நிதி அமைச்சகம்

நீடித்த வளர்ச்சிக்கு வலுவான பொருளாதார அடிப்படைகள் மற்றும் சீர்திருத்தங்கள்

இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிதி அமைச்சக செயலாளர்கள் வழங்கிய படத் தொகுப்பின் முக்கிய விஷயங்கள் கீழே தரப்பட்டுள்ளன:

Posted On: 24 OCT 2017 6:44PM by PIB Chennai

I. பொருளாதார நிலைத்தன்மைக்கான இருப்பிடமாக விளங்கும் இந்தியா

வலுவான பொருளாதார வளர்ச்சி

*     2014முதல் 2017 வரையிலான மூன்றாண்டு காலத்தில் ஆண்டுக்கு 7.5 % என்ற மிக வலுவான வேகத்தில் இந்தியா வளர்ந்துள்ளது. இதில் 2015-16ஆம் ஆண்டில் இந்த வளர்ச்சி 8%-ஐயும் மீறியதாக இருந்தது. பணமதிப்பு ரத்து நடவடிக்கை, ஜிஎஸ்டி ஆகியவற்றின் இடைமாறுபாட்டின் விளைவாக கடந்த இரண்டு காலாண்டுகளில் இந்த வளர்ச்சியில் தற்காலிகமான சரிவு நிலவியது. தற்போது இந்த விளைவு முடிவுக்கு வந்துள்ளதோடு, தொழில் உற்பத்தி, அடிப்படைத் துறை, அட்டவணை, ஊர்திகள், நுகர்வோரின் செலவு முறை போன்ற அனைத்து வகையான அறிகுறிகளும் வலுவான வளர்ச்சி துவங்கியுள்ளதை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளன. நடப்பாண்டிலேயே இரண்டாவது காலாண்டின் இருந்து மிக நல்ல வளர்ச்சி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

*          தற்போதைய உலகளாவிய பொருளாதார கண்ணோட்டமானது முன்னேறிய பொருளாதார நாடுகள் மற்றும் உருவாகி வரும் சந்தை மற்றும் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள் ஆகியவற்றில் ஓரளவிற்கு வலுவான நடவடிக்கை உருவாகி வருவதை குறிப்பதாக உள்ளது. உலகளாவிய பொருளாதார நடவடிக்கைகள் படிப்படியாக மேம்பட்டு வருவதைத் தெரிவிப்பதாக உள்ளன. உலகத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 2017, 2018ஆம் ஆண்டுகளில் முறையே 3.6, 3.7 சதவீத விகிதத்தில் வளரும் என்று கூறப்படும் அதே நேரத்தில் 2016ஆம் ஆண்டில் அது தணிந்த நிலையில் 3.2 சதவீதமாகவே இருந்தது. முதலீடு, வர்த்தகம், தொழிலுற்பத்தி ஆகியவற்றோடு கூடவே வர்த்தகம் மற்றும் நுகர்வோரின் நம்பிக்கையும் வலுப்பட்டு வந்துள்ளதும் இந்த மீட்சிக்கு உதவுவதாக அமைந்தது. இது ஏற்றுமதியின் வளர்ச்சிக்கும் உதவுவதாக அமையும். 2017 செப்டெம்பரில் 25.6 % என வலுவான ஏற்றுமதி வளர்ச்சியில் இது பிரதிபலித்தது. ஏப்ரல் முதல் செப்டெம்பர் வரையிலான வளர்ச்சியானது சராசரியாக 12 % ஆகவே இருந்தது.

 

கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பணவீக்கம்

*       2013-14இல் இருந்த உயர்ந்த அளவிலான கச்சா எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட சரிவோடு கூடவே அரசினால் எடுக்கப்பட்ட உறுதியான நடவடிக்கைகள், வர்த்தகப் பொருட்களின் விலைகள் உலகளாவிய அளவில் குறைந்து வந்த நிலை ஆகியவை பணவீக்கச் சுழற்சியில் இருந்து நமது பொருளாதாரம் விடுபட்டு ஓரளவிற்கு நிலையான விலைவாசிக்குக் கொண்டு வந்து விட்டது. 2012-13 மற்றும் 2013-14 ஆம் ஆண்டுகளில் நிலவிய கிட்டத்தட்ட இரட்டை இலக்க நிலையிலிருந்து விடுபட்டு அப்போதிலிருந்து சராசரியாக 5 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைந்தது. 2016 ஜூலைக்கும் 2017 ஜூலைக்கும் இடைப்பட்ட காலத்தில் பணவீக்க விகிதம் கிட்டத்தட்ட 2 சதவீதத்தில்  இருந்தது. நுகர்வோர் குறியீட்டெண்ணின் அடிப்படையிலான பணவீக்கம் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 4 சதவீதத்திற்குள் இருந்து 2017-18 நிதியாண்டில் 3.5 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பணவீக்கம் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 4 சதவீதத்திற்குள் இருக்கிறது. எனினும் தற்போதைய நிதியாண்டின் இரண்டாவது பகுதியில் இது 4.2 முதல் 4.6 சதவீதம் ஆக உயரக் கூடுமென ரிசர்வ் வங்கி ஊகித்துள்ளது. இது இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 4 சதவீதத்தை  விட அதிகம் என்ற போதிலும் 4 சதவீதத்திற்கு முன்பின்னாகவே உள்ளது.

* சராசரியாக 4.9 சதவீதமாக இருந்த 2014-15ஐ ஒப்பிடும்போது (ஒன்றிணைந்த) நுகர்வோர் விலைவாசி அட்டவணையின் அடிப்படையிலான தலையாய பணவீக்கம் 2015-16இல் 5.9 சதவீதமாக இருந்தது. 2016-17க்கான நுகர்வோர் விலைவாசி அட்டவணை சராசரியாக 4.5 சதவீதமாக இருந்தது. இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியில் 5.4 சதவீதமான இருந்த ஆண்டு அளவிலான பணவீக்கம் என்பது 2017ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டெம்பர் வரையிலான காலத்தில் 2.6 சதவீதமாக இருந்தது.

 

http://pibphoto.nic.in/documents/rlink/2017/oct/i2017102403.jpg

 

பணவீக்கம் தொடர்ந்து மிக வசதியான சூழலில் நீடிக்கிறது

 

  1. 2014 ஜனவரி முதல் சராசரி பணவீக்கம் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.
  2. 2016 ஜூலை முதல் 2017 ஜூலை வரையிலான காலத்தில் பணவீக்கம் சுமார் 2 சதவீதமாகவே இருந்தது.
  3. 2018 நிதியாண்டில் பணவீக்கம் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 4 சதவீதத்தை விட குறைவாகவே 3.5 சதவீதமாகவே தொடர்ந்து நீடிக்கும்.

 

 

உலகளாவிய அளவில் மந்த நிலை நிலவியபோதிலும் வெளிப்புறத் துறைக்கான அறிகுறிகள் கணிசமான அளவிற்கு மேம்பட்டுள்ளன

 

* குறைந்த பணவீக்கத்தோடு கூடவே, நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் குறைந்த அளவில் நீடித்திருந்த நிலையானது கடந்த 3-4 ஆண்டுகளில் பெருமளவிற்கு பொருளாதார நிலைத்தன்மையைக் கொண்டு வந்துள்ளது.2011-12 மற்றும் 2012-13 ஆண்டுகளில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையானது அபாயகரமான அளவிற்கு 4 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது ரூபாயின் பணமாற்ற விகிதத்தில் குறிப்பிடத்தக்க நிலைத்தன்மையற்ற நிலைக்குக் கொண்டு சென்றது. குறைந்த அளவிலான நடப்புக் கணக்கு பற்றாக்குறை தெரிவிப்பது போல நடப்புக் கணக்கு கையிருப்பில் கணிசமான மேம்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் பணமாற்ற மதிப்பு விகிதமும் கணிசமான அளவிற்குக் குறைந்துள்ளது.

 

http://pibphoto.nic.in/documents/rlink/2017/oct/i2017102404.jpg

 

நடப்புக் கணக்கு பாதுகாப்பான அளவில் 2 %க்கும் குறைவாகவே உள்ளது

1. 2014 நிதியாண்டிலிருந்து நடப்புக் கணக்கு பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 % விட குறைவாகவே இருந்து வந்துள்ளது.

2. 2006 நிதியாண்டிற்குப் பிறகு முதல்முறையாக 2017 நிதியாண்டில் மிகக் குறைந்த அளவாக  ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியளவில் -0.7% ஆக உள்ளது.

