பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணங்கள் தொடர்பான பிரச்சனைகள் குறித்து மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திற்கு வந்திருக்கும் ஆலோசனைகள் மீதான விளக்கம்
Posted On:
27 JUL 2017 2:17PM by PIB Chennai
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, வெளிநாட்டு குடிமக்களை மணம் செய்து கொள்ளும் இந்தியர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் சிரமங்களை கண்டறிவதற்கு நிபுணர் குழு ஒன்றை இந்திய அரசாங்கம் அமைத்துள்ளது. தற்போது நடைமுறையிலிருக்கும் சட்டங்கள் விதிகள் ஒழுங்குமுறைகளில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களை இக்குழு பரிந்துரைக்கும். திருமண முறிவுகளின் விளைவான கடினமான சூழ்நிலைகளில் சிக்கியிருக்கும் ஏராளமான ஆண்கள் / பெண்கள் (மற்றும் அவர்களது குழந்தைகள்) எழுப்பும் புகாரினை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நிபுணர் குழுவின் தலைவராக என்.ஆர்.ஐ. கமிஷனின் முன்னாள் தலைவரான, பஞ்சாபின் ஜஸ்டிஸ் அர்விந்த் குமார் கோயல் இருக்கிறார். உறுப்பினர்களாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான திரு பல்வந்த் சிங் ரமோவாலியா மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், உள்துறை, வெளியுறவுத் துறை மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் பேராசிரியர் பாம் ராஜ்புட் ஆகியோர் உள்ளனர்..
இந்த நிபுணர் குழு இன்று வரையிலும் நான்கு கூட்டங்களை நடத்தியுள்ளது. பிரச்சனைகளின் தீர்வுக்கு வழிகாட்ட வேண்டிய அமைச்சகமாக, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இருப்பதால், தொடர்புடையவர்கள் அனைவரிடமிருந்தும் அதிக எண்ணிக்கையிலான ஆலோசனைகளை அந்த அமைச்சகம் பெற்றுள்ளது; தனிநபர்கள் மற்றும் இந்தப் பிரச்சனையில் ஆர்வமுள்ள சமூக அமைப்புகள்/ நிறுவனங்கள் பரிந்துரைகளை அளித்துள்ளன. இந்தப் பரிந்துரைகளில் சில: வெளிநாட்டு திருமணச்சட்டம் 1969 உள்ளிட்ட சில சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவருவது; இந்தியத் தூதரகங்கள்/அலுவலகங்களில், உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பிரச்சனைகளைப் தீர்ப்பதற்காக சிறப்பு மையங்கள் அமைப்பது; பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதாவது கிராமங்கள், நகரங்கள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில், இப்பிரச்சனைகளில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்து பிரசுரங்கள் மூலம் பிரச்சாரம் செய்தல்; மத்திய சமூக நல வாரியம் (CSWB) அமைத்துள்ள குடும்ப ஆலோசனை மையங்கள் (FFC) மூலம், திருமணத்திற்கு முன்னும் திருமணத்திற்கு பின்னும் ஆலோசனை வழங்குதல்; சட்ட உதவியும் நிதி உதவியும் அளிப்பதற்கு, செயல்படும் வகையில் தூதரகத்தில் பிரிவு ஒன்றை அமைத்தல்; திருமணப் பதிவை கட்டாயமாக்குதல்; குழந்தையின் இயல்பான பாதுகாவலராக தாய் இருப்பது என மேலும் பல பரிந்துரைகள் வந்துள்ளன.
இந்த அனைத்து ஆலோசனைகளும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் நிபுணர் குழுவிற்கு அனுப்பப்படுகின்றன. ஆலோசனைகளை ஆய்வு செய்த பின், நிபுணர் குழு அதன் பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு அளிக்கும். இந்தப் பரிந்துரைகள் குறித்து அரசாங்கம் தொடர்புடையவர்களின் பரந்துபட்ட குழுவோடு கலந்தாலோசிக்கும். அதன்பின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கும். இந்த அடிப்படையில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் நிபுணர் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ள பரிந்துரைகள் செயல்முறையின் ஒருபகுதியே என்று தெளிவாக்கப்படுகிறது; தொடர்புடையவர்கள் கொடுத்துள்ள ஆலோசனைகள் குழுவால் கண்டிப்பாக கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும். இதைப்பற்றி கூறும், இது அமைச்சகத்தின் முறையான மற்றும் இறுதி பரிந்துரைகள் என்று கூறும் பத்திரிக்கை செய்தி எதுவும் முற்றிலும் தவறானதும் தவறான திசைக்கு இட்டுச் செல்வதும் ஆகும்.
திருமண முறிவிற்கு ஆளாகியிருக்கும் பெற்றோர்களின் குழந்தைகளை வளர்ப்பதை, அந்தப் பெற்றோர்கள் பகிர்ந்து கொள்வதால் எழும் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்ய குழந்தைகள் பாதுகாப்பிற்கான தேசியக் கமிஷனை (NCPCR), தனிப்பட்ட முறையில் இந்த அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்தப் பிரச்ச்னையை சமூக, உளவியல், சட்ட ரீதியிலான மற்றும் இதர கோணங்களில் ஆராய்ந்திட, பரந்துபட்ட அளவில் தொடர்புடையவர்களின் ஆலோசனைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளுமாறு NCPCR அமைப்பு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
(Release ID: 1508928)
Visitor Counter : 77