உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க உதவும் புதிய கருவி ரூ. 5 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டது

Posted On: 06 NOV 2017 4:51PM by PIB Chennai

சென்னை சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை 07 –ல் விமானங்கள் தரையிறங்க உதவும் கருவிமுறை (ILS)  இந்திய விமானநிலைய ஆணையத்தால் (ஏஏஐ) ரூ. ஐந்து கோடி செலவில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. விமானிகள் ஓடுபாதையில் விமானத்தை தரையிறக்க  தேவையான வழிகாட்டுதலை இந்த புதிய ஐ.எல்.எஸ் கருவிமுறை வழங்கும். புதிதாக பொருதப்பட்டுள்ள ஐ.எல்.எஸ் கருவிமுறை விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் மழை, கீழ்மட்ட மேகங்கள், பனிப்புகை ஆகிய காரணங்களால் ஓடுபாதை தெளிவாக தெரியாத நேரத்தில் விமானங்கள் எளிதாக  தரையிறங்க உதவும்.

புதிய கருவி முறை மிக கூர்மையான திசையறியும் அலைக்கம்பத்தைக் கொண்டுள்ளது. (“Wide Aperture Log Periodic Antenna Array [LPDA]” system). பழைய  ஐ.எல்.எஸ் கருவியில் இருந்த குறைபாடுகள் இந்த புதிய அலைக்கம்பத்தில் சரிசெய்யப்பட்டுள்ளது. இது மிகவும் குறைவான உயரத்தில் விமானம் பறக்கும் போதும் வழி காட்துவதுடன் துல்லியத்தை அதிகரித்துள்ளது. இது விமானம் தரை இறங்கும் போது பாதுகாப்பை அதிகரிக்கிறது.

நார்வே நாட்டைச் சேர்ந்த இந்திரா நவியா ஏ.எஸ், என்ற நிறுவனம் இந்த கருவியை தயாரித்து உள்ளது. புதிய ஐ.எல்.எஸ் கருவியை நிர்மாணித்தல் நெறிப்படுத்தல், சோதித்தல், விமான ஆய்வு மற்றும் செயல்படுத்தல் ஆகியவற்றை விமான நிலைய ஆணையத்தின் தொழில்நுட்ப வல்லுந‌ர்கள் மேற்கொண்டுள்ளனர்.

அரவி



(Release ID: 1508408) Visitor Counter : 168


Read this release in: English