குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

நாடாளுமன்றத் தாக்குலின்போது உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு குடியரசு துணைத்தலைவர் புகழாரம்

Posted On: 02 NOV 2017 8:31PM by PIB Chennai

2009-ம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதலின்போது நமது உயிர்களைக் காக்கவும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் தங்கள் இன்னுயிர்களை ஈந்த தீரமிக்க பாதுகாப்பு வீரர்களுக்கு வீரவணக்கம் செய்வதாக குடியரசு துணைத்தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான திரு.வெங்கையா நாயுடு கூறியுள்ளார். மாநிலங்களவை செயலக ஊழியர்கள் கேளிக்கை குழு ஏற்பாடு செய்திருந்த கலாச்சார நிகழ்வில் அவர் பேசினார்.

மாநிலங்களவை செயலக ஊழியர்களுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும்,தமக்கு அளிக்கப்பட்ட வரவேற்பைக் கண்டு மகிழ்ந்ததாகவும் குடியரசு துணைத் தலைவர்  தெரிவித்தார்.

மாநிலங்களவையின் தலைவர் என்ற பொறுப்பு தனிச்சிறப்பு வாய்ந்த அரசியல் சாசனப் பதவி என்று அவர் கூறினார். மாநிங்களவைக்கு தலைமை வகிப்பதும், அவை நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுவதும் மிக முக்கிய பொறுப்பு என்று அவர் தெரிவித்தார். மாநிலங்களவையுடன் மிக நீண்ட தொடர்பு கொண்ட தமக்கு அந்த அவை பற்றி ஒரு பார்வை உள்ளது என திரு. வெங்கையா நாயுடு கூறினார்.

மாநிலங்களவை மற்றும் செயலகம் இயங்குவதில் தேவையான முன்னேற்றத்தை ஏற்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மிகச்சிறப்பு வாய்ந்த இந்த அவையின் அங்கமாக திகழ்வதிலும், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் முக்கிய அமைப்பில் சேவை புரிவது  பற்றியும் நாம் பெருமிதம் கொள்வோம் என்று திரு.நாயுடு தெரிவித்தார். நமது நாடாளுமன்றம் 100 கோடிக்கு மேற்பட்டோரின் அபிலாசைகளையும், நம்பிக்கைகளையும் பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார்.

திருமதி.மாலினி அவஸ்தியின் இசை நிகழ்ச்சி பிரமாதமாக இருந்தது என்று பாராட்டிய அவர், இசைக்கு மொழி தேவையில்லை என்றும், இசை, நடனம் ஆகியவை நமது மனத்தை இலகுவாக்கி நிம்மதியைத் தருபவை என்றும் கூறினார். கலை நிகழ்ச்சிகள் , நமக்கு திறமையுடன்  பணியாற்றும் புத்துணர்ச்சியைத் தரும் என்று அவர் தெரிவித்தார்.

 குடியரசு துணைத் தலைவரின் உரை வருமாறு ;

இந்த மாலையில் நான் உங்களுடன் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பைக் கண்டு மனம் குளிர்ந்தேன். மாநிங்களவையின் தலைவர் பொறுப்பை ஏற்ற பின்னர் ,முதல் முறையாக இது போன்ற நிகழ்ச்சியில் உங்களைச் சந்திக்கிறேன். இதற்காக மாநிலங்களவை தலைமை செயலருக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த மகிழ்ச்சிகரமான சூழலில் ,உங்களுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது எனக்கு மகிழ்ச்சியான தருணம்.

2009-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் அந்த துரதிருஷ்டமான நாளை நான் இன்னும் மறக்கவில்லை. மாநிலங்களவையின் சாதாரண பாதுகாப்பு வீரர்கள் நமது நாடாளுமன்றத்தை கொடிய தீவிரவாத தாக்குதலில் இருந்து பாதுகாத்தனர். தீவிரவாத தாக்குதலில் இருந்து நம்மையும், நமது ஜனநாயகத்தையும் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து காப்பாற்றிய தீரமிக்க அந்த வீரர்களுக்கு வணக்கம் செலுத்திகிறேன்.

