நீர்வளத் துறை அமைச்சகம்

வேளாண் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரி டெல்லியில் நடைபெற்ற உயர் நிலைக் குழுக் கூட்டத்தில் ஆய்வு

Posted On: 02 NOV 2017 5:19PM by PIB Chennai

ஆந்திரப் பிரதேசம், கர்நாடாகா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் பிரதான் மந்திரி கிஷான் சின்சாயி யோஜனா (பிஎம்கேஎஸ்ஒய்-பண்ணை உற்பத்தித் திறனை மேம்படுத்துதல், நாட்டின் வளங்களை சிறப்பாக பயன்படுத்துவதற்கான தேசிய நோக்கம்) திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து புதுடெல்லியில் நவம்பர் 1-ம் தேதி நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில் மத்திய நீர் ஆதார, ஆறுகள் மேம்பாடு, கங்கையைத் தூய்மைப்படுத்துதல் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி மதிப்பீடு செய்தார்.

 

அப்போது மேற்கண்ட மாநிலங்களில் இத் திட்டத்தின் செயலாக்கம் குறித்து திருப்தி தெரிவித்தார் அமைச்சர். மேலும் எந்தவித தாமதமும் இன்றி நிலுவையில் உள்ள திட்டங்கள் அனைத்தையும் அமல்படுத்துமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.

 

ஆந்திர மாநிலத்துக்கான 8 திட்டங்களில் 1 திட்டம் முடிவடைந்துவிட்டது என்றும்  6 திட்டங்கள் நடப்பு நிதியாண்டில் முடிவடைந்துவிடும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். மீதமுள்ள ஒரு திட்டம் அடுத்த நிதியாண்டில் முடிவடையும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 

ஒடிஷாவுக்கான 8 திட்டங்களில் 2 திட்டங்கள் முடிவடைந்ததுவிட்டன என்று குறிப்பிட்டார். 3 திட்டங்கள் நடப்பு நிதியாண்டில் முடிவடைந்துவிடும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மீதமுள்ள 3 திட்டங்கள் அடுத்த நிதியாண்டில் முடிவு பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

கர்நாடகத்தில் 5 ஏஐபிபி (விரைவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன நன்மைகள் திட்டம்)  திட்டங்களில்  ஒரு திட்டம் பூர்த்தி அடைந்துவிட்டது என்றும் மற்ற 4 திட்டங்கள் அடுத்த நிதியாண்டில் பூர்த்தி அடையும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 

ஏஐபிபி திட்டங்கள் பூர்த்தி அடைந்தவுடன் ஆந்திராவில் 2 லட்சத்து 28 ஆயிரம் ஹெக்டேரில் நீர்ப்பாசன வசதி உருவாகும் என்றார். அதே போல் ஒடிஷாவில் 1 லட்சத்து 25 ஆயிரம் ஹெக்டேரும். கர்நாடகத்தில் 2 லட்சத்து 30 ஆயிரம் ஹெக்டேரும் நீர்ப்பாசன வசதி உருவாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 

இந்தக் கூட்டத்தில் நீர் ஆதாரத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் 3 மாநிலங்களின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

 

 

 


(Release ID: 1508471) Visitor Counter : 102


Read this release in: English