* உலக வர்த்தகத்தின் (சரக்குகள் மற்றும் சேவைகள்) அளவின் வளர்ச்சி 2015ஆம் ஆண்டில் இருந்த 2.8 சதவீதத்தில் இருந்து 2016ஆம் ஆண்டில் 2.2 சதவீதமாகத் தொடர்ந்து குறைந்து கொண்டு வருகிறது. (சர்வதேச நாணய நிதியின் 2017 அக்டோபர் மாதத்திய உலகப் பொருளாதார கண்ணோட்டம் குறித்த அறிக்கை) 2017இல் 4.2 சதவீதமாகவும் 2018இல் 4.0 சதவீதமாகவும் இந்த வளர்ச்சி உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியாவின் பொருட்களுக்கான வர்த்தகம்

 

*  குறிப்பாக உலகளாவிய தேவை மந்தமானதன் விளைவாகவே 2015-16இல் ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டது. கச்சா எண்ணையின் விலை சர்வதேச அளவில் மிக வேகமாகச் சரிந்ததன் விளைவாகவும், இதர பொருட்களின் விலைகள் சரிந்ததன் விளைவாகவும் இறக்குமதியிலும் சரிவு ஏற்பட்டது. 2016-17இல் ஏற்றுமதி 5.2 சதவீதமும், இறக்குமதி 0.9 சதவீதமும் உயர்ந்த நிலையில் வர்த்தகப் பற்றாக்குறையை மட்டுப்படுத்துவதற்கு உதவி செய்தது. டாலர் மதிப்பில் ஏப்ரல்-செப்டெம்பர் 2017 காலப்பகுதியில் பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியானது முறையே 11.5 சதவீதமாகவும், 25.1 சதவீதமாகவும் வளர்ந்தது. இதன்விளைவாக 2016 ஏப்ரல்-செப்டெம்பரில் 43.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த வர்த்தகப் பற்றாக்குறை 2017 ஏப்ரல்-செப்டெம்பர் காலப்பகுதியில் 73.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வளர்ந்தது.

 

* நடப்புக் கணக்குப் பற்றாக்குறையானது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் 2014-15இல் 1.3 சதவீதமாக இருந்ததை ஒப்பிடும்போது 2015-16இல் 1.1 சதவீதமாக இருந்தது. இது 2016-17இல் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.7 சதவீதமாக அதாவது 2015-16இல் வர்த்தகப் பற்றாக்குறை 130.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பதிலிருந்து 2016-17இல் 112.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக சுருங்கியதன் விளைவாக மேலும் குறுகியது. எனினும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையின் அளவும் 2016-17ஆம் ஆண்டின் முதல் காலாண்டுப் பகுதியில் இருந்த 0.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.1 சதவீதம்) என்று இருந்ததெனில், 2017-18 முதல் காலாண்டி இது 14.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக ( ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.4 சதவீதம்) என்பதாக விரிவடைந்தது. இந்தக் காலப்பகுதியில் நிலவிய மிக அதிகமான வர்த்தகப் பற்றாக்குறையே இதற்குக் காரணமாகும்.

துடிப்பான நேரடி அந்நிய முதலீடு

2014-15 இல் 45.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள், 2015-16இல் 55.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பதை ஒப்பிடுகையில் 2016-17இல் இந்தியாவிற்கு வந்த ஒட்டுமொத்த நேரடி அந்நிய முதலீட்டின் அளவு 60.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது இந்தியப் பொருளாதாரத்தின் மீது உலகத்தின் நம்பிக்கை மேம்பட்டுள்ளது என்பதையே எடுத்துக் காட்டுகிறது. 2017ஆம் ஆண்டு ஏப்ரல் –ஆகஸ்ட் காலப்பகுதியில் இந்தியப் பொருளாதாரத்திற்குள் வந்து சேர்ந்த ஒட்டுமொத்த அந்நிய நேரடி முதலீட்டின் அளவு 30.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இது அதற்கு முந்தைய ஆண்டில் இதே காலப்பகுதியில் வந்த 23.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒப்பிடுகையில் மிக அதிகமானதாகும்.

அந்நியச் செலாவணி கையிருப்பு

2016 மார்ச் இறுதியில் இருந்த 360.2 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒப்பிடுகையில் 2017ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் அந்நியச் செலாவணி கையிருப்பு 370 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. 2017 அக்டோபர் 13 அன்றைய நிலவரப்படி, அந்நியச் செலாவணி கையிருப்பின் அளவு 400 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளில் கையிருப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து கையிருப்பு அடிப்படையிலான வெளியுறவுத் துறையின் பாதிப்புகளுக்கான அறிகுறிகள் பெருமளவிற்கு மேம்பட்டுள்ளது.

 

 

http://pibphoto.nic.in/documents/rlink/2017/oct/i2017102405.jpg

அந்நியச் செலாவணி கையிருப்பு 400 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என உச்சத்தை எட்டியுள்ளது

1. நாட்டின் விடுதலைக்குப் பின்பு மிக உயர்ந்த அளவிலான (400 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) அந்நியச் செலாவணி கையிருப்பு.

2. 2014 ஜனவரிக்குப் பின்பு 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரித்துள்ளது.

3. ஓராண்டுக்கும் அதிகமான காலத்திற்கான இறக்குமதிக்குத் தேவையான கையிருப்பு.

நிதி நிலைமையில் தொடர்ச்சியான மேம்பாடு; நிதி நிலையை உறுதிப்படுத்தும் பணி செயல்பாட்டில் உள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் நிதிநிலைப் பற்றாக்குறை தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டு வந்துள்ளது. மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை அச்சுறுத்தும் வகையில் 6 சதவீதமாக 2011-12இல் எட்டியது. 2011-12க்கும் 2013-14க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் சராசரியாக இந்தப் பற்றாக்குறை 5 சதவீதத்திற்கும் மேலாக இருந்து வந்தது. நிதிநிலையை உறுதிப்படுத்தும் பாதையை மேற்கொள்வதில் அரசு உறுதியுடம் இருந்தது. 2016-17இல் நிதிப் பற்றாக்குறையை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதமாகவும், பட்ஜெட் மதிப்பீடுகளின்படி 2017-18இல் இதை 3.2 சதவீதமாக மேலும் குறைக்கவும் மிகுந்த உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.

 

http://pibphoto.nic.in/documents/rlink/2017/oct/i2017102406.jpg

3% சதவீத அளவிற்கு நிதி நிலையை உறுதிப்படுத்தும் செயல்முறை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

1. கடந்த நான்கு ஆண்டுகளில் நிதி நிலையை உறுதிப்படுத்தும் செயல்முறை தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு  வருகிறது.

2. நிதிப் பற்றாக்குறை தொடர்ந்து கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

3. இருந்தபோதிலும் வரிவருவாயை மாநிலங்களுக்குப் பிரித்தளிப்பதில் 32% லிருந்து 42% சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையின் விகிதம் 2015-16இல் 3.9 சதவீதமாகவும், 2016-17இல் (திருத்திய மதிப்பீட்டின்படி) 3.5 சதவீதமாகவும் இருந்தது. இது 2017-18இல் 3.2 சதவீதம் என பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டுள்ளது. செலவுகளை ஒழுங்குபடுத்துவதில் கவனம் செலுத்துவது, பொதுச் செலவுகளில் உள்ள ஓட்டைகளை அடைப்பது, வருவாயை அதிகரிக்க புதுமையான முயற்சிகளை மேற்கொள்வது ஆகியவற்றின் மூலம் இதைச் செய்யமுடிந்துள்ளது.

உள்நாட்டு, வெளிநாட்டு பொதுக் கடன் கையிருப்பு என்ற கோணத்தில் இருந்து பார்க்கும்போது, நிதி வசதி தொடர்பான விஷயங்களில் இந்தியா மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ளவில்லை. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி – இந்திய அரசின் ஒட்டுமொத்த கடன்களுக்கான பொறுப்புகள் ஆகியவற்றின் விகிதம் 2016-17(திருத்திய மதிப்பீடுகள்) இறுதியில் 46.7 சதவீதத்தில் இருந்து 2017-18 இறுதியில் 44.7 சதவீதமாக குறையும் என திட்டமிடப்பட்டுள்ளது.

2016-17இல் (தற்காலிகமான உண்மையான) வரி வருவாய் (மத்திய அரசுக்கு வரும் நிகர வருவாய்) 16.8 சதவீதமாக அதிகரித்தது. இது 2017-18இல் 11.3 சதவீதமாக வளர்ச்சி அடையும் என திட்டமிடப்பட்டுள்ளது.

