ரெயில்வே அமைச்சகம்

தாமதமாகும் ரயில்கள் குறித்த எஸ்.எம்.எஸ் மூலம் தகவல்; மத்திய ரயில்வே அமைச்சகம்

முதற்கட்டமாக ராஜ்தானி, ஷதாப்தி, தேஜாஸ் மற்றும் கட்டிமன் ஆகிய ரயில்களுக்கு சேவை

Posted On: 06 NOV 2017 7:15PM by PIB Chennai

நவம்பர் 03,2017 முதல் இந்த வசதி அறிமுகம்

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக வரும் ரயில்கள் குறித்து பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ் (குறுஞ்செய்தி) மூலம் தகவல் தெரிவிக்கும் வசதியை மத்திய ரயில்வே துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி நவம்பர் 03,2017 முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ராஜ்தானி, ஷதாப்தி, தேஜாஸ் மற்றும் கட்டிமன் ஆகிய ரயில்களுக்கு இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.

ரயில் வகை

மொத்த ரயில்கள்

ராஜ்தானி

46(23)

ஷதாப்தி

52(26)

தேஜாஸ்

2(1)

கட்டிமன்

2(1)

மொத்தம்

102

 

தாமதமாக வரும் ரயில்கள் குறித்து இடைநிலை ரயில்நிலையங்களில்  ஏறும் பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும். நேரத்திற்கு பயணிகள் நிலையத்திற்கு வர இது உதவும். இ-பயணசீட்டு மற்றும் பி.ஆர்.எஸ் மூலம்  பயணசீட்டு பெரும்போது தங்களின் மொபைல் எண்களை வழங்கிய பயணிகளுக்கு இந்த எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும்.

****

 


(Release ID: 1508638) Visitor Counter : 109
Read this release in: English