பாதுகாப்பு அமைச்சகம்

“எக்ஸ் புளு பிளாக் – 17”-ல் பங்கேற்பதற்காக இந்திய விமான படை அணி இஸ்ரேலிற்கு புறப்பட்டது

प्रविष्टि तिथि: 31 OCT 2017 6:42PM by PIB Chennai

எக்ஸ் புளு பிளாக் 17”-ல் பங்கேற்பதற்காக இன்று 45 உறுப்பினர்கள் கொண்ட இந்திய விமான படை அணி இஸ்ரேலிற்கு புறப்பட்டது. பங்குபெறும் நாடுகளுக்கு இடையேயான இராணுவ ஒத்துழைப்பை வலுபடுத்துவதற்காக வருடத்திற்கு இரண்டு முறை நடைபெறும் பலதரப்பு பயிற்ச்சியே இந்த “புளு பிளாக்” நிகழ்ச்சி.

பாதுகாப்பு கமாண்டோக்கள் கூடிய சி 130ஜே சிறப்பு நடவடிக்கைகள் விமானத்துடன் இந்தியா விமான படை இந்த பயிற்சியில் பங்கேற்கும். பங்கேற்கும் நாடுகளில் போர் தொடர்பான ஞானம் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் நாடுகளின் செயல் திறனை மேம்படுத்தவும் இந்த பயிற்சி நல்ல வாய்ப்பாக அமையும். 

இந்த பயிற்சி இஸ்ரேலில் அமைந்துள்ள உவ்டா விமானப்படை தளத்தில் நவம்பர் 2 – 16, 2017 வரை நடைபெறும். இந்திய விமான படையின் பல்வேறு போர் பிரிவுகளில் உள்ள வீரர்களைக் கொண்ட இந்த அணியினை கேப்டன் மலுக் சிங் வி.எஸ்.எம். வழிநடத்துவார்.

பன்முகத்தன்மை பயிற்ச்சியில் இந்தியா விமான படை முதல் முறையாக இஸ்ரேல் விமான படையுடன் இனைந்து செயல்படுகிறது. இந்த “புளு பிளாக்” பயிற்சி மூலம் இந்தியா விமான படை வீரர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது மட்டுமல்லாமல் பிற நாட்டு விமான படைகளின் சிறந்த பயிற்சி முறைகளை கற்றுக்கொள்ளலாம்.

****


(रिलीज़ आईडी: 1508756) आगंतुक पटल : 146
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English