ஏப்ரல்- ஆகஸ்ட் காலப்பகுதியில் நிதிப் பற்றாக்குறையானது முழு ஆண்டுக்கு திட்டமிடப்பட்டிருந்த பற்றாக்குறையில் 96 சதவீதத்தை செலவுகளை முன்கூட்டியே செலவு செய்ததன் விளைவாக எட்டிய போதிலும் நிதிப்பற்றாக்குறையானது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.2 சதவீதம் என்ற திட்டமிடலை மீறாமல் இருக்கும் என்று நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளோம்.

II. மாறுதலை உருவாக்கும் சீர்திருத்தங்கள்

ஜி.எஸ்.டி. வடிவத்தில் தனிச்சிறப்பு மிக்க சீர்திருத்தம்

மத்திய-மாநில அரசுகளின் பெரும் எண்ணிக்கையிலான மறைமுக வரிகளை உள்ளடக்கிய வகையில் 2017 ஜூலை முதல் தேதியில் இருந்து தனிச்சிறப்புமிக்க சீர்திருத்தம் என்ற வகையில் ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டது. ஜிஎஸ்டியை துவக்கியதென்பது வரலாற்றுச் சிறப்பு மிக்க பொருளாதார, அரசியல் சாதனையை எடுத்துக் கூறுவதாக, இந்தியாவின் வரி மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களில் இதுவரை காணாத ஒன்றாக, கட்டமைப்பு சீர்திருத்தங்கள் குறித்த நம்பிக்கைக்கு உயிரூட்டுவதாக அமைகிறது. நாடுமுழுவதும் ஒன்றுபட்ட வரியை விதிக்க இது வழிவகுத்துள்ளதோடு, சரக்குப் போக்குவரத்தில் இருந்து வந்த கட்டுப்பாடுகளை அகற்ற உதவியுள்ளது. இதன் விளைவாக அவை மிக வேகமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லப்படவும், பொதுவான சந்தையை உருவாக உதவவும், ஊழலையும் சேதாரத்தையும் குறைக்கவும் உதவியுள்ளதோடு, இந்தியாவில் உற்பத்தி செய் என்ற திட்ட்த்திற்கு உதவி புரிந்துள்ளது. வருவாய், முதலீடு, இடைக்கால பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்தவும் இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்ப காலத் தடங்கல்கள் இருந்த போதிலும் அரசும் ஜிஎஸ்டி கவுன்சிலும் இவற்றில் கவனம் செலுத்தி வருகின்றன. துவக்க நிலையில் வருவாய் அதிகரித்துள்ள நிலை உற்சாகமூட்டக் கூடியதாக உள்ளது.

 

http://pibphoto.nic.in/documents/rlink/2017/oct/i2017102407.jpg

ஜி எஸ் டி: ஒரு நாடு ஒரே வரி

ஊழலையும் சேதாரத்தையும் குறைப்பது – உற்பத்தி, விற்பனை ஆகியவற்றை வரைமுறைப்படுத்துவது – கூட்டுறவு கூடிய நிதி சார் கூட்டாட்சி முறை

  • அனைத்து சோதனைச் சாவடிகளும் மூடப்பட்டுவிட்டன. நுகர்வின் அடிப்படையிலான வரிவிதிப்பு.
  • வரிசையாகத் தொடரும் வரிவிதிப்பு முறை அகற்றப்பட்டுவிட்டது. இந்தியாவில் உற்பத்தி செய் திட்டத்திற்கு ஊக்கம்.
  • சிறு வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோரின்மீது விதிகளைக் கடைப்பிடிப்பதில் உள்ள சுமையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திவால் மற்றும் நொடித்துப் போகும் நிலை குறித்த விதிமுறைகள்

மாற்றத்தை ஏற்படுத்தும் மற்றொரு சீர்திருத்தமாக விளங்கியது 2016ஆம் ஆண்டின் திவால் மற்றும் நொடிப்பு குறித்த விதிமுறைகள் (விதிகள்) சட்டம் ஆகும். இது 2016 மே 28 அன்று நிறைவேற்றப்பட்டது. நிறுவனங்கள், குறைவான பொறுப்புகளைக் கொண்ட அமைப்புகள் (குறைந்த பொறுப்புகளைக் கொண்ட பங்குதாரர் நிறுவனங்கள் மற்றும் குறைந்த பொறுப்புகளைக் கொண்ட இதர அமைப்புகள் உள்ளிட்ட) நிறுவனங்கள், வரம்பற்ற பொறுப்புடைய பங்குதாரர் நிறுவனங்கள், தனிநபர்கள் ஆகியோரின்  திவால் நிலை குறித்த பல சட்டங்களாக சிதறிக் கிடப்பவற்றை ஒன்று திரட்டி அவற்றை ஒரே சட்டமாக உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் இச்சட்டம் இயற்றப்பட்டது. இந்த விதிமுறையானது முழுமையான, நவீனமான, துடிப்பான திவால் மற்றும் நொடிப்பு நிலைமைகளை உலகத் தரத்திற்கு இணையான வகையில், சில அம்சங்களில் அதை விடச் சிறந்த வகையில் கையாளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

http://pibphoto.nic.in/documents/rlink/2017/oct/i2017102401.png

திவால் மற்றும் நொடிப்பு நிலை

* சிறப்பான, சர்வதேச அளவில் சிறந்த செயல்பாட்டின் அடிப்படையிலான திவால் குறித்த ஏற்பாடு இந்தியாவில் நிறுவன மயமாக்கப்பட்டுள்ளது.

*              வலுவான, காலவரம்புடைய செயல்முறை உடனடியான தீர்வினை உறுதிப்படுத்துகிறது.

*       தேசிய நிறுவன சட்டம் குறித்த தீர்வாயத்தின் முன்பு கடந்த ஜூன் மாதம் வரையில் 2050 மனுக்கள் பதிவாகியுள்ளன.

*       2017 செப்டெம்பர் 30 தேதிய நிலவரப்படி, திவால் நிலைக்கு தீர்வு காண்பதற்கான செயல்முறைக்கான 347 பெருநிறுவன மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

*       தானாகவே முன்வந்து கலைப்பதற்காக 22 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

*       நொடிப்பு தொடர்பான 1054 பேர் பதிவு செய்துள்ளனர்.

*       இது குறித்து தீர்வு காணும் செயல்முறைகளும் துவங்கியுள்ளன.

*       குறிப்பிட்ட கால வரம்பிற்குள் தீர்வு காணும் செயல்முறை வெற்றிபெறவில்லை எனில், கலைப்பிற்கான செயல்முறை உடனடியாகத் துவங்கும் ஏற்பாடு.

*       இதை முழுமைப்படுத்துவதற்கென 2017ஆம் ஆண்டிற்கான நிதிசார் தீர்வு மற்றும் முன்வைப்புக் காப்பீட்டு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.    

இந்த விதிமுறையை அமலாக்க அரசு மிக வேகமாகச் செயல்பட்டது. தேசிய நிறுவனங்கள் சட்டத் தீர்பாயத்திற்கு முன்பாக சுமார் 2050 மனுக்கள் பதிவு செய்யப்பட்டு, அவற்றில் 112 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 146 மனுக்கள் நிராகரிக்கப்பட்டோ அல்லது திரும்பப் பெறப்பட்டோ உள்ளன. இவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்ட மனுக்களில் அடங்கும் தொகை ஒரு சில லட்ச ரூபாய்களிலிருந்து ஒரு சில ஆயிரம் கோடி ரூபாய்களாக உள்ளது. பணத்தைச் செலுத்தத்  தவறிய 12 பெரும் புள்ளிகள் பற்றி ரிசர்வ் வங்கி அறிவிக்கும்போது இது மேலும் கூர்மையாக விரிவாகும்.

கருப்புப் பணத்திற்கு எதிரான பணமதிப்பு ரத்து உள்ளிட்ட தர்ம யுத்தம்

(அ) கருப்புப் பணத்தைத் தடுப்பதற்கான கட்டமைப்பை பரிசீலிக்கவும், இது குறித்த புலன்விசாரணைகளை கண்காணிக்கவும் 2014 மே மாதம் கருப்புப் பணம் மீதான சிறப்புப் புலனாய்வுக் குழு உருவாக்கப்பட்டது. (ஆ) கருப்புப் பணம் (வெளிப்படுத்தப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்கள்) மற்றும் வரிவிதிப்பு சட்டம் 2015 ஜூலை முதல் தேதி 2015 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சட்டம் இயற்றப்பட்டது (இ) 2016ஆம் ஆண்டின் வருமானம் குறித்த விவரங்களை வெளியிடும் திட்டம் (ஈ) 2016 நவம்பர் முதல் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் 2016ஆம் ஆண்டின் முழுமையான பினாமி பரிமாற்றங்கள்(தடுப்பு) திருத்தச் சட்டம் போன்ற முன்முயற்சிகள் கருப்புப் பணம் உருவாவது, அதை ஒளித்து வைப்பது போன்றவற்றுக்கு எதிரான போராட்டத்தில் பல்வேறு அளவிலான வெற்றிகளைத் தந்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக 2016 நவம்பர் 8ஆம் தேதியன்று செயல்படுத்தப்பட்ட உயர்மதிப்பு நோட்டுகளின் மதிப்பு ரத்து நடவடிக்கை கருப்புப் பணத்தின் மீது கடுமையான தாக்குதலைத் தொடுப்பதாக அமைந்தது.

