வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் தொடர்பாக இந்தியாவுக்கும் எத்தியோப்பியாவுக்கும் இடையில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 01 NOV 2017 1:35PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவுக்கும் எத்தியோப்பியாவுக்கும் இடையில் வர்த்தகத்தை வலுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் குறித்த  ஒப்பந்தத்திற்கு முன்தேதியிட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்தியக் குடியரசுத் தலைவர்  எத்தியோப்பியாவுக்கு 2017 அக்டோபர் 4 முதல் 6 ஆம் தேதி வரையில் பயணம் மேற்கொண்டபோது, அக்டோபர் 5 ஆம் தேதி இந்த வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1982ல் கையெழுத்திடப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ள ஒப்பந்தத்திற்கு மாற்றாக இந்த வர்த்தக ஒப்பந்தம் அமையும். வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு, முதலீடு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அளிப்பதாக இந்த ஒப்பந்தம் இருக்கும்.

 

******

 


(வெளியீட்டு அடையாள எண்: 1507881) வருகையாளர் எண்ணிக்கை : 145
இந்த வெளியீட்டை படிக்க: English