பாதுகாப்பு அமைச்சகம்

யூரி பகுதியில் ராணுவத்தினர் 2 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்று பெரிய ஊடுருவல் முயற்சியை முறியடித்தனர்

Posted On: 05 NOV 2017 9:01PM by PIB Chennai

ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் யூரி பகுதியில் எல்லைக் கட்டுபாட்டுக் கோட்டு அருகே பெரிய ஊடுருவல் முயற்சியை ராணுவம் முறியடித்தது. எல்லைக் கட்டுபாட்டு கோட்டு அருகே நிலவும் கடுமையான நிலப்பகுதியைப் பயன்படுத்தி இம்மாதம் நான்கு – 5 –ம் தேதிக்கு இடைப்பட்ட இரவில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை ராணுவத்தினர் இடைமறித்தனர். இதனை அடுத்து பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினர். பின்னர் ஏற்பட்ட சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொள்ளப்பட்டனர்.

     எல்லைக் கட்டுபாட்டு கோட்டுப் பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ராணுவத்தினர் பயங்கரவாதிகளின் சடலங்களை கண்டுப்பிடித்தனர், ஆயுதங்கள் மற்றும் சண்டைக்குப் பயன்படும்  பொருட்கள் ஆகியவற்றையும் ராணுவத்தினர் கண்டுபிடித்து அகற்றினர். கடந்த 5 மாதங்களில் யூரி பகுதியில் நடைபெற்ற 4 –வது ஊடுருவல் முயற்சியாகும் இது.

கர்னல் அமான் ஆனந்த்

ராணுவ பொதுமக்கள் தொடர்பு அதிகாரி

*****



(Release ID: 1508557) Visitor Counter : 106


Read this release in: English