வீட்டுவசதி மேம்பாடு

பொருளாதாரத்தின் வளர்ச்சியை வளர்த்தெடுக்கும் வகையில் 2017-18க்கான பட்ஜெட் உரையில் அரசு பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பு செய்திருந்தது. எளிதாகப் பெறமுடியும் வகையிலான வீட்டுவசதியை வழங்குவதற்கென அத்துறைக்கு கட்டமைப்பு அந்தஸ்தை வழங்குவதன் மூலம் கட்டமைப்பு மேம்பாட்டை உந்தித் தள்ளுவது, நெடுஞ்சாலை உருவாக்கத்திற்கென அதிகமான அளவில் நிதி ஒதுக்கீடு, கடற்கரையோர தொடர்புகளின் மீது கவனம் செலுத்துதல் போன்றவை அத்தகைய அறிவிப்புகளில் அடங்கியிருந்தன. ஆண்டுக்கு ரூ. 50 கோடி வரையில் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு குறைந்த வருமான வரி விகிதம்; குறைந்தபட்ச மாற்று வரி செலுத்துவதற்கான கால அளவை தற்போதுள்ள 10 ஆண்டு என்பதிலிருந்து 15 ஆண்டுகளுக்கு நீடிக்க அனுமதிப்பது; வர்த்தகம் செய்வதை எளிதாக்குவதற்கான மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்வது; டிஜிட்டல் முறையிலான பொருளாதாரத்திற்கு ஊக்கமளிப்பது போன்ற வகையிலும் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்க எடுக்கப்பட்ட இதர நடவடிக்கைகள் ஆகும். அதிகமான விவசாயக் கடன்களை வழங்குவது, வேலைவாய்ப்பை கணிசமாக அதிகரிப்பது போன்றவற்றிலும் இந்த பட்ஜெட் கவனம் செலுத்தியிருந்தது.

நிறுவனரீதியான சீர்திருத்தங்கள்

செலவினங்களை ஒழுங்குபடுத்துவது; பொது வசதிகளை பெறுவோர் குறித்த இலக்கு நிர்ணயிப்பது மற்றும் இதற்கான தொகைகளை நேரடியாகப் பயனாளர்களுக்குச் சென்று சேர ஏற்பாடு செய்வது போன்றவற்றின் மூலம் இந்தப் பொது சேவைகளை வழங்குவதில் ஏற்படும் சேதங்களை படிப்படியாக அகற்றுவது; நிதிசார் சேவைகளை பெறும் வகையில் அவர்களை இணைத்துக் கொள்ளும் வகையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய திட்டத்தை உருவாக்குவது; அரசு நிர்வாகத்திலும் முடிவு எடுப்பதிலும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது; மின்வசதி செய்து தரும் நிறுவனங்களுக்கு உறுதியளிக்கும் வகையில் உதய் திட்டம்; பல்வேறு துறைகளிலும் நேரடி அந்நிய முதலீடு குறித்த விதிமுறைகளைத் தளர்த்துவது; இந்தியாவில் அறிவுசார் சொத்துரிமைக்கான எதிர்கால திட்டத்தை  வரையறுக்க தேசிய அறிவுசார் சொத்துரிமைகளுக்கான கொள்கைக்கு அனுமதி அளிப்பது போன்றவை உள்ளிட்ட நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எளிதாக வர்த்தகம் நடத்துவது மேம்பட்டுள்ளது

இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்ற திட்டத்தை முதன்மையாகக் கொண்டு வர்த்தகத்தை எளிதாக நடத்துவதற்கான முழுமையான நடவடிக்கைகள் உள்பட இந்தியாவில் தொழில் துவங்கு, நிமிர்ந்து நில் இந்தியா போன்ற முன்முயற்சிகளின் கீழ் புதிய தொழில் முனைவு திறமைகளை ஊக்குவிப்பது, விளம்பரம், உலகளாவிய பிரச்சாரம் போன்று எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வர்த்தகம் செய்வதற்கு உகந்த நாடு என்ற உலகளாவிய தரவரிசையிலும் இந்தியாவில் நிலையை மேம்படுத்தியுள்ளது என்பதும் தெளிவாகவே தெரிகிறது. ஒரே இணைய தளத்தின் மூலம் அனைத்து வர்த்தகம் மற்றும்  முதலீடு தொடர்பான அனுமதிகள், வரையறைகள் ஆகியவற்றை செய்து கொள்ளும் வகையில் வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோருக்கு உதவும் வகையிலான இணையம் மூலமான வர்த்தக மேடையை, வாரத்தின் ஏழு நாட்களும், நாளின் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் ஒருங்கிணைந்த வகையில் பணம் செலுத்தும் வசதியுடன் இந்தியா துவக்கியுள்ளது.

நேரடி அந்நிய முதலீட்டுக் கொள்கையில் தீவிரமான மாற்றங்கள்; மேலும் அதிகமான துறைகளில் நேரடி அந்நிய முதலீடு நேரடியாக வந்திறங்குவதற்கான அனுமதி

வேலைவாய்ப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றுக்கு பெரும் ஊக்கமளிக்கும் நோக்கத்துடன் 2016 ஜூன் 20 அன்று அரசு நேரடி அந்நிய முதலீட்டு கொள்கையில் தீவிரமான மாற்றங்களை அறிவித்தது. 2015 நவம்பரில் அறிவிக்கப்பட்ட முக்கிய மாற்றங்களுக்குப் பிறகு அரசு மேற்கொண்ட இரண்டாவது பெரிய சீர்திருத்தமாக இது அமைந்தது. எதிர்மறைப் பட்டியலில் உள்ள ஒரு சில துறைகளைத் தவிர கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளிலும் நேரடி அந்நிய முதலீட்டுக்கான அனுமதி உடனடியாகப் பெறும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. துறை வாரியான அதிகபட்ச உச்சவரம்பை அதிகரிப்பது, மேலும் அதிகமான நடவடிக்கைகளை நேரடியான முதலீட்டு முறைக்குக் கொண்டுவருவது, வெளிநாட்டு முதலீட்டிற்கான நிபந்தனைகளைத் தளர்த்துவது போன்றவை உள்ளிட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களுடன் நேரடி அந்நிய முதலீட்டிற்கான உலகின் மிகவும் சுதந்திரமான நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது.

பேரவாவுடன் அரசின் பங்குகளை விற்பதற்கான திட்டம்

கடந்த மூன்றாண்டுகளில் பொதுத்துறையில் அரசின் பங்குகளை விற்பதன் மூலம் அதிகமான வருவாய் படிப்படியாகப் பெறப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் மேலும் அதிகமான வருவாயை ஈட்டுவதற்கான பேரவாவுடன் கூடிய இலக்கை அரசு நிர்ணயித்துள்ளது.

