குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

உலகின் மிகப்பெரிய மூன்றாவது விமான போக்குவரத்து சந்தையாக இந்தியா திகழ்கிறது - குடியரசு துணைத் தலைவர்

2-வது ஏரோ எக்ஸ்போ இந்தியா 2017 – விமான கண்காட்சி தொடக்கம்

Posted On: 02 NOV 2017 3:44PM by PIB Chennai

குடியரசு துணைத் தலைவர் திரு எம்.வெங்கய்ய நாயுடு, ‘’விமான பயணத்தில் காணப்படும் அதிவேக வளர்ச்சி காரணமாக, 2026-ம் ஆண்டு உலகின் மூன்றாவது மிகப்பெரிய விமானப் போக்குவரத்து சந்தையாக இந்தியா திகழும்’’ என்று தெரிவித்தார். இன்று 2-வது ஏரோ எக்ஸ்போ இந்தியா 2017 – விமான கண்காட்சியை தொடங்கிவைத்து இவ்வாறு பேசினார். மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் திரு.அசோக் கஜபதிராஜூ புசாபதி, இணை அமைச்சர் திரு.ஜெயந்த் சின்ஹா மற்றும் பல பிரமுகர்களும் விழாவில் கலந்துகொண்டனர்.

குடியரசு துணைத் தலைவர் பேசுகையில், ‘’நாட்டுக்குள் இணைப்புகளை ஊக்குவிப்பது மற்றும் வேலை வாய்ப்பு வழங்குவதில் மட்டும் விமானப் போக்குவரத்து முக்கிய இடம் வகிக்கவில்லை, பொருளாதார மேம்பாட்டிலும் முக்கியத்துவம் வகிக்கிறது. அதனால் உலக அளவில், போக்குவரத்து முறைகளில் விமானப் போக்குவரத்து முதுகெலும்பாக திகழ்கிறது. வணிகங்களை இணைப்பதிலும், மக்களை ஒன்று சேர்ப்பதிலும், உலக அளவில் சுற்றுலாவை மேம்படுத்துவதிலும் முக்கிய இடம் வகிக்கிறது’’ என்று தெரிவித்தார்.

தி இன்டர்நேஷனல் ஏர் டிரான்ஸ்போர்ட் அஸோசியேசன்கணிப்பின்படி, உலகில் அதிவேகமாக வளர்ந்துவரும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சந்தை, 22-வது முறையாக 2017-ம் ஆண்டு ஜனவரியில் 26.6 சதவிகித வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதேநேரம் விபத்து விகிதம் குறைந்துள்ள நிலையில், பயணிகளின் பாதுகாப்புக்கு வல்லுனர்கள், அதிகாரிகள் மூலம் தீவிர முன்னுரிமை வழங்கப்படுகிறது’’ என்று தெரிவித்தார்.

குடியரசு துணைத் தலைவர் மேலும் தெரிவிக்கையில், ‘உடான் திட்டத்தின் மூலம் பிராந்திய அளவில் இணைப்புகளை அதிகரிக்கும் வகையில் செயல்படும் மற்றும் செயல்படாத விமான நிலையங்களில் விமான சேவை விரிவு படுத்தப்படும். இரண்டாம் கட்ட நகரங்கள், ஆன்மிக தலங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு சுற்றுலா மற்றும் வியாபார பயணம் பரந்த அளவில் விரிவுபடுத்தப்படும்’’ என்பதை மகிழ்வுடன் தெரிவித்தார்.

விழாவில் குடியரசு துணைத் தலைவர் பேசிய கருத்துக்கள்.

