பிரதமர் அலுவலகம்

ரேபரேலியில் உள்ள என்.டி.பி.சி. ஆலையில் ஏற்பட்ட விபத்திற்கு பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 01 NOV 2017 10:48PM by PIB Chennai

உத்தர பிரதேச மாநிலம், ரேபரேலியில் உள்ள தேசிய அனல் மின் உற்பத்திக் கழகத்தின் (என்.டி.பி.சி.) ஆலையில் ஏற்பட்ட விபத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார்.

“ரேபரேலியில் உள்ள என்.டி.பி.சி. ஆலையில் ஏற்பட்ட விபத்து குறித்து அறிந்து ஆழ்ந்த வேதனை அடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருடன் என் எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். நிலைமை மிகவும் நெருக்கமாக கண்காணிக்கப்படுகிறது. இயல்பு நிலை திரும்ப அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.


(रिलीज़ आईडी: 1508304) आगंतुक पटल : 117
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English