சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணை அமைச்சராக டாக்டர். விரேந்திர குமார் பதவியேற்பு
Posted On:
04 SEP 2017 3:55PM by PIB Chennai
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு. முக்தர் அப்பாஸ் நக்வியின் முன்னிலையில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணை அமைச்சராக டாக்டர். விரேந்திர குமார் பதவியேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய டாக்டர். விரேந்திர குமார் சிறுபான்மையினச் சமூகத்தின் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் வழங்குவோம் என்று கூறினார்.
டாக்டர். விரேந்திர குமார், மத்திய பிரதேசம் டிக்கம்கரின் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினர் ஆவார். ஆறாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். (11வது, 12 வது, 13 வது & 14 வது நாடாளுமன்ற அவைகளில் சாகர் தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டார், 15வது & 16வது நாடாளுமன்ற அவைகளில் டிக்கம்கரின் நாடாளுமன்ற தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டார்).
1954ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி பிறந்த டாக்டர் குமார், சாகரில் உள்ள டாக்டர். ஹரி சிங் கவ்ர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுநிலை பட்டமும் குழந்தை தொழிலாளர்கள் குறித்த ஆய்வில் முனைவர் பட்டமும் பெற்றார்.
*****
(Release ID: 1508594)