‘’நான், 2-வது ஏரோ எக்ஸ்போ இந்தியா-2017 கண்காட்சியைத் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். விமானப் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் பங்கேற்பாளர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நண்பர்களே, இணைப்புகளை ஊக்குவிப்பது மற்றும் வேலை வாய்ப்பு வழங்குவதில் மட்டுமின்றி, பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் விமானப் போக்குவரத்து முக்கிய இடம் வகிக்கிறது. அதனால் உலக அளவிலான போக்குவரத்து முறைகளில், விமானப் போக்குவரத்து முதுகெலும்பாக திகழ்கிறது. வணிகங்களை இணைப்பதிலும், மக்களை ஒன்று சேர்ப்பதிலும், உலக அளவில் சுற்றுலாவை மேம்படுத்துவதிலும் முக்கிய இடம் வகிக்கிறது.

இன்டர்நேஷனல் ஏர் டிரான்ஸ்போர் அசோஸியேசன் கணக்கீட்டின் படி, 2017ம் ஆண்டு உலக அளவிலான உள்நாட்டு உற்பத்தியில் 1% விமானப் போக்குவரத்துக்கு செலவழிக்கப்படும், இந்தத் தொகை 776 பில்லியன் டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ..டி.. அரையாண்டு அறிக்கையின் படி, 69 மில்லியன் சங்கிலித்தொடர் விநியோகப் பணியின் மூலம், அரசுக்கு 124 மில்லியன் டாலர் வரி வருமானமாக வந்துள்ளது.

உலகளாவிய பொருளாதாரத்தில் விமான சேவை துறை அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதற்காகவே, இந்தத் தொகையை அழுத்தமாகச் சொல்கிறேன்.

வருகின்ற ஆண்டுகளில் விமானப் போக்குவரத்துத் துறை அபரிதமான வளர்ச்சி அடைய இருக்கிறது. தி இன்டர்நேஷனல் ஏர் டிரான்ஸ்போர்ட் அஸோசியேசன் கணிப்பின்படி, உலகில் அதிவேகமாக வளர்ந்துவரும் உள்நாட்டு போக்குவரத்து சந்தையில் 22-வது முறையாக 2017-ம் ஆண்டு ஜனவரியில் 26.6 சதவிகித வளர்ச்சி அடைந்திருக்கிறது. ’விமான பயணத்தில் காணப்படும் அதிவேக வளர்ச்சி காரணமாக, 2026-ம் ஆண்டு உலகின் மூன்றாவது மிகப்பெரிய விமானப் போக்குவரத்து சந்தையாக இந்தியா திகழும். விமான சரக்கு சேவை அடுத்த சில ஆண்டுகளில் 9% வளர்ச்சி அடையும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டு 3.8 பில்லியனாக இருக்கும் விமான பயணிகள் எண்ணிக்கை 2035-ம் ஆண்டு 7.2 பில்லியனாக வளர்ச்சி அடையும் என்று ..டி.. கணக்கிட்டுள்ளது.

இதனால் உள்நாட்டு விமானப் பயணிகளுக்கு தொடர்ந்து நிறையவே நன்மைகள் கிடைக்கும். உலக அளவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் ஜப்பானை இந்தியா விஞ்சி சாதனை படைத்துள்ளது. 2016-ம் ஆண்டு இந்தியாவில் 100 மில்லியன் உள்நாட்டு பயணிகள் பயணித்துள்ள நிலையில், ஜப்பானியில் இந்த காலகட்டத்தில் 97 மில்லியன் பயணிகள் மட்டுமே பயணம் செய்துள்ளனர்.

வளர்ச்சி அடைந்துவரும் விமானப் பயணத்தை கணக்கில்கொண்டு, பிராந்திய அளவில் கூடுதல் இணைப்புகள் மற்றும் கட்டமைப்புகளில் அரசு இப்போது கூடுதல் கவனம் செலுத்துகிறது.