இந்த மாலை வேளையில் திருமதி .மாலினி அவஸ்தியின் நிகழ்ச்சியை நேரடியாக காணும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த மாநிலங்களவை செயலக ஊழியர்களின் கேளிக்கை கிளப்புக்கு எனது வாழ்த்துக்கள். அவரது மந்திர இசை நிகழ்ச்சி அனைவரையும் பெரிதும் கவர்ந்தது என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே! மாநிலங்களவையின் தலைவர் என்ற பொறுப்பு தனிச்சிறப்பு வாய்ந்த அரசியல் சாசனப் பதவியாகும். மாநிங்களவைக்கு தலைமை வகிப்பதும், அவை நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுவதும் தனிப்பட்ட முறையில் எனக்கு மிக முக்கிய பொறுப்பாகும். மாநிலங்களவையுடன் மிக நீண்ட தொடர்பு கொண்ட எனக்கு அந்த அவை மற்றும் செயலகம் பற்றி ஒரு பார்வை உள்ளது..

செயலகத்தின் மூத்த அதிகாரிகளுடன் ஓரிரு முறை ஆலோசனை நடத்தியுள்ளேன். அந்தக் கலந்துரையாடலில், சிறப்பாக செயல்படும் மாநிலங்களவையை தேச நிர்மாணத்துக்கு பங்களிக்கும் வகையிலான முன்னுரிமைகளை நான் தெரிவித்தேன். நீங்கள் அனைவரும் எந்தப் பொறுப்பை வகித்தாலும், இந்த அவையின் வளர்ச்சிக்கும், சிறப்பான நடவடிக்கைக்கும் உரிய பங்களிப்பை செலுத்துவீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்.

மாநிலங்களவை மற்றும் செயலகம் இயங்குவதில் தேவையான முன்னேற்றத்தை ஏற்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். உங்கள் அனைவரின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுடன் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்பது நிச்சயம்.

மிகச்சிறப்பு வாய்ந்த இந்த பிரதிநிதிகள் அவையின் அங்கமாக திகழ்வதிலும், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் முக்கிய அமைப்பில் சேவை புரிவதலும் நாம் பெருமிதம் கொள்வோம்.. நமது நாடாளுமன்றம் 100 கோடிக்கு மேற்பட்டோரின் அபிலாசைகளையும், நம்பிக்கைகளையும் பிரதிபலிக்கிறது. நாடாளுமன்றத்தின் அறைகளில் மேற்கொள்ளப்படும் சட்டங்கள், கொள்கைகள், திட்டங்கள் நமது நாடு மற்றும் மக்களின் தலைவிதியை நிர்ணயிப்பதாகும். மாநிலங்களை செயல்படும் விதம் பற்றி சொல்லத் தேவையில்லை. மாநிலங்களவை செயலகம் ஏற்படுத்தப்பட்டதில் இருந்து மதிப்பு மிக்க சேவையை ஆற்றி வருகிறது.

செயலகத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உண்மையான கடமை உணர்வுடன் எப்போதும் செயல்படுவதை நான் கவனித்து வந்துள்ளேன். உயர் திறன் மற்றும் கடமை உணர்வை உறுதியாகப் பராமரிப்பீர்கள் என்று நான் உண்மையாக நம்புகிறேன்.

இந்த மாலை நேரத்தில், திருமதி. மாலினி அவஸ்தியின் சிறப்பான இசை நிகழ்ச்சியை காணும் வாய்ப்பை பெற்றோம். உண்மையில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நான் மிகவும் விரும்புவேன். இசைக்கு மொழி தேவையில்லை. இசை, நடனம் ஆகியவை நமது மனத்தை இலகுவாக்கி நிம்மதியைத் தருபவை. இத்தகைய. கலை நிகழ்ச்சிகள் , நமக்கு திறமையுடன்  பணியாற்றும் புத்துணர்ச்சியைத் தரும்.

இந்த வார்த்தைகளுடன், இந்த இனிய மாலை வேளையில் அருமையான காலச்சார நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த செயலருக்கும், ஊழியர்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


நன்றி, ஜெய் ஹிந்த்!

***


 


(Release ID: 1508668) Visitor Counter : 245


Read this release in: English