நீர்வளத் துறை அமைச்சகம்

தேசத்தின் 91 முதன்மை நீர்த்தேக்கங்களில் நீர் சேமிப்பின் அளவு ஒரு சதவிகிதம் குறைந்துள்ளது.

Posted On: 03 NOV 2017 10:46AM by PIB Chennai

நவம்பர் 2,2017 அன்று முடிவடைந்த வாரத்தின் இறுதியில், தேசத்தின் 91  முதன்மை நீர்த்தேக்கங்களில் இருக்கும் நீரின் அளவு,  108.373    BCM ஆகும். இது அந்த நீர்த் தேக்கங்களின் மொத்த சேமிப்பின் அளவில் 69% ஆகும். அக்டோபர் 26, 2017 இல் முடிந்த வாரத்தில் இந்த சதவீதம் 70 ஆக இருந்தது. நவம்பர் 2,2017 அன்று முடிவடைந்த வாரத்தின் இறுதியில் இருந்த நீரின் அளவு,  சென்ற ஆண்டின் இதே பருவத்தில் இருந்த அளவில் 96% ஆகும். இது கடந்த பத்து ஆண்டுகளின் சராசரி சேமிப்பின் அளவில் 96% ஆகும்.

இந்த 91 நீர்த்தேக்கங்களின் மொத்த சேமிப்புத் திறன் 157.799 BCM ஆகும். இது நாட்டில் உருவாக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ள மொத்த சேமிப்புத் திறனான 253.388 BCM இல் 62% ஆகும். இந்த 91 நீர்த்தேக்கங்களில், 37 நீர்த்தேக்கங்கள்,  நீர் மின்சக்தி உற்பத்தி நிலையங்களை பெற்றிருக்கின்றன. அவற்றின் நிறுவப்பட்ட மின் உற்பத்தி திறன் 60 MWக்கு மேலாகும்.

பிரதேசங்கள் வாரியாக சேமிப்பு நிலை:

 

வடக்குப் பகுதி

     வடக்குப் பகுதியில் இமாச்சல் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்கள் உள்ளன. இவற்றில் CWC கண்காணிப்பின் கீழ் ஆறு நீர்த்தேக்கங்கள் உள்ளன. இவற்றின் மொத்தப் பயன்பாட்டு நீர் சேமிப்பின் அளவு 18.01 BCM.  தற்போதிருக்கும் சேமிப்பின் அளவு 13.14 BCM. ஆகும், இது இந்த நீர்த்தேக்கங்களின் மொத்தப் பயன்பாட்டு சேமிப்பின் அளவில் 73% ஆகும். கடந்த ஆண்டின் இதே பருவத்தில் நீர்சேமிப்பு 67% ஆக இருந்தது.  இதே பருவத்தின் கடந்த பத்து ஆண்டுகளில் இந்த நீர்த்தேக்கங்களின் சராசரி பயன்பாட்டுச் சேமிப்பு, அவற்றின் மொத்த சேமிப்பில் 75% ஆக இருந்தது.  இதன்படி நடப்பாண்டின் சேமிப்பு சென்ற ஆண்டைவிட அதிகமாக உள்ளது. ஆனால் இதே பருவத்தின் கடந்த பத்தாண்டுகளின் சராசரி சேமிப்பை விட குறைவாகும்.

 

கிழக்குப் பகுதி

                கிழக்குப் பகுதியில் ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம், திரிபுரா மாநிலங்கள் உள்ளன. இப்பகுதியில் CWC கண்காணிப்பின் கீழ் 15 நீர்த்தேக்கங்கள் உள்ளன. இவற்றின் மொத்தப் பயன்பாட்டு நீர்சேமிப்பு திறன் 18.83 BCM. தற்போது இந்த நீர்த்தேக்கங்களில் இருக்கும்  நீர் சேமிப்பின் அளவு 14.81 BCM. இந்த நீர்த்தேக்கங்களின் மொத்த சேமிப்புத் திறனில் இது 79% ஆகும். கடந்த ஆண்டின் இதே பருவத்தில் நீர்சேமிப்பின் அளவு 84% ஆக இருந்தது. இதே பருவத்தின் கடந்த பத்து ஆண்டுகளில் இந்த நீர்த்தேக்கங்களின் சராசரி பயன்பாட்டுச் சேமிப்பு, அவற்றின் மொத்த சேமிப்பில் 74% ஆக இருந்தது. இதன்படி நடப்பாண்டின் நீர்சேமிப்பு சென்ற ஆண்டைவிட குறைவாக உள்ளது. ஆனால் இதே பருவத்தின் கடந்த பத்தாண்டுகளின் சராசரி சேமிப்பை விட அதிகமாகும்.

