பாதுகாப்பு அமைச்சகம்
இராணுவ விமானப் பிரிவு 32-வது உதய தின கொண்டாட்டம்
प्रविष्टि तिथि:
01 NOV 2017 7:21PM by PIB Chennai
இராணுவ விமானப் பிரிவு 01.11.2017 அன்று 32-வது உதய தினத்தை கொண்டாடியது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக புது தில்லி இந்தியா கேட்டில் உள்ள அமர் ஜவான் ஜோதியில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். லெப்டினென்ட் ஜெனரல் கன்வால் குமார், கர்னல் கமாண்டன்ட் மற்றும் இராணுவ விமான போக்குவரத்து தலைமை இயக்குநர் மற்றும் இதர அதிகாரிகள், வீரர்கள் இதில் கலந்துக் கொண்டனர்.
இராணுவ விமானப் பிரிவு இந்திய இராணுவத்தின் வான்வழி உத்திகளின் கரமாக விளங்குகிறது. இராணுவத்திற்கு முக்கியமான மூன்றாவது பரிமாண திறனை அளிக்கும் இராணுவ விமானப் பிரிவு நமது எல்லைகளை பாதுகாக்கும் வீரர்களுக்கு முக்கிய தூணாக விளங்குகிறது, மேலும் தேசிய பேரிடரின்போது பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழகுவதிலும் இராணுவ விமானப் பிரிவின் பங்கு மிகப்பெரியது.
****
(रिलीज़ आईडी: 1508676)
आगंतुक पटल : 177
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English