 

http://pibphoto.nic.in/documents/rlink/2017/oct/i2017102408.jpg

இதுவரை கண்டிராத வகையில் அதிகமான அளவில் அரசுப் பங்குகளை விற்பதற்கான திட்டம் அதிகமான

அரசுப் பங்குகளின் மூலமான வருவாய். கோடி ரூபாய்களில்

மக்கள் நலத் திட்டங்களை வடகிழக்குப் பகுதியில் உள்ள பரம ஏழைக் குடும்பங்களுக்குக் கொண்டு சேர்ப்பது

ஏழைகளிலும் பரம ஏழைகளுக்கு உதவி செய்யவும், அவர்களின், குறிப்பாக பெண்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தவும், 2016 மே மாதம் முதல் 2017 ஜூன் மாதம் வரை 3 கோடி சமையல் எரிவாயு இணைப்புகளை அரசு வழங்கியுள்ளது. இவை உடலுக்கு ஊறு விளைவிக்கும் பாரம்பரியமான, அசுத்தமான எரிபொருளுக்குப் பதிலாக பயன்படுத்தப்படும். அதைப் போன்றே மனிதர்களாலும் இயற்கையாலும் ஏற்படும் பேரழிவுகளின் அதிர்ச்சிகளிலிருந்து ஏழை மக்களைப் பாதுகாக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரதமர் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதமர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் போன்றவற்றில் 2017 செப்டெம்பர் வரை 14 கோடி பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

http://pibphoto.nic.in/documents/rlink/2017/oct/i2017102409.jpg

ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை தரவும், நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள பரம ஏழைகளுக்கு சேவை செய்யவும்

இந்தியப் பெண்களின் கண்களிலிருந்து கண்ணீரைத் துடைக்கும் வகையில் பரம ஏழைகளின் வீடுகளுக்கு 3 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள்

III.  கட்டமைப்பிற்கான உத்வேகம்

வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், பொருளாதார வளர்ச்சிக்கு அதிகமான உந்துதல் தரவும் கட்டமைப்புத் துறையில் அரசின் செலவுகளை அரசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருந்த ரூ. 21.46 லட்சம் கோடியில் (இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட ரூ. 1.2 லட்சம் கோடி அதிகமாகும்) இதுவரையிலான செலவு (2017 செப்டெம்பர் வரை) ரூ. 11.47 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

இந்த முயற்சிகளில் கிராமப்புறச் சாலைகள், வீட்டுவசதி, ரயில்வே, மின்சாரம், நெடுஞ்சாலைகள், டிஜிட்டல் கட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய வளர்ச்சித் துறைகளில் சிறப்பான முக்கியத்துவம் வழங்கப்பட்டது. 2017-18இல் இதற்கான மூலதன முதலீட்டு இலக்காக இந்திய அரசு ரூ. 3.09 லட்சம் கோடி என நிர்ணயித்திருந்தது. இது கடந்த ஆண்டினை விட 31.28 சதவீதம் அதிகமாகும். இதில் 2017 செப்டெம்பர் வரை மூலதன வேலைகளுக்காக ரூ. 1.46 லட்சம் கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. இதனோடு கூடவே, பொதுத்துறை நிறுவனங்கள் 2017-18இல் மூலதன முதலீட்டு செலவுக்கென ரூ. 3.85 லட்சம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பொதுத்துறை நிறுவனங்கள் 2017 செப்டெம்பர் வரை  இதில் 1.37 லட்சம் கோடியை செலவழித்துள்ளன.

ரயில்வே

*          ரயில்வே துறைக்கான மூலதனச் செலவாக ரூ. 1,31,000 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த இலக்கில் ரூ. 50,762 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு, புதிய ரயில்வே பாதைகள், பயணிகளுக்கான வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்துவது என்பதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது.

*          மூலதனத்துடன் கீழ்க்கண்ட வேலைகள் நிறைவேற்றப்பட்டன: புதிய பாதைகள் (கட்டுமானம்) (ரூ. 4531.93 கோடி), ரயில்பாதை மாற்று வேலைகள் (ரூ. 1842.24 கோடி) பட்ஜெட்டுக்கு வெளியேயான ஏற்பாட்டின் கீழ் பங்குரிமை (ரூ. 11504.29 கோடி) இரட்டைப் பாதை (ரூ. 4069.60 கோடி), போக்குவரத்து வசதிகள் (ரூ. 517.05 கோடி) தட்த்திற்கான வண்டிகள் (ரூ. 8214.11கோடி) குத்தகைக்கு எடுக்கப்பட்ட சொத்துக்களுக்கான முதலீட்டுத் தொகை (ரூ. 7781.97 கோடி) சாலையின் மேலும் கீழுமான பாலங்களுக்கென (ரூ. 1068.09கோடி) ரயில்பாதை புதுப்பித்தல் (ரூ. 2837.72 கோடி) மின்மயமாக்கும் திட்டங்கள் ( ரூ. 1119.17 கோடி) பயணிகளுக்கான வசதிகள் (ரூ. 539.73 கோடி) கூட்டுத் திட்டங்கள்/சிறப்புத் திட்டங்கள் ஆகியவற்றில் முதலீடுகள் (ரூ. 1263.52கோடி) பெருநகர போக்குவரத்துத் திட்டங்கள் (ரூ. 446.16 கோடி) போன்றவை.

சௌபாக்யா திட்டம்(பிரதமர் வீடுகளுக்கான மின்வசதித் திட்டம்)

*          இத்திட்டத்தின்கீழ் 2019 மார்ச் மாதத்திற்குள் நாட்டிலுள்ள இதுவரை மின்வசதி பெறாத அனைத்து குடும்பங்களுக்கும் மின்வசதி அளிக்கும் வகையில் கடைசி எல்லை வரையிலான மின்கடத்தி ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது (தீன் தயாள் உபாத்யாயா கிராம மின்வசதி திட்டம்) நடப்பிலுள்ள கிராமப்புற மின்வசதித் திட்டத்தோடு கூடுதலாக இத்திட்டம் செயல்படும்.

 

*  இதற்காக ரூ. 16320 கோடி ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதில் இந்திய அரசின் உதவி ரூ. 12319.50 கோடியாக இருக்கும்.

 

கிராமப்புறச் சாலைகள் – பிரதமர் கிராமப்புறச் சாலைகள் திட்டம்

*          பிரதமர் கிராமப்புறச் சாலைகள் திட்டத்தின் முதல், இரண்டாம் கட்டங்களை நிறைவேற்ற மற்ற மாநிலங்களோடு இணைந்து மத்திய அரசு 2017-18ஆம் ஆண்டிலிருந்து துவங்கி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ரூ. 88,185 கோடி செலவழிப்பது என திட்டமிட்டுள்ளது. 36,434 குடியிருப்புகளை உள்ளடக்கிய வகையில் 1,09,302 கிலோமீட்டர் நீளத்திற்கு கிராமப்புறச் சாலைகளை உருவாக்க இது வழிவகுக்கும்.

 

*    இதனோடு கூடவே, ரூ. 11,725 கோடி மதிப்பில் தற்போதுள்ள சாலைகளில் 5411 கிலோமீட்டர் நீள சாலைகளை மேம்படுத்துவது, இடதுசாரி தீவிரவாதக் குழுக்களால் பாதிக்கப்பட்டுள்ள 44 மாவட்டங்களில் புதிய சாலைகளை உருவாக்குவது ஆகியவை 2019-20 நிதியாண்டிற்குள் நிறைவேற்றப்படும்.

பிரதமர் வீட்டுவசதித் திட்டம் – நகர்ப்புற- கிராமப்புறங்களில்

 

கட்டுமானத்துறைக்கு பெரும் உத்வேகமளிக்கும் வகையில் அனைவரும் வாங்கும் வகையில் வீட்டுவசதி திட்டம் அமல்படுத்தப்பட்டு, தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் அடுத்த மூன்று ஆண்டுகளில் நகர்ப்புறத்தில் 1.2 கோடி வீடுகள் ரூ. 1,85,069 கோடி செலவில் கட்டி முடிக்கப்படும்.அதே போன்று கிராமப்புறங்களில் 1.02 கோடி வீடுகள் (இதில் 51லட்சம் வீடுகள் இந்த ஆண்டில்) மத்திய-மாநில அரசுகளின் முதலீட்டில் ரூ. 1,26,795 கோடி மதிப்பீட்டில் 2019 மார்ச் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும்.

 

பாரத் மாலா சாலைத் திட்டம்

*          மேலும் சிறந்த போக்குவரத்து வசதியை வழங்குவது என்ற அரசின் உறுதிப்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் வகையில் அரசு சாலைகள் துறையில் நிலவிவந்த தடைகளை நீக்கி, நெடுஞ்சாலை மேம்பாடு, சாலை உருவாக்கம் ஆகிய திட்டங்களை குறிப்பிடத்தக்க அளவிற்கு தீவிரப்படுத்தியுள்ளது. நாடுமுழுவதிலும் மக்களும் சரக்குகளும் சிறப்பாக நகர்வதை மேலும் செழுமையாக்கும் வகையில் அரசு புதிய பரந்ததொரு திட்டத்தைத் துவக்கியுள்ளது. இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 6.92 லட்சம் கோடி முதலீட்டில் ஆன 83,677 கிலோமீட்டர் நீள சாலைகளை உருவாக்கும் திட்டம் ஆகும்.

*     இதில் பாரத் மாலா திட்டம் ரூ. 5,35,000 கோடி முதலீட்டில் நிறைவேற்றப்படுவதன் மூலம் 14.2 கோடி மனித நாட்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் நிறைவேற்றப்படும்.

