளையாட்டு மையமாக உருமாற்ற முடியும் என்றார்.
       உலக கோப்பையில் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்ட, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ்,  அணியில் இருக்கும் ஒவ்வொருவரும் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்களது திறமையை வெளிப்படுத்திய முறையை பாராட்டினார்; தொடர்ந்து ஊக்கமளித்த பிரதம மந்திரி நரேந்திர மோடி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அணியின் நட்சத்திர வீர்ர்கள், ஹர்மான் பிரீத் கவுர் மற்றும் பூனம் ராவ்த் ஆகியோரும், உலகக் கோப்பை  இறுதிப் போட்டியில் இங்கிலாந்திற்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தின் போது நிகழ்ந்த தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

 



(Release ID: 1508931) Visitor Counter : 66


Read this release in: English