சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

ஐதராபாத்தில் நடைபெற்ற “குருபர்வ்” நிகழ்ச்சியில் திரு முக்தர் அப்பாஸ் நக்வி பங்கேற்பு

பல்வேறு மதங்கள், கலாச்சாரம் மற்றும் வழிப்பாடு முறைகள் இருந்தும் “பன்முகதன்மையில் ஒற்றுமை”-க்கு இந்தியா எடுத்துக்காட்டாக உள்ளது

Posted On: 04 NOV 2017 7:38PM by PIB Chennai

மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் நலத் துறை அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி பல்வேறு மதங்கள், கலாச்சாரம் மற்றும் வழிப்பாடு முறைகள் இருந்தும் பன்முகதன்மையில் ஒற்றுமை”-க்கு எடுத்துக்காட்டாக இந்தியா உள்ளது என்றும் பொறுமை, நல்லிணக்கம், அமைதி மற்றும் சகோதரதன்மை அனைத்து மதங்களிலும் உள்ளது என்று கூறினார்.

ஐதராபாத்தில், குருத்வாரா ஸ்ரீ குரு சிங் சபா, குரு நானக் தேவ்ஜி மகாராஜின் “குருபர்வ்” முன்னிட்டு ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சியில் குரு நானக் தேவ்ஜி மகாராஜின் பொறுமை, நல்லிணக்கம், அமைதி மற்றும் சகோதரதன்மை குறித்த செய்தி இன்றும் பொருத்தமாக உள்ளது என்று திரு நக்வி தெரிவித்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு “ஒரே பாரதம், ஒன்றுபட்ட பாரதம்” என்ற அர்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. நாட்டின் ஒற்றுமையில் குழப்பத்தை ஏற்படுத்தும் எந்தவிதமான சதியையும் நாம் வெற்றி அடைய விடகூடாது என்று கூறினார்.

*****


(Release ID: 1508387) Visitor Counter : 89


Read this release in: English