பாதுகாப்பு அமைச்சகம்
இராணுவ விளையாட்டு வீரர்களை இராணுவத் தளபதிகளின் தலைவர் கவுரவித்தார்
Posted On:
31 OCT 2017 6:39PM by PIB Chennai
வங்காளதேசம் டாக்காவில் அண்மையில் நடைபெற்ற ஹாக்கிக்கான ஆசிய கோப்பையில் இந்திய அணி 10 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றிபெற்றுள்ளது. இந்த அணியில், ஹாவ்ல்டார் ஆகாஷ் சிக்வே (இந்திய கோல் கீப்பர் எண் 1) மற்றும் சேரஜ் சூரஜ் கர்கெரா (இந்திய கோல் கீப்பர் எண் 2) ஆகிய இரண்டு வீரர்களும் அபாரமாக விளையாடி இந்தியா அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இந்த போட்டியில் அற்புதமான திறமையை வெளிபடுத்தி இந்தியா அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு அளித்த ஹாவ்ல்டார் ஆகாஷ் சிக்வேவிற்கு கோல் கீப்பருக்கான ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இதனையொட்டி, இருவீரர்களையும் இராணுவத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் கவுரவித்தார். இதில், ஹாவ்ல்டார் ஆகாஷ் சிக்வே நயீப் சுபேதாராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
****
(Release ID: 1508052)
Visitor Counter : 77