இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

எகிப்த ஷ்ரம் எல் ஷேக்கில் உலக இளைஞர்கள் கூட்டம்- மத்திய அமைச்சர் கர்னல் ராஜ்யவர்தன் ரத்தோர் பங்கேற்க உள்ளார்.

இடுகை இடப்பட்ட நாள்: 04 NOV 2017 11:12AM by PIB Chennai

எகிப்த ஷ்ரம் எல் ஷேக்கில் நடைபெற உள்ள உலக இளைஞர்கள் கூட்டத்தில் பங்கேற்க மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை (தனிபொறுப்பு) அமைச்சர் கர்னல் ராஜ்யவர்தன் ரத்தோர் புறப்பட்டார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் சார்பாக அமைச்சர் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். 

ஐந்து நாள் கூட்டத்தை எகிப்த அதிபர் அப்தல்இல் பட்டே எல்சிசி நாளை தொடங்கி வைக்க உள்ளார். மாநில/ அரசு தலைவகள், 14 நாடுகளின் இளைஞர் துறை அமைச்சர்கள், ஐ.நா பிரதிநிதிகள், அரப் நாடுகள் மற்றும் ஆப்ரிக்க நாடுகள் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள், சவால்கள், வருங்கால தலைவர்கள் உருவாக்குதல், பாலின சமத்துவம், பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் போன்ற தலைப்புகள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1508388) வருகையாளர் எண்ணிக்கை : 72
இந்த வெளியீட்டை படிக்க: English