உள்துறை அமைச்சகம்

ஜம்மு-காஷ்மீருக்கான மத்திய அரசின் பிரதிநிதியாக திரு. தினேஷ்வர் சர்மா நியமனம்

Posted On: 23 OCT 2017 1:11PM by PIB Chennai

 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், மிக முக்கிய நிகழ்வாக, புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் திரு. தினேஷ்வர் சர்மா ,மத்திய அரசின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். மாநிலத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், பல்வேறு அமைப்புகள் மற்றும் மக்களுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

மாநிலத்தின் அனைத்து பிரிவு மக்களுடனும்,குறிப்பாக இளைஞர்களுடனும் பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வுக்கான முயற்சிகளை திரு. தினேஷ்வர் சர்மா  மேற்கொவார். அவர்களது கோரிக்கைகள் மற்றும் விருப்பத்தை அவர் மத்திய,மாநில அரசுகளுக்கு தெரிவிப்பார்.

 

ஜம்மு-காஷ்மீர் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பிரதமர் திரு. நரேந்திர மோடி மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் பயனாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி ஶ்ரீநகருக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக ரூ.80,068 கோடி சிறப்பு நிதியை அறிவித்தது நினைவிருக்கலாம். ஜம்மு-காஷ்மீரில் அமைதியையும், வளர்ச்சியையும் ஏற்படுத்த பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து அவர்களது கருத்துகளை பிரதமர் கேட்டறிந்து வருவது குறிப்பிடத்தக்கது

 

இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு தமது சுதந்திரதின உரையில், பிரதமர் திரு. நரேந்திர மோடி, காஷ்மீர் பிரச்சினைக்கு குண்டுகள் மூலமோ, வசவுகள் மூலமாகவோ தீர்வு காண முடியாது என்றார். ஒருவொருக்கொருவர் நட்புடன் தழுவிக்கொள்வதன் மூலமே பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

 

அதன் பின்னர், மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் ,செப்டம்பர் 9 முதல் 12 வரை ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் செய்தார்.அங்கு சமுதாயத்தின் பல்வேறு பிரிவு பிரதிநிதுகளை அவர் சந்தித்தார்.

 

திரு. தினேஷ்வர் சர்மா ,கேரளாவின் 1979 பேட்ஜைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்.அதிகாரி ஆவார். தமது நீண்ட கால அனுபவத்தில் ,அவர் ஜம்மு-காஷ்மீர், கேரளா, .பி., நாகாலாந்து, மணிப்பூர் மாநிலங்களில் பணியாற்றியுள்ளார். புலனாய்வு பிரிவு தலைமையகத்தில் கூடுதல் இயக்குநர் மற்றும் சிறப்பு இயக்குநர் பதவிகளையும் அவர் வகித்துள்ளார். பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் ஆழ்ந்த அறிவு கொண்ட அவர், ஜம்மு- காஷ்மீர் பிரச்சினை பற்றி விரிவான அனுபவமும் ,கூரிய மதிநுட்பமும்  கொண்டு ஆராய்வார்.

*****

 

 


(Release ID: 1507749) Visitor Counter : 121


Read this release in: English