 
மேற்குப் பகுதி

     மேற்குப் பகுதியில் குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்கள் உள்ளன. இப்பகுதியில் CWC கண்காணிப்பின் கீழ் 27 நீர்த்தேக்கங்கள் உள்ளன. இவற்றின் மொத்த பயன்பாட்டு நீர்சேமிப்பு அளவு 27.07 BCM.  தற்போது இந்த நீர்த் தேக்கங்களில் இருக்கும் மொத்த நீர் சேமிப்பின் அளவு  20.57 BCM. இவற்றின் மொத்த பயன்பாட்டு நீர்சேமிப்பின் அளவில் இது 76% ஆகும்.  கடந்த ஆண்டின் இதே பருவத்தில் சேமிப்பு 84% ஆக இருந்தது.  இதே பருவத்தின் கடந்த பத்து ஆண்டுகளில் இந்த நீர்த்தேக்கங்களின் சராசரி பயன்பாட்டுச் சேமிப்பு, அவற்றின் மொத்த சேமிப்பில் 77% ஆக இருந்தது.  இதன்படி நடப்பாண்டின் சேமிப்பு சென்ற ஆண்டைவிட குறைவாக உள்ளது. அது மட்டுமின்றி, இதே பருவத்தின் கடந்த பத்தாண்டுகளின் சராசரி சேமிப்பை விட குறைவானதாகும்.

 

மத்தியப் பகுதி

       மத்தியப் பகுதியானது, உத்திரப் பிரதேசம், உத்தரகாண்ட்,  சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைக் கொண்டது. இந்தப் பகுதியில் CWC கண்காணிப்பின் கீழ் வரும் 12 நீர்த்தேக்கங்கள் உள்ளன. இவற்றின் மொத்த பயன்பாட்டு நீர் சேமிப்பின் அளவு 42.30 BCM ஆகும். தற்போது  இந்த நீர்த்தேக்கங்களில் சேமிக்கப்பட்டிருக்கும்  நீரின் அளவு 26.11 BCM.  இது இந்த நீர்த்தேக்கங்களின் மொத்த சேமிப்பு அளவில் 62% ஆகும். கடந்த ஆண்டின் இதே பருவத்தில் சேமிப்பு 89% ஆக இருந்தது.  இதே பருவத்தின் கடந்த பத்து ஆண்டுகளில் இந்த நீர்த்தேக்கங்களின் சராசரி பயன்பாட்டுச் சேமிப்பு, அவற்றின் மொத்த சேமிப்பில் 70% ஆக இருந்தது. இதன்படி நடப்பாண்டின் சேமிப்பு சென்ற ஆண்டைவிட குறைவாக உள்ளது. அது மட்டுமின்றி, இதே பருவத்தின் கடந்த பத்தாண்டுகளின் சராசரி சேமிப்பை விட குறைவானதாகும்.

 

தெற்குப் பகுதி

       தென் பகுதியில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா - தெலுங்கானா இரு மாநிலங்களிலும் உள்ள ஒருங்கிணைந்த திட்டங்கள் ஆகியஅடங்கும். இப்பகுதியில் CWC கண்காணிப்பின் கீழ் 31 நீர்த்தேக்கங்கள் உள்ளன. இவற்றின் மொத்த பயன்பாட்டு நீர் சேமிப்புத் திறன்  51.59 BCM. தற்போது இந்த நீர்த்தேக்கங்களில் இருக்கும் மொத்த சேமிப்பின் அளவு 33.75 BCM ஆகும். அவற்றின் மொத்த சேமிப்புத் திறனில் இது 65% ஆகும்கடந்த ஆண்டின் இதே பருவத்தில் சேமிப்பு 47% ஆக இருந்தது.  இதே பருவத்தின் கடந்த பத்து ஆண்டுகளில் இந்த நீர்த்தேக்கங்களின் சராசரி சேமிப்பு, அவற்றின் மொத்த சேமிப்பில்68% ஆக இருந்தது. இதன்படி நடப்பாண்டின் சேமிப்பு சென்ற ஆண்டைவிட மேலானதாக உள்ளது.  ஆனால்,  இதே பருவத்தின் கடந்த பத்தாண்டுகளின் சராசரி சேமிப்பை விட இது குறைவானதாகும்.
       இமாச்சல பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம், திரிபுரா, உத்தரகாண்ட், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திராதெலுங்கானா (இரு மாநிலங்களிலும் உள்ள) ஒருங்கிணைந்த திட்டங்கள்  ஆகிய மாநிலங்கள் கடந்த ஆண்டைவிட சிறந்த நீர்சேமிப்பை பெற்றுள்ளன. இராஜஸ்தான், ஜார்கண்ட், ஒடிசா, குஜராத், மகாராஷ்டிரா, உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கடந்த ஆண்டை விட குறைவாகவே நீர்சேமிப்பு உள்ளது.

 

*****

 

 


(Release ID: 1508470) Visitor Counter : 76


Read this release in: English