*     பாரத் மாலா திட்டத்தின் கீழ் கீழ்க்கண்ட வகையிலான சாலைகளை (34,800 கிலோமீட்டர் நீளத்திற்கு) உருவாக்குவதென திட்டமிடப்பட்டுள்ளது:

*     பொருளாதார நடவடிக்கைகளுக்கான பாதைகள் (9000 கிலோமீட்டர்கள்)

*     இடைப்பட்ட பாதைகள், ஊடு பாதைகள் (6000 கிலோமீட்டர்கள்)

*     தேசிய பாதைகள் திறமையை மேம்படுத்துவது (5000 கிலோமீட்டர்கள்)

*     எல்லைப்புற பாதைகள் – சர்வதேச தொடர்புக்கான பாதைகள் (2000 கிலோமீட்டர்கள்)

*     கடற்கரையோரப் பாதைகள் – துறைமுகப் பகுதிக்கான தொடர்புப் பாதைகள் ( 2000 கிலோமீட்டர்கள்)

*     பசுமைவழி விரைவுப் பாதைகள் (800 கிலோமீட்டர்கள்)

*     மீதமுள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்ட வேலைகள் ( 10,000 கிலோமீட்டர்கள்)

*     2021-22ஆம் ஆண்டிற்குள், அதாவது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தேசிய நெடுஞ்சாலை மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், மாநில பொதுப்பணித்துறைகள் ஆகியவற்றின் மூலம் பாரத் மாலா திட்ட வேலைகள் நிறைவேற்றப்படும்.

*     இத்திட்டத்தை விரைந்து முடிப்பதற்கென இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தேசிய நெடுஞ்சாலை மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஆகியவற்றுக்கு கணிசமான அளவிற்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

*     பாரத் மாலா திட்டத்திற்கான நிதி ஏற்பாடுகள்: இதற்கென சந்தையிலிருந்து கடனாக ரூ. 2.09 லட்சம் கோடியும், பொது-தனியார் கூட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் முதலீடாக ரூ. 1.06 லட்சம் கோடியும் மீதமுள்ள ரூ. 2.19 லட்சம் கோடி மத்திய சாலைகளுக்கான நிதி, சுங்க வழி சாலைகளிலிருந்து திரட்டப்படும் நிதி, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சுங்க வரி ஆகியவற்றின் மூலமாகத் திரட்டப்படும்.

*     பாரத் மாலா திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் 34,800 கிலோமீட்டர் நீள சாலைகள் மட்டுமின்றி மீதமுள்ள 48,877 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் ரூ.1.57 லட்சம் கோடி செலவில் அதனோடு இணைந்த வகையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம்/சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் நிறைவேற்றப்படும். இதற்கென மத்திய சாலை நிதியிலிருந்து ரூ. 0.97 லட்சம் கோடியும் ஒட்டுமொத்த பட்ஜெட் உதவியாக ரூ. 0.59 லட்சம் கோடியும் நிதியுதவி செய்யப்படும்.

*     சுங்கவரி நடத்துவது ஒப்பளிப்புத் திட்டத்தில் நிதிதிரட்டல்: சுங்கவரி நிர்வாகத்தை நடத்துதல் – பராமரித்தல்- ஒப்பளித்தல் என்ற முறையின் கீழ் ரூ. 34,000 கோடி தனியார் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ள குறைந்த அபாயமுள்ள சுங்கவரிக்கான 82 செயல்படும் நெடுஞ்சாலைகளில் நிதிதிரட்டுவதற்கென முதல் முறையாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் முதல் பகுதியாக 680.64 கிலோமீட்டர் நீளமுள்ள 9 நெடுஞ்சாலை பகுதிகளுக்கான ஏல ஒப்பந்தம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் வெளியிடப்பட்டது. இதன் மூல ரூ. 6258 கோடி திரட்டமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதாரத்தின் தேசிய அளவிலான அடிப்படைகள் வலுவாக உள்ள சூழலில், இதற்கு முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும்போது அதிகமான அளவிற்கு அரசின் செலவுகள் தொடர்ந்து செய்யப்பட்டு வரும் நிலையில், நாட்டில் முதலீட்டுக்கான சூழலை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. முழுமையான பொருளாதார சீர்திருத்தங்களை அரசு மேற்கொண்டதன் விளைவாக கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை கண்டிராத அளவில் நேரடி அந்நிய முதலீட்டைப் பெற முடிந்துள்ளது. எனினும் உள்நாட்டில் தனியார் துறையின் முதலீடுகள் கடந்த ஆண்டுகளில் இப்பிரிவுக்கு  வழங்கப்பட்ட கடன்கள் அதிக அளவில் தூய்மையற்றதாக மாறியதன் விளைவாக தொடர்ந்து பாதிக்கப்பட்டு, இப்போது தொடர்ந்து நீடிக்க முடியாத நிலையை எட்டியுள்ளது. இது பொதுவான முதலீட்டுச் சூழலை பாதிக்கிறது என்பதோடு, இந்தச் செயல்படாக் கடன்கள் இதுவரை கண்டிராத அளவுக்கு பண ஏற்பாடுகளை, குறிப்பாக பொதுத்துறை வங்கிகளுக்கு, செய்ய வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அவற்றின் கடன் வழங்கும் திறனை, குறிப்பாக  நடுத்தர, சிறுதொழில் துறைகளுக்கு, பாதித்துள்ளது. பெரு நிறுவனங்கள் பலவும் சமீப காலத்தில் பங்கு பத்திர சந்தையை அணுக முடிந்துள்ளதைக் காணும்போது, அதிகமான ஏற்பாடுகள் தேவைப்படுகின்ற கூடுதல் சுமையினால் பாதிக்கப்பட்டுள்ள வங்கிகள் கடன் தரும் நிலையில் இல்லாததால் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களே இத்தகைய கடன்வசதி இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டன. இத்தகைய சூழல் தனியார் துறைக்கு, குறிப்பாக நடுத்தர, சிறுதொழில்களுக்கு பொதுத்துறை வங்கிகள் கடன் வழங்கும் வகையில் பொருத்தமான சூழலை உருவாக்க சிறப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியது.

IV.  பொதுத்துறை வங்கிகளின் மறுமுதலீட்டு ஏற்பாடுகள்

*     இதுவரை கண்டிராத வகையில் பொதுத்துறை வங்கிகளை வலுப்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது.

*     செயல்படா சொத்துக்கள் என்ற பாரம்பரியத்தை சுத்தப்படுத்துவதற்கென ரூ. 2,11,000 கோடி வங்கி மறுமுதலீட்டிற்கென நேரடியாக வழங்கப்படும்.

*     மறுமுதலீடு செய்யப்பட்ட வங்கிகளின் மூலமாக கடன் வசதி வளர்ச்சி மீண்டும் செயல்படுத்தப்படும்.

*     வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை உருவாக்க நடுத்தர, சிறுதொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் ஊக்கமளிக்கும்.

 

பொதுத்துறை வங்கிகளில் நேரடியாக முதலீடு செய்ய அரசு பிரம்மாண்டமான முயற்சியை எடுக்கத் தீர்மானித்துள்ளது. கடன் வசதி வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்குப் பெருமளவில் மூலதனத்தைத் திரட்ட வேண்டியுள்ளது. நடப்பு ஆண்டில் அதிகபட்சமான ஒதுக்கீடு செய்யப்படும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ. 2,11,000 கோடிக்கான ஏற்பாடுகள் செய்யப்படும். பட்ஜெட் ஒதுக்கீடு மூலமாக ரூ. 18,139 கோடியும், பங்கு பத்திரங்கள் மூலமாக ரூ. 1,35,000 கோடியும் மீதமுள்ள தொகை அரசின் பங்கை சந்தையில் விற்பதன் மூலமாக (மதிப்பிடப்பட்ட அளவு ரூ. 58,000 கோடி) வங்கிகள் நேரடியாகத் திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகளுக்கு மறுமுதலீட்டு ஏற்பாடு செய்வதோடு அரசின் நடவடிக்கைகள் முடிந்து விடவில்லை. மறுமுதலீட்டோடு கூடவே நிதிசார் அமைப்பில் அவை முக்கியமானதொரு பங்கை வகிக்க முடியும் வகையில் அவற்றை வலுப்படுத்தவும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். வங்கித் துறையில் சந்தையில் 70 சதவீத பங்கைக் கொண்டுள்ள பொதுத்துறை வங்கிகள் மேலும் அதிக வளர்ச்சியை எட்டவும், அதிகமான கடன் வழங்கல் மூலம் பங்களிக்கவும் ஊக்கமளிக்கப்படும். நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய தொழில்முனைவுக்கான ஊக்கத் திட்டத்தின் மூலம் இதற்கான களம் உருவாக்கப்பட்டுள்ளது.

