நிலக்கரி அமைச்சகம்

சாலை வழியாக நிலக்கரியைக் கொண்டு செல்லும் வாடிக்கையாளர்கள் வசதிக்கென கோல் இந்தியா நிறுவனம் “கிரஹாக் சதக் கோய்லா விதாரன் ஆப்” என்ற செயலியை தொடங்கியுள்ளது.

நிலக்கரி ஏற்றுதல், அனுப்புதல் முறைகளில் வெளிப்படைத் தன்மைக்கு இந்த செயலி உதவும்.

நிலக்கரி ஏற்றும் திட்டங்களுக்கு ஏற்ற வாகனப் போக்குவரத்து திட்டமிடலுக்கு இந்த செயலி உதவும்.

விற்பனை உத்தரவுகளுக்கு எதிராக வழங்கப்பட்ட தேதி வாரியிலான வாகனங்கள் வாரியிலான நிலக்கரி அளவை இந்த செயலியில் பெறலாம்.

Posted On: 07 NOV 2017 3:22PM by PIB Chennai

சாலை வழியாக நிலக்கரியைக் கொண்டு செல்லும் கோல் இந்தியா வாடிக்கையாளர்கள் வசதிக்கென ரயில்வே மற்றும் நிலக்கரித் துறை அமைச்சர் திரு பியூஸ் கோயல் கிரஹாக் சதக் கோய்லா விதாரன் ஆப்என்ற செயலியை தொடங்கி வைத்தார்.

 

       கொல்கத்தாவில் இந்திய நிலக்கரி நிறுவனத்தின் நிறுவன நாள் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட இந்த எளிமையான செயலி நிலக்கரி அனுப்பும் நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மையை அடைய உதவுகிறது. முதலில் வந்தவர்கள் முதலில் கொண்டு செல்லலாம் என்ற கொள்கையின் அடிப்படையில் நிலக்கரி அனுப்புதல் நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் கருவியாகவும் இச்செயலி பயன்படும். மேலும் விற்பனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது முதல் சாலை வழியாக நிலக்கரி அனுப்பப்படுவது வரை அனைத்து நடவடிக்கைகளையும் இந்த செயலி கவனிக்கும்.

      

       வாடிக்கையாளர்களைப் பொருத்தவரை விற்பனை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு தகவல்களை உடனுக்குடன் பெறுதல், நிலக்கரி ஏற்றுதல் அனுப்பிவைத்தல் நடைமுறையில் வெளிப்படைத் தன்மை ஆகிய நன்மைகள் இந்த செயலியால் கிடைக்கின்றன. நிலக்கரி ஏற்றும் திட்டத்திற்கு ஏற்ப வாகனப் போக்குவரத்தை திட்டமிடவும் இந்த செயலி உதவும். கொள்முதல், உற்பத்தி, இருப்பு நிர்வாகம் ஆகியவற்றிலும் வாடிக்கையாளர்களுக்கு திட்டமிடுதலில் உதவும்.

 

       இந்த செயலியின் முக்கிய அம்சம், விற்பனை உத்தரவுக்கு எதிராக வழங்கப்பட்ட நிலக்கரி அளவை தேதிவாரியாக வாகனங்கள் வாரியாக வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க செய்வது ஆகும். குறிப்பிட்ட காலத்தில் திட்டம் வாரியான, சுரங்க வாரியான, தர வாரியான, வாடிக்கையாளர் வாரியான நிலக்கரி விவரங்களும் இந்த செயலி மூலம் கிடைக்கும்.

 

       நிலக்கரி ஏற்றுவதைப் பொறுத்தவரை ஒதுக்கீட்டுக்கு எதிரான நிலக்கரி எடுத்துக்கொண்ட நிலவர விவரம், நிலக்கரி எங்கிருந்து அனுப்பபட்டது எந்த வாகனங்களில் அனுப்பபட்டது போன்ற விவரங்களும் செயலி மூலம் பெறலாம்.

 

       வாடிக்கையாளர்களின் தேவையை பெரிய அளவில் நிலக்கரி இந்தியா நிறுவனம் சந்தித்து வருகிறது: முக்கியமாக வர்த்தகம் புரிதலில் எளிமை என்ற கோட்பாடை கடைப்பிடித்து வருகிறது. டிஜிட்டல் இந்தியா இலக்குகளை அடையவும் வெளிப்படைத் தன்மையை உறதி செய்யவும் இந்திய நிலக்கரி நிறுவனத்தின் இந்த திட்டம் பெரிதும் பயன்படும்.

 

       சுரங்கங்களிலிருந்து குறைந்த தொலைவில் அமைந்துள்ள மின்சார உற்பத்தி நிலையங்களுக்கு  நிலக்கரியை விரைந்து அனுப்ப சுரங்க இறுப்புகளிலிருந்து சாலை வாரியாக அனுப்பும் திட்டத்தை இந்த நிறுவனம் தொடங்கியது நினைவிருக்கலாம். இதனை அடுத்து 50 முதல் 60 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மின் உற்பத்தி நிலையங்கள், அருகிலுள்ள சுரங்கத்திலிருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு நிலக்கரியைப் பெற்றுக்கொள்ளலாம்.

 

       2016 – 2017 –ல் சாலை வழியாக 140 மில்லியன் டன் நிலக்கரி அனுப்பப்பட்டது. இது மொத்தம் அனுப்பப்பட்ட 542 மில்லியன் டன் நிலக்கரியில் 26% ஆகும். இந்த நிதி ஆண்டில் சாலை வழியாக கொண்டு செல்லப்பட்ட நிலக்கரி அளவு குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது. 2017 அக்டோபர் இறுதியில் சாலை வழியாகக் கொண்டு செல்லப்பட்ட 93 மில்லியன் டன் நிலக்கரி, மொத்தம் எடுத்து செல்லப்பட்ட 317 மில்லியன் டன் அளவில் 29% ஆகும். 2017 அக்டோபர் இறுதி வரை சாலை வழியாக எடுத்துச் செல்லப்பட்ட நிலக்கரியின் அளவு, இதே காலத்தில், சென்ற ஆண்டு எடுத்து செல்லப்பட்டதை விட 12 மில்லியன் டன் கூடுதலாகும்.

*****

 

 



(Release ID: 1508563) Visitor Counter : 114


Read this release in: English