குடியரசுத் தலைவர் செயலகம்

குடியரசுத் தலைவருடன் பூட்டான் மன்னர் சந்திப்பு

Posted On: 01 NOV 2017 1:38PM by PIB Chennai

பூட்டான் மன்னர் ஜிக்மே கேசார் நம்ஜெல் வாங்சுக் ,தமது ராணி மற்றும் பட்டத்து இளவரசருடன் நவம்பர் முதல் தேதியன்று ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்தை சந்தித்தார்.

மன்னரையும்,ராணியையும் வரவேற்ற குடியரசுத் தலைவர், மன்னர் பட்டத்துக்கு வந்த தினத்தில் அவரை வரவேற்பது பெரு மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டார். பட்டத்து இளவரசரையும் அவர்கள் இந்தியாவுக்கு முதல் முறையாக அழைத்து வந்ததற்கு அவர் நன்றி தெரிவித்தார்.

அரசாட்சியில் வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவு செய்ததைப் பாரட்டிய குடியரசுத் தலைவர், நிலையான, மகிழ்ச்சியான, முன்னேற்றமான பூட்டான் என்னும் அவரது தொலைநோக்குப் பார்வையும் புகழ்ந்துரைத்தார். பாரம்பரியத்தைப் பராமரித்து, இணக்கமான சூழலை உருவாக்கியதுடன், பூட்டான் அபரித வளர்ச்சியைப் பெற்றுள்ளது கண்டு இந்தியா புளகாங்கிதம் அடைவதாக அவர் குறிப்பிட்டார். பூட்டானுடன் இந்தியா தனது ஞானம், அனுபவம், வளங்கள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வதாக குடியரசுத் தலைவர் கூறினார். மேம்பாட்டுக்கான ஒத்துழைப்பு ,பூட்டான் அரசு மற்றும் மக்களின் முன்னுரிமையைப் பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

இந்தியாவும், பூட்டானும் சிறப்பான இருதரப்பு உறவுகளைப் பகிர்ந்து கொள்வதாக குடியசுத் தலைவர் குறிப்பிட்டார். நமது உறவுகள் சிறப்பான இடத்தை வகிப்பதாகக் கூறிய அவர், இருதரப்பு உறவுகள் மிகச்சிறந்த நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வின் அடிப்படையில் ஆனவை என்று தெரிவித்தார். நமது உறவுகளை எடுத்துக்காட்டாக குறிப்பிடும் வகையில் அவற்றை முன்னெடுத்து செல்லவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்தியா மற்றும் பூட்டானின் பாதுகாப்பு விசயங்கள் பரஸ்பரம் பிரிக்க முடியாதவை என்று குடியரசுத் தலைவர் திரு.கோவிந்த் கூறினார். டோக்லாம் பகுதி விவகாரத்தில் பூட்டான் அளித்த ஆதரவுக்கும்,அதில் பூட்டான் மன்னரின் தனிப்பட்ட தலையீட்டுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார். இந்த  விஷயத்தில் இந்தியாவும் பூட்டானும் சேர்ந்து உறுதியான நிலைப்பாட்டை மேற்கொண்டது இருநாடுகளின் உறவுக்கு தெளிவான சான்றாகும் என்று திரு.ராம் நாத் கோவிந்த் கூறினார்

*****


 

 

 

 



(Release ID: 1508609) Visitor Counter : 88


Read this release in: English