நிதியுதவி, சந்தைப்படுத்தல் மற்றும் 50 மையங்களில் நடுத்தர, சிறுதொழில் நிறுவனங்களுக்கான நிதியுதவிக்கான இயக்கம் ஆகியவற்றின் மூலம் அவற்றின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும் வலுவான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தொடர்பான அமைச்சகங்கள் இதை பரவலாக எடுத்துச் சென்று ஊக்கப்படுத்தும் அதே நேரத்தில், வங்கிகள் தடைகள் ஏதுமின்றி விரைவாக கடன் மனுக்களை பரிசீலிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். கடன் மனுக்களை ஆராயும் நேரத்தைக் குறைக்கும் வகையில் நிதிசார் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டு தரமான வகையில் கடன் மனுக்கள் பரிசீலிக்கப்படும். கீழ்க்கண்டவற்றின் மூலம் நடுத்தர, சிறுதொழில் நிறுவனங்கள் கையாளப்படும்:

  • ரொக்கப்பணச் சுழற்சியை குறைப்பதற்கென அடுத்த 90 நாட்களில் பெரும் பொதுத்துறை வங்கிகள் கட்டாயமான வர்த்தகத்தில் பெற வேண்டிய தொகையை மின்னணு முறையில் தள்ளுபடி முறையில் பெறுவதற்கென பதிவு செய்யத் துவங்கும்.
  • தோல் தொழில், நெசவுத் தொழில் என குறிப்பிட்ட தொழிலுக்கான நிதியுதவி ஏற்பாடுகள்.
  • விரைவாக கடன் வசதியை வழங்கும் வகையில் வங்கிகளால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 100 திட்டங்களுக்கான முன்வடிவமைப்புகள் உருவாக்கப்படும்.
  • நடுத்தர, சிறுதொழில் நிறுவனங்களுக்குக் கடன் வழங்குவதில் வங்கிகளிடையே போட்டியை உருவாக்கும் வகையில் உதயன்மித்ரா இணைய தளம் புதிய வடிவத்தில் சீரமைக்கப்படும்.
  • அரசின் மின்னணுச் சந்தையிலும், இணைய வழியிலான வர்த்தக மேடைகளிலும் பதிவு செய்து கொள்ள நடுத்தர, சிறுதொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பது.

 

http://pibphoto.nic.in/documents/rlink/2017/oct/i2017102402.png

 

கூடுதல் கொள்திறனுள்ள, மோசமான கவனமுடைய பிரிவுகளுக்கு தீவிரமாக கடன் வழங்கியன் விளைவாக பெருமளவிலான செயல்படாத சொத்துக்களை வங்கிகள் எதிர்கொள்ள நேர்ந்தது என்பதையும் இது 2014 மார்ச் மாதத்தில் 11.9 சதவீதமாக வளர்ந்தது என்பதையும் இங்கு நினைவு கூர வேண்டும்.

வங்கிகளின் தூய்மையான, முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்ட வரவு செலவு கணக்கை தயாரிப்பதற்கென 2015இல் மேற்கொள்ளப்பட்ட சொத்துக்களின் தரம் குறித்த பரிசீலனை பெருமளவில் செயல்படா சொத்துக்கள் இருப்பதை வெளிப்படுத்தியது. இவற்றினால் எதிர்பார்க்கப்பட்ட இழப்புகள், மறுசீரமைக்கப்பட்ட கடன்களின் மூலம் நெகிழ்வுத் தன்மையின் கீழ் முன்பு வழங்கப்படாத நிலையில், செயல்படா சொத்துக்கள் என மீண்டும் வரையறுக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. செயல்படா சொத்துக்களை கண்டறிந்து தூய்மைப்படுத்த பொதுத்துறை வங்கிகள் ஊக்கமளிக்கப்பட்டு எதிர்பார்க்கப்பட்ட இழப்புகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

பொதுத்துரை வங்கிகள் ஒட்டுமொத்த செயல்படாத சொத்துக்களின் விகிதமும் 2015லிருந்து மிக வேகமாக அதிகரித்தது. 2015 மார்ச் மாதம் 5.43 சதவீதமாக (ரூ. 2,78,466 கோடி) இருந்தது 2017 ஜூனில் 13.69 சதவீதமாக (ரூ. 7,33,137 கோடி) உயர்ந்தது.  எதிர்பார்க்கப்பட்ட இழப்புக்கான ஏற்பாடுகளும் கணிசமாக வளர்ந்தது. 2014-15 லிருந்து 2017-18 முதல் காலாண்டு வரையிலான காலத்தில் ரூ. 3,79,080 கோடிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் அதற்கு முந்தைய பத்து ஆண்டு காலத்தில் ரூ. 1,96,937 கோடி அளவுக்கு மட்டுமே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இவ்வாறு பாதிக்கப்பட்ட கடன்களின் விளைவாக ஏற்படும் இழப்பீடுகளை சமாளிக்க இதுவே சரியான அணுகுமுறையாகும்.

 

Text Box: Realistic recognition of NPA
STRESSED ASSETS
Stressed Assets


http://pibphoto.nic.in/documents/rlink/2017/oct/i2017102404.png

http://pibphoto.nic.in/documents/rlink/2017/oct/i2017102405.png

Amounts in crore Rs.

 

Text Box: 4,54,671 
increase

2,78,466

 

 

~Rs. 1,75,000 cr. in just 12 cases referred to NCLT (25% of NPA)

 

 

Mar-17

 

 

http://pibphoto.nic.in/documents/rlink/2017/oct/i2017102407.pnghttp://pibphoto.nic.in/documents/rlink/2017/oct/i2017102408.png Text Box: 36%http://pibphoto.nic.in/documents/rlink/2017/oct/i2017102409.pngText Box: NPA

Government recapitalised and initiated other reforms alongside the cleaning-up exercise, to make PSBs transparent and more efficient. Bank Board Bureau was set up, and steps were taken to appoint non-Executive Chairmen in PSBs.

அரசு மறுமுதலீட்டிற்கு ஏற்பாடு செய்தது மட்டுமின்றி, அரசு  இதைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளோடு கூடவே இதர வகை சீர்திருத்தங்களையும்,   பொதுத்துறை வங்கிகள் மேலும் சிறப்பாக, வெளிப்படையாக செயல்படவும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. வங்கிகளுக்கான வாரியக் கழகம் உருவாக்கப்பட்டு பொதுத்துறை வங்கிகளில் நிர்வாக அதிகாரமில்லாத தலைவர்களை நியமிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

http://pibphoto.nic.in/documents/rlink/2017/oct/i2017102414.png

Amounts in crore Rs.

 

 

 

 

 

பொதுத்துறை வங்கிகளுக்கு மறுமுதலீடு செய்யவும், சீரமைக்கவும் என இந்திரதனுஷ் திட்டத்தை 14.08.2015 அன்று அரசு அறிவித்தது. 2018-19 வரை வங்கிகளின் மூலதனத் தேவை ரூ. 1,80,000 கோடியாக இருக்குமென அரசு எதிர்பார்த்தது. இதன்படி ரூ. 70,000 கோடியை அரசு வழங்குவது எனவும், ரூ, 1,10,000 கோடியை வங்கிகள் சந்தையில் இருந்து பெறுவது எனவும் திட்டமிடப்பட்டது. இதுவரை அரசு பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ. 51,858 கோடி மூலதனமாக தந்துள்ளது. வருடாந்திர தர ஆய்வு மற்றும் செயல்படா சொத்துக்களை கண்டறிவது ஆகியவற்றால் ஏற்பட்ட பாதிப்பினால் சந்தையிலிருந்து வங்கிகள் ரூ. 21,261 கோடியை மட்டுமே திரட்டியுள்ளன. 2015 டிசம்பரில் ரிசர்வ் வங்கி வருடாந்திர தர ஆய்வை வங்கிகளுடன் பகிர்ந்து கொள்வதற்கு முன்பாக இந்திர தனுஷ் திட்டம் துவக்கப்பட்டதன் விளைவாக வருடாந்திர தர ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட அதிகமான செயல்படா சொத்துக்கள், அதையொட்டிய ஏற்பாடுகளின் தேவை ஆகியவற்றுக்கு மத்தியிலும் பொதுத்துறை வங்கிகள் பேசல் 3ஆம் தரத்திற்கு உகந்த வகையில் வெற்றிகரமாகத் தொடர்ந்து நீடிக்க முடிந்தது. தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவும்கூட இந்திர தனுஷின் மேலாக மேலும் வளர்த்தெடுக்கப்பட உதவும்.

