பிரதமர் அலுவலகம்
பசிபிக் ஓய்வூதியம் மற்றும் முதலீட்டு நிறுவனத்தின் குழு பிரதமருடன் சந்திப்பு
प्रविष्टि तिथि:
06 NOV 2017 6:36PM by PIB Chennai
பசிபிக் ஓய்வூதியம் மற்றும் முதலீட்டு நிறுவனத்தின் சார்பில் பேராளர்கள் குழு அதன் தலைவர் திரு. லயனல் சி. ஜான்சன் தலைமையில் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தது.
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தங்களை அந்தக் குழு உறுப்பினர்கள் வெகுவாகப் பாராட்டினர். அத்துடன் நாட்டில் உள்ள வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறித்தும் விவாதித்தனர். அந்நிய நேரடி முதலீடு (FDI), சரக்கு மற்றும் சேவை வரி (GST) பொருளாதார நடவடிக்கைகள் குறித்து அக்குழுவினர் விவாதித்தனர்.
இந்தியாவில் முதலீடு செய்வதற்கான பல்வேறு வாய்ப்புகள் குறித்து பிரதமர் அவர்களுக்கு எடுத்துரைத்தார். தொழில் புரிவதற்கு ஏற்ப அண்மையில் கொண்டுவரப்பட்ட எளிய நடைமுறைகள், சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்தும் அவர் விவரித்தார்.
அதிகரித்து வரும் இந்திய மக்களின் விருப்பங்களுடன் வலுவான பொருளாதார அடிப்படைகள் முதலீட்டுக்கு குறிப்பிடத் தக்க வாய்ப்பை ஏற்படுத்துவதைப் பிரதமர் விளக்கினார். புதுப்பிக்கத் தக்க எரிசக்தித் தொழிலிலும் இயற்கை விவசாயத் தொழில்களிலும் முதலீடு செய்வதற்கான சாத்தியக் கூறுகளையும் பிரதமர் வலியுறுத்தினார். பசிபிக் பென்ஷன் மற்றும் முதலீட்டு நிறுவனம் அறக்கட்டளையைப் போல் நிதி முதலீடு செய்வதை பிரதமர் வரவேற்றுப் பாராட்டினார். இத்தகைய அறக்கட்டளை நடைமுறையை இந்தியா நன்கு உணர்ந்துள்ளது என்றும், அதைத்தான் மகாத்மா காந்தி உருவாக்கினார் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
****
(रिलीज़ आईडी: 1508430)
आगंतुक पटल : 126
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English