தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
மத்திய ஊழியர்கள் மற்றும் வேலைவாய்ப்பு (தனிப் பொறுப்பு) துறை இணை அமைச்சராக திரு சந்தோஷ் குமார் கங்வார் பதவியேற்பு
Posted On:
04 SEP 2017 1:32PM by PIB Chennai
மத்திய ஊழியர்கள் மற்றும் வேலைவாய்ப்புத் (தனிப் பொறுப்பு) துறை இணை அமைச்சராக திரு சந்தோஷ் குமார் கங்வார் இன்று பதவியேற்றார். பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய திரு. கங்வார், தேசத்தின் தேவைக்கேற்ப நாம் செயல்படுவோம். கொள்கை தொடர்பான விஷயங்களில் அனைத்து பங்குதார்களின் கருத்துகளை கேட்டு அறிவோம் என்றார்.
திரு. கங்வார் 1989 முதல் இப்பொழுது வரை (2009-14 தவிர்த்து) பரேய்லி தொகுதியில் இருந்து ஏழாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நிதி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, நாடாளுமன்ற விவகாரங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ஊழியர்கள் மற்றும் வேலைவாய்ப்பு, கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொது நிறுவனங்கள், ஜவுளி, நீர் ஆதாரங்கள், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை நதி தூய்மைப்படுத்துதல் ஆகிய துறைகளில் மிகுந்த அனுபவம் கொண்டவர். இவர் பல்வேறு நாடாளுமன்ற குழுக்களின் உறுப்பினராக பணிபுரிந்துள்ளார்.
பரேய்லியில் 1948-ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி திரு. கங்வார் பிறந்தார். ஆக்ரா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை (பி.எஸ்.சி) முடித்த அவர் ரோஹில்காண்ட் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை (எல்.எல்.பி) முடித்தார்.
*****
(Release ID: 1508597)