புதிய திட்டங்கள் தொடங்கப்படும் நிலையில், பயணிகளின் பத்திரம் மற்றும் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. விமான பயணத்தில் எந்த ஒரு காரணத்திற்காகவும் பாதுகாப்புக்கு தரும் முக்கியத்துவத்தில் சமரசத்திற்கு இடம் இல்லாத வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

தி இன்டர்நேஷனல் சிவில் ஏவியேசன் ஆர்கனைசேஷன் அமைப்பு (ICAO)  2017-ம் ஆண்டு வெளியீட்டில் குறிப்பிட்டுள்ளபடி, உலக அளவில் கடந்த 5 ஆண்டுகளில் விமான விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துவருகிறது, குறிப்பாக விபத்தின் எண்ணிக்கையிலும், விபத்து அளவிலும் குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

2016-ம் ஆண்டு குறைந்த எண்ணிக்கையில், அதாவது 75 விபத்துகளுக்கு குறைவாகவே நடந்துள்ளன, இது 2015-ம் ஆண்டைவிட 18% குறைவு ஆகும். இதுவரை இல்லாத வகையில் ஒரு மில்லியனுக்கு 2.1 என்ற அளவில் மட்டுமே நடந்துள்ளது.

விபத்து விகிதம் குறைந்த அளவில் இருப்பதால் பயணிகள் கவலையின்றி பயணிக்க முடியும் என்பது நல்ல செய்தி. பாதுகாப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் தரும் வகையில் விமானத்துறை அதிகாரிகளும் வல்லுநர்களும் சமரசமின்றி இயங்கி வருகிறார்கள்.

வரும் காலங்களில் நடுத்தர வர்க்கத்தினர், அவர்களது வருமானத்தில் இருந்து விமானப் பயணத்திற்கு கூடுதலாக தொகை செலவழிப்பார்கள். உடான் திட்டத்தின் படி, செயல்படும் நிலையிலும் செயல்படாத நிலையிலும் உள்ள பல்வேறு விமான நிலையங்கள் மூலம் பல்வேறு பகுதிகள் இணைப்பை ஊக்கப்படுத்துகிறது என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இரண்டாம் கட்ட நகரங்கள், ஆன்மிக தலங்கள், வரலாற்று முக்கியத்துவ நகரங்களுக்கு சுற்றுலா மற்றும் வியாபார பயணம் பரந்த அளவில் விரிவு படுத்தப்படும்.

செயற்கைத்தன்மை இல்லாத வகையில் பசுமை விமானத்தளம் உருவாக்குதல், ஏற்கெனவே இருக்கும் விமானத்தளத்தின் அளவை விரிவு செய்தல், திட்டமிட்ட மற்றும் திட்டமிடாத விமான சேவைகள் அதிகரித்தல் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படுவதன் மூலம் உள்நாட்டு பயணத்தை அதிகரிக்க முடியும்.

ஏரோ எக்ஸ்போ இந்தியா 2017 – ஏற்பாட்டாளர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதன்மூலம்  விமானத் துறையில் புதிய தொழில்நுட்பம் மற்றும் அறிவார்ந்த வளர்ச்சிகளை பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள முடியும்.

மேலும் முதன்முதலாக பி.ஹெச்.டி. சேம்பர் அறிமுகப்படுத்தியிருக்கும் ஹெலி எக்ஸ்போ இந்தியா எனப்படும் ஹெலிகாப்டர் சேவை இந்த ஆண்டு அறிமுகமானது மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் ஆண்டுகளில் ஹெலிகாப்டர் துறைக்கு மிகப்பெரிய தேவை இருக்கிறது. பயணிகள் ஹெலிகாப்டர் பல்வேறு வகையில், உதாரணமாக சுற்றுலா, மருத்துவம், சட்ட அமலாக்கம் மற்றும் பேரிடர் மேலாண்மையில் பெரும் பங்கு வகிக்கும் என்பதால் பெரிய வளர்ச்சி அடையும்.

இந்தியா மிகப்பெரிய விமானப் போக்குவரத்து மையமாக விரைவில் உருவாக்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன். வளர்ந்துவரும் விமான இணைப்புகள் மட்டுமின்றி பராமரிப்பு, பழுதுபார்த்தல் மற்றும் சீர் செய்யும் வசதிகள் கொண்ட துணை மையங்கள் அமைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்..

நன்றி

ஜெய்ஹிந்த்.

****


(Release ID: 1508669) Visitor Counter : 323


Read this release in: English