நிதி அமைச்சகம்

தேசிய ஓய்வூதிய அமைப்பில் (என் பி எஸ்) சேருவதற்கான அதிகபட்ச வயது வரம்பு என் பி எஸ் தனியார் துறை திட்டத்தில் 60 –லிருந்து 65 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது.

Posted On: 01 NOV 2017 5:30PM by PIB Chennai

நாட்டின் ஓய்வூதியத் திட்டப் பலன்களை அதிகரிக்கும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக ஓய்வூதிய நிதி வரன்முறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பி எஃப் ஆர் டி ஏ) தற்போது என் பி எஸ் தனியார் துறை திட்டத்தில் (அதாவது அனைத்து குடிமக்கள் மற்றும் கம்பெனிகள்) சேருவதற்கான அதிகபட்ச வயது வரம்பை 60 ஆண்டுகளிலிருந்து 65 ஆண்டுகளா உயர்த்தியுள்ளது.

     இதனை அடுத்து தற்போது இந்தியாவில் வசிக்கும் அல்லது வசிக்காத 60 க்கும் 65 க்கும் இடைப்பட்ட வயதிலான குடிமக்களும் என் பி எஸ் திட்டத்தில் சேர்ந்து 70 வயது வரை தொடர்ந்து இருக்கலாம் சேர்க்கைக்கான வயது உச்சவரம்பு உயர்த்தப்பட்டதால் சந்தாதாரர்கள் தங்கள் வாழ்க்கையின் பிற்காலப் பகுதியிலும் என் பி எஸ் –ல் சேர்ந்து பயன்பெறலாம்.

     என்.பி.எஸ் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு தங்களது முதிர்ந்த வயது காலத்தில் வருமானம் உத்திரவாதம் அளிக்கும் வகையில் சேமிப்பதற்கு வலுவான மேடை அமைத்து தருகிறது. சிறப்பான சுகாதார வசதிகள், உயர்ந்து வரும் உடல் தகுதி காரணமாக தனியார் துறையில் வாய்ப்புகள் அதிகரித்து வருவதாலும், சுய வேலை வாய்ப்புத் திறன் உயர்ந்திருப்பதாலும் 50 முதல் 60 வயதுக்கு அப்பாற்பட்டவர்கள் செயல் திறன் மிக்க துடிப்பான வாழ்க்கையை மேற்கொண்டு வருவதால் இந்த வயது வரம்பு நீட்டிப்பு அவசியமாகிறது.

     60 ஆண்டுகளுக்கு மேல் வயது உள்ள என் பி எஸ் –ல் சேருபவர்கள் அந்த வயதுக்கு முன்னதாக சேருபவர்களைப் போல ஓய்வூதிய நிதி மற்றும் முதலீட்டு விருப்பத் தேர்வுகளை செய்து கொள்ளலாம்.

     இத்தகையோர் என் பி எஸ் –ல் சேர்ந்த பிறகு 3 ஆண்டுகள் முடிவு அடைந்தவுடன் இயல்பான திட்ட வெளியேற்ற வாய்ப்புகளை பெறுவார்கள் இத்தகைய நேர்வில் வாடிக்கையாளர்கள் குறைந்தது மொத்த நிதியில் 40 சதவீதத்தையாவது ஆண்டுவருமான திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் எஞ்சிய தொகையை ஒரே தவணையில் பெற்று கொள்ளலாம்.

     இத்தகையோர் 3 ஆண்டுகளுக்கு முன்னதாக என் பி எஸ் –லிருந்து விலக விரும்பினால் அவர்கள் மொத்த நிதியிலிருந்து குறைந்த பட்சம் 80 சதவீதத்தை ஆண்டு வருமான திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். எஞ்சிய தொகையை ஒரே தவணையில் பெற்று கொள்ளலாம்.

     சந்தாதாரர் என் பி எஸ் –ல் இருக்கும் போது மரணமடைந்தால் மொத்தத் தொகையும் அவரது வேட்பாளருக்கு வழங்கப்படும்.

     சேரும் வயது உயர்த்தப்பட்டிருப்பதை அடுத்து சந்தாதாரர்கள் ஓய்வுபெரும் தருணத்தில் மொத்தத் தொகையை பெற விரும்பினால் என்பிஎஸ் கணக்கு தொடங்கி அதில் ஒட்டு மொத்தத் தொகையை செலுத்தி சிறந்த வருமானம் கிடைப்பதையும் சில ஆண்டுகள் கழித்து முறையான வருவாய் கிடைப்பதையும் உறுதி செய்ய முடியும். அதிக வயது உள்ளோருக்கு கிடைக்கும் ஆண்டு தொகைகள் 60 –க்கும் அதற்கு குறைவாகவும் வயதுள்ளோர் பெரும் ஆண்டு தொகைகளை விட கூடுதலாக இருக்கும்.

*****



(Release ID: 1508138) Visitor Counter : 130


Read this release in: English