குடியரசுத் தலைவர் செயலகம்

ஆர்மீனியா தலைவர் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு

Posted On: 03 NOV 2017 5:53PM by PIB Chennai

ஆர்மீனியா குடியரசுத் தலைவர் திரு. செர்ஸ்க் சர்க்சியான் குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்தை இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தார்.

இந்தியாவிற்கு முதல் முதலாக பயணம் மேற்கொண்டுள்ள ஆர்மீனியா குடியரசுத் தலைவரை வரவேற்ற திரு. ராம் நாத் கோவிந்த், அதிபர் ஆட்சியில் இருந்த ஆர்மீனிய நாட்டினை ஜனநாயக ஆட்சியாக வெற்றிகரமாக மாற்றியதற்கு பாராட்டு தெரிவித்தார். உலக உணவு இந்தியா கண்காட்சியில் பங்கேற்பதற்காக திரு. சர்க்சியானுக்கு குடியரசுத் தலைவர் நன்றி தெரிவித்தார்.

இந்தியாவும் ஆர்மீனியாவும் மிக நெருங்கிய உறவினை கொண்டது. நமது இந்த நட்புறவு வரலாற்று தொடர்புடையது. பல நூற்றாண்டுகளாக இரு நாட்டு மக்களும் உறவாடிவருகின்றனர். கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பல இந்திய நகரங்களில் ஆர்மீனிய சகோதர சகோதரிகளுடன் ஒன்றாக வாழும் பெருமை எங்களுக்கு உண்டு. இந்த பொது பாரம்பரியம் எங்களுக்கு மிகவும் பெருமையை அளிக்கிறது என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

நமது இருதரப்பு உறவு மிகவும் வலிமையானது. இருப்பினும், இரு நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவினை மேலும் வலுபடுத்த பல வாய்ப்புகள் உள்ளது. சுகாதார துறை இருதரப்பு ஒத்துழைப்பிற்கு மிகவும் ஏற்றது. இந்த பயணம் இந்திய-ஆர்மீனிய நாடுகளுக்கு இடையே உள்ள உறவிற்கு புது உத்வேகத்தை அளிக்கும் என்று அவர் கூறினார்.

 

யெரவன் மாநில மொழியியல் பல்கலைக்கழகத்தில் இந்தி இடம் பெற்றிருப்பது இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக குடியரசுத் தலைவர் கூறினார். உடல் கலாச்சாரம் மற்றும் விளையாட்டிற்கான ஆர்மேனிய நிறுவனத்தில் யோகாவிற்கான வகுப்பு அமைப்பதற்கான பணிகள் நடந்து வருவதையும் அவர் எடுத்து கூறினார். இது போன்ற முயற்ச்சிகள் இந்திய-ஆர்மீனிய உறவினை மேலும் வலுபடுத்தும் என்று தாம் நம்புவதாக குடியரசுத் தலைவர் கூறினார்.

    

*****



(Release ID: 1508469) Visitor Counter : 90


Read this release in: English