நித்தி ஆயோக்

எஸ்.சி, எஸ்.டிக்களுக்கு நிதி ஒதுக்கிவைப்பதில் புதிய ஏற்பாடு குறித்து நிதி ஆயோக் விவாதித்தது.

Posted On: 25 OCT 2017 6:00PM by PIB Chennai

சமூகத் துறையின் முதன்மை ஆலோசகர் திரு.ரத்தன்.பி. வாட்டல் அவர்கள் தலைமையில் 25-10-2017 அன்று நிதி ஆயோக்கின் கூட்டம் நடைபெற்றது. எஸ்.சி, எஸ்.டிக்களுக்கு நிதி ஒதுக்கிவைப்பதில் புதிய ஏற்பாடு குறித்து அதில் விவாதிக்கப்பட்டது.

எஸ்.சி, எஸ்.டிக்களின் நலப்பணிளுக்கு உத்தேச அடிப்படையில் முன்கூட்டியே நிதி ஒதுக்கீடு செய்யும் நடைமுறை நிறுத்தப்பட வேண்டும் என்று முதன்மை ஆலோசகர் வலியுறுத்தினார். எஸ்.சி, எஸ்.டிக்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அளவிற்கு திட்டங்கள் எதையும் வைத்திராத அமைச்சகங்கள் / துறைகள், அவர்களுக்கு நேரடியாக பயன் தரும் திட்டங்களை வடிவமைக்க வேண்டும். செலவினங்கள், பலன்கள், முடிவுகள் மேலான கண்காணிப்பு நடவடிக்கைகள் உண்மையான நிதி ஒதுக்கீடு சார்ந்தே இருக்க வேண்டும்.

       கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மதிப்புள்ள பரிந்துரைகள் பலவற்றை அளித்தனர்.   இந்த நிதி ஒதுக்கீடு குறித்த விஷயத்தில் பிரச்சினைகள் உள்ளவர்கள் தங்களுடைய பரிந்துரைகள் / கருத்துரைகளை தனியாக சமர்ப்பிக்குமாறு  வேண்டப்பட்டனர்.  எஸ்.சி, எஸ்.டிக்களுக்கு நிதி ஒதுக்கீட்டுப் பரிந்துரைகள் இறுதி செய்யப்படும்போது இவை கவனத்தில் கொள்ளப்படும்.
       எஸ்.சி, எஸ்.டிக்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் புதிய திட்டத்திற்கான தேவை இப்போது எழுவதற்கான காரணம், 2017-18 முதல்  திட்டமிடல் முறை நிறுத்தப்படுவதும்,  திட்டமிட்ட மற்றும் திட்டமிடப்படாத செலவினங்கள் ஒன்றிணைக்கப்படுவதும் ஆகும்.
       இதுவரையிலும்,  முன்னிருந்த திட்டக்குழுவால் அமைக்கப்பட்ட  பணிக்குழுவின் வழிகாட்டுதல்களின்  அடிப்படையில், தாழ்த்தப்பட்ட இனத்திருக்கான துணைத் திட்டம்(SCSP), பழங்குடியினர் துணைத் திட்டம்(TSP)  சார்ந்து எஸ்.சி, எஸ்.டிக்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. வேறுபட்ட அளவுகளில் நிதி ஒதுக்கீட்டை பணிக்குழு பரிந்துரைத்தது. அதாவது அடையாளம் காணப்பட்ட அமைச்சகங்கள் / துறைகளுக்கு மத்திய நிதி உதவி திட்டங்கள் (CSS), மத்திய அரசின் துறை சார்ந்த (CS) திட்டங்களின் அடிப்படையில் அவற்றின்  துணைத் திட்டங்களுக்கு  வேறுபட்ட விகிதங்களில் பரிந்துரைத்தது.
       எஸ்.சி. மற்றும் எஸ்.டி.க்களின் சமூக-பொருளாதார நலன் மேம்பாடு அரசியலமைப்பு சார்ந்த ஓர் உரிமை ஆகும். ஆகவே,  வரவு செலவுத் திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தால், பாதிப்புக்குள்ளான இந்த சமூகங்களின் ஒருங்கிணைந்த மேம்பாட்டிற்கு தேவையான நிதியை ஏற்பாடு செய்யும் வகையில், நிதி ஆயோக், ஒதுக்கீட்டிற்கு புதிய வழிமுறைகளை கண்டறிய வேண்டியுள்ளது.
       வழிகாட்டும் நெறிமுறைகளை மேம்படுத்தும், தரமுயர்த்தும் நோக்கத்துடன்,  நிதி ஆயோக்கின் சமவேஷ் ஃபோரம் உட்பட, இதில் தொடர்புடையை அனைவருடனும் பரவலான விவாதங்கள் நடைபெற்றன. மத்திய அமைச்சகங்கள், அதன் துறைகள், மாநில அரசுகள், எஸ்.சி, எஸ்.டிக்களுக்கான தேசியக் கமிஷன்களுடன் இணைந்து முதன்மை ஆலோசகர் திரு.ரத்தன்.பி. வாட்டல் அவர்கள் தலைமையில் இன்று  நடைபெற்ற கூட்டம், கூட்டத்தின் கலந்தாலோசனை முடிவுகளை  முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

 


(Release ID: 1508036) Visitor Counter : 133


Read this release in: English