இவ்வாறு அடக்கி வைக்கப்பட்ட சொத்துக்கள் குறித்து தீர்வு காணவும் நெருக்கடியிலிருந்து மீளவும் வங்கிகளுக்கு உதவும் வகையில் பல சட்டரீதியான மாற்றங்களையும் அரசு மேற்கொண்டது. திவால் மற்றும் நொடிப்பு விஷயங்கள் குறித்து தீர்வு காண ஒன்றுபட்டதொரு கட்டமைப்பாக திவால் மற்றும் நொடிப்பு நிலைக்கான விதிமுறைகள் 2016 சட்டமாக இயற்றப்பட்டது. இதிலிருந்து விரைந்து மீள்வதற்கென 2002ஆம் ஆண்டின் நிதிசார் சொத்துக்களை பாதுகாப்பது, மறுசீரமைப்பது மற்றும் பாதுகாப்பு வட்டியை அமல்படுத்துவதற்கான சட்டம் (சர்ஃபேசி சட்டம்) மற்றும் 1993ஆம் ஆண்டின் வங்கிகளுக்குச் சேரவேண்டிய தொகையை மீட்பது மற்றும் நிதிசார் நிறுவனங்கள் சட்டம் (இது கடன் மீட்புத் தீர்ப்பாயங்களுக்கு அடிப்படையாக அமைகிறது) ஆகியவை 2016ஆம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்டன. மேலும் திவால் மற்றும் நொடிப்பு நிலைக்கான விதிமுறைகளின் கீழ் நொடிந்த நிலைக்கு தீர்வு காண முன்முயற்சி எடுக்க வங்கிகளுக்கு உத்தரவிட ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் வழங்கும் வகையில் 1949ஆம் ஆண்டின் வங்கி ஒழுங்குமுறை சட்டமும் இந்த ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது.

கடந்த மூன்றாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய துணிகரமான நடவடிக்கைகள் நீண்ட நாட்களாக நீடித்து வந்த பிரச்சனைகளை எதிர்கொண்டதோடு, பொதுத்துறை வங்கிகளின் வலிமையை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் வலுவான உத்வேகம் அளித்தன. வலுவான, பெரிய வங்கியை உருவாக்குவது என்ற செயல்முறை இந்திய ஸ்டேட் வங்கியை ஒன்றுதிரட்டியதிலிருந்து துவங்கியது. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள மறுமுதலீட்டுத் திட்டம் இதற்கு மேலும் உத்வேகம் அளிக்கும். இதற்கென ஒவ்வொரு பொதுத்துறை வங்கியின் வலிமையின் அடிப்படையில் தனிப்பட்ட வகையிலான அணுகுமுறை பின்பற்றப்படும்.

இதுவரை கண்டிராத வகையில் மறுமுதலீட்டு ஏற்பாடுகள், இன்று அறிவிக்கப்பட்ட முன்முயற்சிகள் ஆகியவை கூடிய விரைவிலேயே எளிதில் உணர்ந்துகொள்ளக் கூடிய தாக்கத்தை வெளிப்படுத்தும் என்றும், பொருளாதார செயல்பாடு, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை வேகப்படுத்துவதில் பங்களிப்பு செலுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

V. வலுவான பொருளாதார வளர்ச்சி முன்னே

ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியின் அடிப்படையில் கணக்கிடப்படும் பொருளாதாரத்தின் உண்மையான வளர்ச்சி என்பது தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருவதைத் தெரிவிக்கிறது. அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளில் நிலவிய 5.9 சதவீத வளர்ச்சி என்பதை ஒப்பிடும்போது 2014-15 க்கும் 2016-17க்கும் இடைப்பட்ட காலத்தில் இது சராசரியாக 7.5 சதவீதமாக இருந்தது. கடந்த சில காலாண்டுப் பகுதிகளில் இதில் ஓரளவு குறைவு ஏற்பட்ட போதிலும் கிடைக்கும் அறிகுறிகள் அனைத்துமே இது தற்காலிகமான ஒரு பின்னடைவுதான் என்றும் இந்தச் சரிவு அதன் அடிமட்டத்தைத் தொட்டுவிட்டதாகவே தோன்றுகிறது. எனவே ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மீண்டும் எழத் துவங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

விவசாயம், கூட்டுறவு மற்றும் விவசாய நலனுக்கான துறையினால் அறிவிக்கப்பட்டுள்ள 2016-17க்கான உணவு தானிய உற்பத்தி குறித்த 4வது முன் மதிப்பீடுகளின்படி ஒட்டுமொத்த உணவுதானிய உற்பத்தி 275.7 மில்லியன் டன்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டின் ஒட்டுமொத்த உணவு தானிய உற்பத்தியான 251.6 மில்லியன் டன்களை விட 9.6 சதவீதம் அதிகமாகும். 2017-18ஆம் ஆண்டிற்கான முதல் முன்மதிப்பீட்டின்படி கரீப் பருவத்திற்கான உணவு தானிய உற்பத்தி 134.67 மில்லியன் டன்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2016-17ஆம் ஆண்டிற்கான 4வது முன் மதிப்பீட்டின்படி இது 138.52 மில்லியன் டன்களாக இருந்தது.

உலகளாவிய பொருளாதார நிலைமை தணிந்த நிலையில் இருந்த போதிலும், அதன் விளைவாக இந்தியாவின் ஏற்றுமதிக்கான தேவை குறைந்த அளவிலேயே உள்ள நிலையிலும், (திருத்தப்பட்ட தொழில் உற்பத்திக்கான அட்டவணையின்படி) 2015-16இல் 3.3 சதவீத வளர்ச்சி கண்டிருந்ததை ஒப்பிடுகையில் 2016-17இல் தொழில் உற்பத்திக்கான அட்டவணை 4.6 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. 2017 ஏப்ரல் –ஆகஸ்ட் காலப் பகுதியில் பொதுவான தொழில் உற்பத்திக்கான அட்டவணையின் வளர்ச்சி 2.2 சதவீதமாக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டு இதே காலப்பகுதியில் இது 5.9 சதவீத வளர்ச்சியாக இருந்தது. அதே நேரத்தில் ஜூன் மாதத்தில் (-)0.2 சதவீதம் மற்றும் ஜூலை மாதத்தில் 0.9 சதவீதம் என்ற நிலையிலிருந்து 2017 ஆகஸ்ட் மாதத்தில் இந்த வளர்ச்சி 4.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.  பயணிகள் வாகன விற்பனை வளர்ச்சி 2017 செப்டெம்பரில் 11.3 சதவீதமாகும். இது ஏப்ரல்-செப்டெம்பரில் 9.2 சதவீதமாக இருந்தது. அதைப் போன்றே வணிகரீதியான வாகன விற்பனையும் 2017 செப்டெம்பரி 25.3 சதவீதமாகவும் 2017 ஏப்ரல்-செப்டெம்பர் காலப்பகுதியில் 6 சதவீதமாகவும் இருந்தது என்பதையும் இங்கே குறிப்பிடலாம்.

 

http://pibphoto.nic.in/documents/rlink/2017/oct/i2017102415.png

உண்மையான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி

1.    கடந்த மூன்றாண்டுகளில் உண்மையான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி சராசரியாக 7.5 சதவீதமாக இருந்தது.

2.    2015-16ஆம் ஆண்டில் 8.2 சதவீத வளர்ச்சியை எட்டியது.

3.    பொருளாதாரத்தின் தற்காலிக மந்தநிலை அடிமட்டத்தை எட்டிவிட்டது.

4.    வரும் காலத்தில் மேலும் வேகமாக வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2017 அக்டோபர் மாதத்தில் வெளியான சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எஃப்) மதிப்பீட்டின்படி 2017ஆம் ஆண்டில் 6.7 சதவீதமாகவும், 2018ஆம் ஆண்டில் 7.4 சதவீதமாகவும் இந்தியாவின் வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டில் இந்தியாவில் வளர்ச்சி 8.2 சதவீதமாக உயரும் எனவும் ஐஎம்எஃப் முன்னறிவித்துள்ளது. 2016ஆம் ஆண்டில் சீனாவின் வளர்ச்சி 6.7 சதவீதமாக இருந்தது. இது 2017ஆம் ஆண்டில் 6.8 சதவீதமாகவும், 2018ஆம் ஆண்டில் 6.5 சதவீதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் காலாண்டுகளிலும் ஆண்டுகளிலும் வலுவான வளர்ச்சியை நோக்கிய பாய்ச்சலாக நமது வளர்ச்சி இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது ஐ எம் எஃப்-பின் முன்னறிவிப்புகளை விட சிறப்பானதாகவும் கூட இருக்கக் கூடும்.

*  *  *  *  *



(Release ID: 1507741) Visitor Counter : 689


Read this release in: English