நிதி அமைச்சகம்
பொதுத்துறை வங்கிகளின் ஒருங்கிணைப்பிற்கான கட்டமைப்பிற்கு ஒப்புதல்
Posted On:
01 NOV 2017 5:37PM by PIB Chennai
பொதுத்துறை வங்கிகளின் ஒருங்கிணைப்பிற்கான மாற்று வழிமுறை மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. அருண் ஜேட்லி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்று வழிமுறை கீழ் உள்ளவாறு அமையும்
தலைவர் : திரு. அருண் ஜேட்லி, மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர்.
உறுப்பினர் : திரு. பியுஷ் கோயல், மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரி துறை அமைச்சர்.
உறுப்பினர் : திருமதி. நிர்மலா சீத்தாராமன், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர்.
ஒருங்கிணைந்த திட்டங்களை உருவாக்குவதற்கான கொள்கையளவிலான ஒப்புதல் பெறுவதற்கான முன்மொழிவு இந்த மாற்று வழிமுறை குழுமுன் சமர்பிக்கப்படும். மாற்று வழிமுறை குழு ஒப்புதல் அளிக்கப்பட்ட முன்மொழிவுகள் குறித்த அறிக்கை மூன்று மாதத்திற்கு ஒரு முறை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பிவைக்கப்படும்.
ஒருங்கிணைந்த திட்டங்களுக்கு அளித்துள்ள முன்மொழிவினை ஆய்வு செய்ய மாற்று வழிமுறை குழு வங்கிகளுக்கு ஒத்தரவு பிரபிக்கலாம்.
கொள்கை அடிப்படையில் ஒப்புதல் அளிக்கும் முன் மாற்று வழிமுறை குழு மத்திய ரிசர்வ் வங்கியிடம் கருத்துகளை பெரும்.
வங்கிகளின் ஒருங்கிணைந்த திட்டங்களின் முன்மொழிவினை மதிப்பீடு செய்ய மாற்று வழிமுறை குழு தனது அதன் சொந்த நடைமுறைகளை வகுக்கலாம். அந்த நடைமுறை தேசியமயமாக்கல் சட்டத்தின் {வங்கி நிறுவனங்கள்(கையகப்படுத்துதல் மற்றும் ஒப்படைத்தல்) சட்டம், 1970 மற்றும் 1980} நோக்கங்களை அடிப்படையாக கொண்டு இருக்கும்.
உருவாக்கப்பட்ட இறுதி திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யபடும்.
மாற்று வழிமுறை குழுவிற்கு இதற்கான சேவைகளை மத்திய நிதி சேவைகள் துறை செய்யும்.
*****
(Release ID: 1508611)
Visitor Counter : 160