மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

மத்திய மனித வள மேம்பாடு துறை இனை அமைச்சராக டாக்டர் சத்ய பால் சிங்

प्रविष्टि तिथि: 04 SEP 2017 4:54PM by PIB Chennai

புது தில்லியில் இன்று மத்திய மனித வள மேம்பாடு துறை இனை அமைச்சராக டாக்டர் சத்ய பால் சிங் பொறுப்பேற்றார். நாடாளுமன்றத்தில் உத்தர பிரதேசதின் பாக்பட் தொகுதியின் பிரதிநிதியாக தேர்ந்தேடுக்கப்பட்டவர்.

டாக்டர் சத்ய பால் சிங்  16 வது (2014-2019) மாநிலங்களவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.  நாடாளுமன்ற வளாகத்தின் கூட்டு நாடாளுமன்ற குழு உறுப்பினர், உள்துறை அமைச்சகத்தின் நிலைக்குழு உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம்  மற்றும் ஊதியப்படி  கூட்டுக் குழுவின் உறுப்பினர், மத்திய ஊரக வளர்ச்சி, பஞ்சாயத் ராஜ் மற்றும் குடிநீர் மற்றும் துப்புரவு துறைக்கான  பரிந்துரைக்குழுவின் உறுப்பினர் ஆகிய பொறுப்புகளிலும் இவர் பணியாற்றுகிறார்.

1980-ஆம் ஆண்டின் இந்திய காவல் பணியை சேர்ந்த திரு. சிங் பல்வேறு பொறுப்பான பதவிகளில் மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.  மும்பை, பூனே, நாக்பூர் ஆகிய நகரங்களுக்கு காவல் ஆணையராகவும் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மற்றும் நிறுவாகத் துறையின் கூடுதல் டிஜிபி ஆகவும் பணியாற்றியுள்ளார். அரசு பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற அவர், 2014-ஆம் ஆண்டு அரசியலில் சேர்ந்தார்.     

 


(रिलीज़ आईडी: 1508475) आगंतुक पटल : 186
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English