பிரதமர் அலுவலகம்

யுனெஸ்கோ படைப்பாற்றல் மிக்க நகரங்கள் வலையத்தில் சென்னை சேர்க்கப்பட்டதற்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 08 NOV 2017 3:54PM by PIB Chennai

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) படைப்பாற்றல் மிக்க நகரங்கள் வலையத்தில் சென்னை நகரம் சேர்க்கப்பட்டதை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“தனது சிறந்த பாரம்பரிய இசைக்காக சென்னை நகரம் படைப்பாற்றல் மிக்க நகரங்கள் வலையத்திற்குள் சேர்க்கப்பட்டதை முன்னிட்டு சென்னை நகர மக்களுக்கு வாழ்த்துகள். நமது சிறந்த கலாச்சாரத்திற்கு சென்னையின் பங்களிப்பு விலைமதிப்பற்றது” என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.


(Release ID: 1508740)
Read this release in: English