விவசாயத்துறை அமைச்சகம்

பல்வேறு நலத்திட்டங்கள், நிகழ்ச்சிகள் மூலம் விவசாயிகள் வருமானத்தை இரண்டு மடங்காக்கும் லட்சியத்தை அரசு கொண்டுள்ளது. : திரு.ராதா மோகன் சிங்.

2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானம் 2 மடங்காக உயர வேண்டும் என்ற இலக்கை எங்களுக்கு பிரதமர் நிர்ணயித்துள்ளார் : வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சர்.
திரு. ராதா மோகன் சிங் தலைமையில், வேணாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்தின் இடைநிலை அமர்வு ஆலோசனைக் கூட்டம்

Posted On: 02 NOV 2017 4:42PM by PIB Chennai

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு.ராதா மோகன் சிங் இன்று பேசுகையில், ‘’விவசாயிகளின் வருமானம் 2022-ம் ஆண்டுக்குள் 2 மடங்காக உயர வேண்டும் என்று பிரதமர் எங்களுக்கு இலக்கு நிர்ணயித்திருக்கிறார். இதை நோக்கி அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. இந்த இலக்கை அடைவதற்கு பிரதமர் ஏழு உபாயங்களை அளித்திருக்கிறார்.

  1. ஒரு துளிஅதிக பயிர்என்ற இலக்குடன் நீர்ப்பாசனத்திற்கு போதிய பணம் ஒதுக்கி கூடுதல் கவனம் செலுத்துதல்.
  2. மண் வளத்தைப் பொறுத்து தரமான விதைகள் மற்றும் சத்துக்கள் வழங்குதல்
  3. அறுவடைக்குப் பிறகான நஷ்டத்தைக் குறைக்கும் வகையில் சேமிப்புக்கிடங்கு மற்றும் குளிர்பதன சேமிப்பில் பெருமளவு முதலீடு செய்தல்
  4. பொருட்களை பதப்படுத்துதல் மூலம், பொருட்களின் மதிப்பைக் கூட்டுதல்.
  5. தேசிய வேளாண் விற்பனை சந்தை உருவாக்குதல் மற்றும் விற்பனைக்கு இடையில் உள்ள தடைகளைத் தகர்த்து மின்னணு மூலம் 585 நிலையங்களை அடைதல்
  6. புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி, ஏற்கத்தக்க கட்டணத்தில் இழப்பீடுகளைக் குறைத்தல்.
  7. விவசாயிகளுக்கு துணைத் தொழில்களான கோழிப்பண்ணை, தேனீ வளர்த்தல், மீன் வளர்த்தல் போன்றவற்றை ஊக்கப்படுத்துதல்.

வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்தின் இடைநிலை அமர்வு ஆலோசனைக் கூட்டம் திரு.ராதா மோகன் சிங் தலைமையில் நடைபெற்றபோது, மேற்கண்ட ஏழு உபாயங்களையும் எடுத்துக்கூறினார். மேலும் விவசாயிகளின் நலனை முன்னிட்டு இந்த அரசு ஏராளமான நலத்திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தி, அவர்கள் வருமானத்தை இரண்டு மடங்கு உயர்த்துவதை இலக்காக வைத்துள்ளது என தெரிவித்தார். இதற்காக, பிரதம மந்திரி கிரிஷி சின்சய் யோஜனா, பிரதம மந்திரி ஃபாஸ்கர் பீமா யோஜனா, பாரம்பர்யகட் கிரிஷி விகாஷ் யோஜனா, மண் வள அட்டை, வேம்பு கலந்த உரம், -நாம் போன்ற திட்டங்கள் விவசாய உற்பத்தியின் அளவை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கவும் செயல்பட்டு வருகிறது.

திரு.சிங் மேலும் தெரிவிக்கையில், ‘’வேளாண் துறையில், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலனுக்காக, தேசிய மானாவாரி பகுதிகளுக்கான ஆணையத்தின் தலைமை செயல் இயக்குனர் மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.  விவசாயிகளுக்கு 2022-ம் ஆண்டுக்குள் இரு மடங்கு வருமானம் அடைவதில் உள்ள இடர்களைக் களையும் பணியில் இந்தக் குழு ஈடுபடுகிறது. இதுவரை இந்தக் குழு ஆறு கூட்டங்களை நடத்தியுள்ளது’’ என்று தெரிவித்தார்.

விவசாயிகள் நலத்துறை அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்ராஷ்ட்ரிய கிரிஷி விகாஷ் யோஜனா எனப்படும் ஆர்.கே.வி.ஒய்., திட்டத்தில் தொழிலதிபர் மேம்பாடும் சேர்க்கப்பட்டுள்ளது. வேளாண் கூட்டுறவுத் துறை மற்றும் விவசாயிகள் நலத்துறை வழிகாட்டுதலில் பருப்பு உற்பத்தி 2017-18 ஆண்டு 24 மில்லியன் டன்னாக இருக்கும். ‘ஒரு துளிஅதிக பயிர்என்ற இலக்கை அடைவதற்கு சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு நபார்டு வங்கியின் மூலம் ரூ.5000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் திரு.சின்தமன் நவ்ஷா வாங்கா, திரு.ராட்மல் நாகர், திரு.மன்ஷங்கர் நினமா, திரு.எம்.பி.ராஜேஷ், திரு.சஞ்சய் ஷாம்ராவ் தோடர், திரு.சஞ்சய் ஹரிபாவ் ஜாதவ், திரு.கன்வர் புஷ்பேந்த்ரா சிங் சான்டல் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கே.ஆர்.அர்ஜுனன், திரு.கிரன்மா நந்தா போன்றவர்கள் கலந்துகொண்டனர்.



(Release ID: 1508671) Visitor Counter : 270


Read this release in: English